Friday, March 22, 2013

அன்றொருநாள்: மார்ச் 22 மயிலும் ஒயிலும்




அன்றொருநாள்: மார்ச் 22 மயிலும் ஒயிலும்
12 messages

Innamburan Innamburan Wed, Mar 21, 2012 at 6:05 PM
To: mintamil , thamizhvaasal

அன்றொருநாள்: மார்ச் 22
மயிலும் ஒயிலும்
திருமலை வாசி ஏழுமலையானின் இல்லத்துக்கு பளபளவென்று மின்னும் தங்க விமானம். வேலூரில் கோயிலில் ஆணி கூட பொன்னாணி. அம்ருதசரஸில் பொன்னாலயம். இவையெல்லாம் ஸ்தாவர (அசையா) சொத்துக்கள். சங்க்மர்மர் (சலவைக்கல்) தாஜ் மஹால் கூட ஸ்தாவரம் தான். திருமலையானின் புராதன நகை நட்டுக்காணோம் என்று ஒரு குரல் கேட்டது. வேலூரின் வரவு மர்மம், வருமான வரி பிரச்னை என்றெல்லாம் காதில் விழுந்தது. அம்ருதசரஸில் ராணுவம் நுழைய வேண்டிருந்தது. இத்தனை ஆட்டங்கள் கண்டாலும் அசையா சொத்துக்கள் அசையவில்லை. யதா ஸ்தானம் பிரதிஷ்டயாமி. இன்றைய கதாநாயகம் (அஃறிணை) ஒரு ஜங்கம (அசையும்) சொத்தை பற்றி. அதன் மதிப்பு தாஜ்மஹாலை விட இரட்டிப்பு. இன்றைய மதிப்பீடு கிட்டத்தட்ட 2000 மிலியன் டாலர். போய்டுத்தே! அடிச்சுண்டு போய்ட்டானே! குரங்கு பூமாலையை பிச்சுப்போட்டாப்லெ, குதறிப்போட்டுட்டாண்ங்களே, படு பாவிகள்! 
சார்! சொத்தாவது பத்தாவது! அதெல்லாம் நிற்காது, ஸ்வாமி. எங்க தாத்தாவுக்கு ஏழு கிராமம் இருந்தது. நான் இருக்கிறது ஒண்டு குடித்தனம். சிரம ஜீவனம். அதான், இந்த ஜோடி வளையலை (அபரஞ்சித்தங்கமