Sunday, March 3, 2013

அன்றொரு நாள்: டிசம்பர் 12 தர்பார்! கபர்தார்!




அன்றொரு நாள்: டிசம்பர் 12 தர்பார்! கபர்தார்!
13 messages

Innamburan Innamburan Mon, Dec 12, 2011 at 11:18 AM

To: mintamil , thamizhvaasal
Cc: Innamburan Innamburan

அன்றொரு நாள்: டிசம்பர் 12
தர்பார்! கபர்தார்!

கரீக்ட்டா இன்னிக்கு நூறு வருஷம் ஆயிடுத்து, மாரியப்பா! சொல்லி வச்சமாதிரி 11 11 ’11 அன்று பக்கிங்காம் அரண்மணையிலிருந்து, குஞ்சும், குளவானுமாக, காலை பிடிக்கறவன், கையை பிடிக்கறவள் எல்லாரும் கூட வர, மிலிடரி புடை சூழ, சம்ச்சா, சம்ச்சிகள் வால் பிடிக்க,கூஜாக்கள் வலம் வர, மாட்சிமை தங்கிய சக்ரவர்த்தி தாடி மவராசாவும், பட்டமகிஷி மேரி மாமியும், லோக்கல் நாதமுனி பேண்ட் இங்கிலீஷ் நோட் வாசிக்க, சாரட் வண்டிலெ விக்டோரியா ஸ்டேஷன் வந்தாங்களா!. ‘குப்’ ‘குப்’ னு கரும்புகை கக்கிக்கிணே, நாலு மைல் வட்டாரத்தெலெ கேக்றாப்லே ஊதிக்கிணு, ரயில் வண்டியும் நம்ம வீட்டுக்குப் பக்கத்திலெ இருக்கற போர்ட்ஸ்மத் ஹார்பெர்லெ (திரு.நரசைய்யாவுக்கு தெரியும்) அவுகளை கொண்டு வந்து விட, ‘மெடினா’ என்ற அழகிய கப்பலில் ( கப்பல்லெ கூட அழகு உண்டா என்ன? ஒடிசா பாலுவெ கேட்டா, ஆமாம்பாரு.) மெடினா பாண்டு கோஷ்டி கானம் ஊத, ராசாவும் ராணியும், தொப்பியை களட்டிப்பிட்டு தூங்கிப்போய்ட்டாஹ. உண்ட களைப்பு. உண்டதோட, ‘க்ளுக்’ க்ளுக்’னு தண்ணி போட்டாங்களா. அது வேற ஆளை அமுக்கிடிச்சு. தெனோம் ஆட்டம் பாட்டம் தான். ஒரு பாடா எகிப்து வந்தாங்களா. லோக்கல் ராசா, பாஷா, கிச்சனரு, பிரபுக்கள் எல்லாரும் வந்தாஹ. கும்மாளமெல்லாம் போட்டு முடிஞ்சப்றம், மெடினாவும் பாம்பே (அதான்ப்பா மும்பை) நோக்கி மிதந்தாளே. அப்போலோ பந்தர் (பந்தர்னா குரங்கு. இல்லைங்கலெ. பந்தர்னா துறைமுகம் என்றும் அர்த்தம். கணேசனாருக்கு ஐயமெழுந்தால், தேவ்விடம் கேட்கலாம்.) வந்ததும், கோலாகலமான வரவேற்பு. அது இன்னாடா, பீரங்கியாமே? ‘தொப்’ ‘தொப்’னு குண்டு போடுது. அது தான் ராஜமரியாதையாம். காது ஜிவ்வு கிளிஞ்சு போச்சுடா, கண்ணா. பம்பாயி இம்மாம் பெரிய பட்டணம். லச்சுமி கோயில் இருக்கா. தெருவெல்லாம் காசு கொட்டிக்கிடக்குமாம்லெ. மூட்டை மூட்டையா காசு. நம்ம பார்ட்டி சொகுசா சில நாட்கள் அங்கே கொஞ்சி குலாவினாகளா, அப்றம் ரயிலேறி டில்லிக்கு போனாஹ.

டிசம்பர் 12, 1911 அன்று அங்கே, காரனேஷன் மைதானம் என்ற இடத்தில் தர்பார் ஒரே தடபுடல் போ. படோடாபம்னு சொல்லாதெடா, நிலக்கரி நாக்கு. எல்லாமே ஸூப்பருடா. சொல்லுக்கடங்கா சண்டியர் பசங்க. ஆனை, குதிரே, ஃபீட்டன் வண்டி (என்னா பேச்சுபேசறெ, வடிவு. ஜட்கா வண்டி இல்லெடீ. ஷோக்கு வண்டி. ரண்டுப்பக்கமும் லாந்தர் விளக்கு, அலங்காரமா. போட் மாதிரி இருக்கும். சர்க்கஸ்க்காரன் சைகிள் சக்ரம் மாதிரி, இம்மாம் பெரிசு சக்ரம். கலர் படம்லாம் வரஞ்சு இருப்பாஹ. நாலு குதிரை, அடீ, வடிவு.  ஹூக்கும்! எல்லாம் அரபிக்குதிரை. எல்லா ராசா ராணியெல்லாம் வந்திருந்தாஹ. ஆம்பளையெல்லாம் பொம்பளெ மாதிரி ஜரிகையும், பட்டுமா, கவுனு. நம்ம பேட்டை ரவுடி மாதிரி ஜ்வெல்லரி ~ சங்கிலிகள், தோடா, தோடு, பதக்கம், தலைப்பாலெ வைரம், வைடூர்யம். கும்பிடு போடத்தானெ வந்திருக்காஹ. எதுக்குன்னு கத்தியும் கப்டாவும்! எல்லாம் ஃபில்ம்லெ காட்றாஹ. ஆனாப்பாரு. பரோடா மவராசா தான் விறைப்பா நின்னாராம்.  மத்த இஸ்பேட்டு மாதிரி, வணங்கிய திருக்கோலமா பின்னடை நடக்கல்லையா. ஜார்ஜ் மவராசாவுக்கு பத்திக்கிணு வந்ததாம். 

நமக்கென்னடா, அங்க ஜோலி? பாத்தோமோ, வந்தோமான்னு இருக்குணும். ராசா நேபாலுக்கு போயிட்டாரு. புலி சுட. ராசாவாச்சே, பினாமி கூட வச்சுக்லாம், சுடறத்துக்கு. ராணியம்மா ஆக்ரா போயி தாஜ் மஹால்லெ கும்பிட்டுப்பிட்டு ( ஒரு பேச்சுக்கு சொன்னேண்டா, பேமானி. சமாதினா கும்பிட்ணுமில்லெ.) ஜெய்ப்பூர் போனாங்களா, அந்த ஊர் ராசா. நாங்களெல்லாம் தோல்வியூர் என்று அடக்கமா சொல்லிட்டு!, பள பளா கத்தியை தொரசானியம்மா காலடிலெ வச்சு கும்பிட்டாருமெல. கூட வந்த தொரைமார் எல்லாம் மெச்சிக்கிட்டாஹ. 

போதும்! போதும்! என்று நீங்கள் அலறுவது காதில் விழுகிறது. இது நிற்க. வரலாற்றை பார்ப்போம்.இது மூன்றாவது கலோனிய ராஜ தர்பார். 1876, 1903 & 1911. 1911வது தர்பாரில் தான் சக்ரவர்த்தி தரிசனம். நேரில் வந்து ராஜமரியாதைகளை ஏற்றுக்கொண்டது. ஒரு விஷயம் கவனிக்கப்படவேண்டும். இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனியை ஒடுக்கி, விக்டோரியா மஹாராணி இந்தியாவின் சக்ரவர்த்தினியாக பிரகடனம் செய்த இருபது வருடங்களுக்குள், 1876ம் வருட தர்பாரிலேயே, துல்லிய கதராடை அணிந்திருந்த கணேஷ் வாசுதேவ் ஜோஷி அவர்கள், ‘மஹாராணியிடம் நாங்கள் கேட்பது எல்லாம், உங்களுடைய பிரிட்டீஷ் மக்களுக்கு இருக்கும் அரசியல்/சமூக அந்தஸ்து இந்தியர்களுக்கும் அளிக்க வேண்டும் என்பதே...’.
இந்த கோரிக்கை இந்திய விடுதலை நாடும் கோரிக்கைகளில் முதன்மையானது என்று பாரதீய வித்யாபவனம், ஒரு குறிப்பில், கூறுகிறது. வரலாறு மேலும் சொல்வது, இந்த நிகழ்வுடன் ஒருசேர நிகழ்ந்த திருப்புமுனை, இந்தியாவின் ராஜதானி, கல்கத்தாவிலிருந்து டில்லிக்கு மாறியது. 
சரி. நூறு வருடம் கழித்து 2011க்கு வருவோம். 
பக்கிங்ஹாம் அரண்மனை:
தாடிராசா ஜார்ஜின் பேத்தி எலிசபெத் II தான் ராணி.
ஒரு முக்கியமான நிகழ்வு. ஒன்லி வீ.ஐ.பி.கள்.
நம்ம தமிழ்நாட்டு பையரொருவர் கடமை ஆற்றுகிறார்.
ராணியின் கணவர் விண்ட்ஸர் கோமகன் (90 வயது) அவருடன் சகஜமாக சம்பாஷிக்கிறார். 1911ல் இவருடைய கொள்ளுத்தாத்தா மவராசாவோட குதிரை காஸ்தாரியிடம் பேசியிருக்கமுடியுமா!?
குறிப்பால் உணர்த்துவது யாதெனில்: இங்கிலாந்தில் சமத்துவம் தலை தூக்குகிறது. இந்தியாவில் தற்கால ராசாக்கள் ‘கபர்தார்’ தர்பார் நடத்த விழைகிறார்கள். பார்க்கலாம்.

டில்லி தர்பாரை சாக்கிட்டு, மின் தமிழரன்பர்கள் யாவருக்கும் விழாக்காலத்து வாழ்த்துக்கள். 

இவ்வருடத்தின் எஞ்சிய நாட்களில் இன்பம் பொங்குக. 

2012 வருட புத்தாண்டு வாழ்த்துக்கள். பொங்கிய இன்பம் பெருக்கெடுத்து திளைக்கட்டும், 

வருஷம் முச்சூடும். அதற்கு பிறகு, என்றென்றும். 

துரை படம் போடுவாருங்க.  

இன்னம்பூரான்
12 12 2011
கொசுறு:
New Delhi, Dec 12 (PTI) The Lok Sabha today congratulated citizens on the completion of 100 years of Delhi as the national capital. On the occasion, Speaker Meira Kumar conveyed the best wishes of the House to the people in their march towards prosperity and all-round development. "The nation celebrates 100 years of the return of capital of the country to Delhi from Calcutta. It was on December 12, 1911 that Delhi was proclaimed as the new capital of India at the Delhi Durbar," Kumar said. She said Delhi has emerged to become the largest metropolis by area and the second largest by population in the country. "Delhi is not only one of the greenest capitals in the world but also boasts of world class infrastructure and many heritage buildings," Kumar said.

img574.jpg



உசாத்துணை:
Narrative of the visit to India of their majesties King George V and Queen Mary
and of the coronation Durbar held at Delhi 12th December, 1911.
Retrieved on 12 12 2011 from:



Geetha Sambasivam Mon, Dec 12, 2011 at 1:22 PM

To: thamizhvaasal@googlegroups.com
Cc: mintamil , Innamburan Innamburan
அடைப்புக்குறிக்குள்ளே அட்டகாசம் போங்க!  தர்பாரில் கலந்து கொண்டேன்.  நன்றி.

துரையோட படத்துக்கு வெயிட்டிங்.   முன்கூட்டிய வாழ்த்துகளை நானும் சொல்லிக்கிறேன்.

2011/12/12 Innamburan Innamburan <innamburan@gmail.com>

அன்றொரு நாள்: டிசம்பர் 12
தர்பார்! கபர்தார்!



யதார்த்தா கி.பென்னேஸ்வரன்Mon, Dec 12, 2011 at 3:25 PM

Reply-To: thamizhvaasal@googlegroups.com
To: thamizhvaasal@googlegroups.com
இ சார்

டெல்லி தர்பார் குறித்த ஒரு பழைய புகைப்படம் எங்கோ எப்போதோ பார்த்தேன்.

மஹாராஜா-ராணி சிங்காதனத்தில் வீற்றிருக்க ஒரு ஐந்து இந்திய இளவரசர்கள் பக்கவாட்டில் தரையில் குந்தி இருப்பார்கள்.


Ahmed Ali எழுதிய Twilight in Delhi வாசித்து இருக்கிறீர்களா?  அந்த நாவலுக்கு ஏறத்தாழ 60 வயசு.  42ல் எழுதி பாகிஸ்தானில் தடை செய்யப்பட்டு ரொம்ப வருஷங்கள் கழித்து இந்தியாவில் வெளியிடப்பட்ட நாவல்.

அந்த நாவலில் இந்த தர்பார் பற்றி ஒரு அத்தியாயம் இருக்கும்.  ரொம்பவும் சுவாரசியமாக இருக்கும்.
நம்முடைய ஜாதகத்தை அந்தக் கணத்தில் எழுதி வைத்த மஹானுபாவர்கள் அவர்கள்.

எங்காவது சுட முடிந்தால் விரைவில் அனுப்புகிறேன்.  யாருக்காவது கிடைத்தாலும் பகிர்ந்து கொள்ளலாம்.

அன்புடன்

பென்
--------------------------------------------------------------------------------------------------------------------

Innamburan Innamburan Mon, Dec 12, 2011 at 6:23 PM
To: thamizhvaasal@googlegroups.com
அப்பாடா! 'பென்' வந்தாலும் வந்தார்; தமிழ்வாசலில் ஒருவராவது 'அன்றொரு நாள்' படிக்கிறாப்லெ. அந்த நாவல் படிச்சிருக்கேன், பென். நான் கொடுத்த உசாத்துணை கூட நல்ல நூல். இந்தியாவை மருவாதையுடன் பார்க்கிறது.


2011/12/12 யதார்த்தா கி.பென்னேஸ்வரன் <penneswaran@gmail.com>

இ சார்

டெல்லி தர்பார் குறித்த ஒரு பழைய புகைப்படம் எங்கோ எப்போதோ பார்த்தேன்.

விஜயராகவன் Mon, Dec 12, 2011 at 10:46 PM

Reply-To: mintamil@googlegroups.com
To: மின்தமிழ்
It is a shame that hardly anyone in New Delhi wants to celebrate
Delhi's 100 years as India's capital. Shame on you Delhites, show some
spirit.

http://www.bbc.co.uk/news/world-asia-india-16134761

the centenary has been largely ignored by Indians, and the majority of
the capital's main newspapers did not carry the news on their front
pages on Monday.

'Elitist'

Many Delhi residents have questioned the celebrations, saying the
authorities are not doing enough to improve amenities.

"Having seen the city change over the years and lose its values, I
find the idea of [such] celebration elitist and not connected to the
needs of the people," senior architect and town planner Kuldip Singh
told The Hindu newspaper.



Vijayaraghavan




On Dec 12, 12:18 pm, Innamburan Innamburan <innambu...@gmail.com>
wrote:
[Quoted text hidden]
> இந்த கோரிக்கை இந்திய விடுதலை நாடும் கோரிக்கைகளில் முதன்மையானது என்று பாரதீய ...


செல்வன் Tue, Dec 13, 2011 at 2:24 AM

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com


[Quoted text hidden]

செல்வன் Tue, Dec 13, 2011 at 5:13 AM

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
தர்பாரின் விடியோ பதிவு இதோ. 



புகைப்படம்
Delhi_durbar_1911,%20595.jpg
[Quoted text hidden]

rajam Tue, Dec 13, 2011 at 5:23 AM

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com

அந்தக் காலத்தில் விடியோ பதிய முடிந்ததா?
[Quoted text hidden]
[Quoted text hidden]

செல்வன்Tue, Dec 13, 2011 at 5:59 AM

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com


2011/12/12 rajam <rajam@earthlink.net>
அந்தக் காலத்தில் விடியோ பதிய முடிந்ததா?




சினிமாவாக எடுத்துள்ளார்கள் அம்மா.அதை யுடியூபில் ஏற்றியுள்ளார்கள்
[Quoted text hidden]

Innamburan Innamburan Tue, Dec 13, 2011 at 6:09 AM

To: mintamil@googlegroups.com

நன்றி பல. மேலும் பலர் எழுதும் போது சுவை கூடுகிறது.  அந்தக்காலத்தில் கலோனிய மெய்கீர்த்தியாளன் இந்தியாவின் புகழ் பாடியதை பற்றி, முடிந்த போது எழுதுகிறேன்.
நன்றி, வணக்கம்,
இன்னம்பூரான்
[Quoted text hidden]

Vij Tue, Dec 13, 2011 at 7:45 AM

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com

Delhi is the capital of Modern India in both senses of ‘modern’ and ‘India’ for 100 years. The day it became so is precisely known.
Earlier it was capital of Mughals, Sultanate, etc did not comprise the whole of India.  Officially those entities were not known as India
VCV
Sent: Tuesday, December 13, 2011 3:24 AM
Subject: Re: [MinTamil] Re: அன்றொரு நாள்: டிசம்பர் 12 தர்பார்! கபர்தார்!


Dhivakar Tue, Dec 13, 2011 at 8:50 AM

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
Delhi became capital to British India in 1911, shifting from Kalkata.

Innamburan Iyya/ Selvan,

AK Chettiyar has taken this Dharbar as cinema. Incidentally, he is the first Tamilian who took it in film role too.

After becoming Emperor (he was told like that as many small kings were lining up in the queue with the costly presentations) King George went to Hunting in Uttarkhand, UP forests up to Nepal for some days. 

When I have seen the photograph of presentations by Indian Kings at British Library, Chennai, I remember Kalingattu Parani scene, where many chota kings lined up with presents for the emperor Kulottunga-1 at Kanchi during 1100 CE (around).

Dhivakar



Innamburan Innamburan Tue, Dec 13, 2011 at 10:15 AM
To: mintamil@googlegroups.com
நன்றி, திவகார்,
'... ஆம்பளையெல்லாம் பொம்பளெ மாதிரி ஜரிகையும், பட்டுமா, கவுனு. நம்ம பேட்டை ரவுடி மாதிரி ஜ்வெல்லரி ~ சங்கிலிகள், தோடா, தோடு, பதக்கம், தலைப்பாலெ வைரம், வைடூர்யம். கும்பிடு போடத்தானெ வந்திருக்காஹ. எதுக்குன்னு கத்தியும் கப்டாவும்! எல்லாம் ஃபில்ம்லெ காட்றாஹ. ஆனாப்பாரு...' என்று நேற்று நான் எழுதியதை, அன்றே நம்ம ஏகேசி ஃபில்ம் எடுத்திருக்காரு!  பரோடா மவராசா மட்டும் கொஞ்சம் 'தில்லா' இருந்தாரு.அந்த படத்தை போட்றேன். இந்த மண்டியிட்ட மன்ன்ர் பிரான்கள் எல்லாருமா சேந்து, பாடியாலா மவராணி மூலமாக, அகில இந்திய மாதர்கள் சார்பில் (?) ஒரு இம்மாம் பெரிய நகையை பட்டமகிஷிக்கிட்ட தானம் வாத்தாஹ. தர்பாரில் முதல் பதக்கம் 'ஸ்டார் ஃஃப் இந்தியா'! அதை மவராசா பட்டமகிஷிக்கு, கன்னத்தில் முத்தமிட்டு, சூட்ட, அவளும் 'அண்ணலின்' கன்னத்தில் முத்தமிட்டாள். காணாது கண்டது போல, சபையோரும் ஆரவாரம் செய்தனர். 
சுபம்.
இன்னம்பூரான்
[Quoted text hidden]

No comments:

Post a Comment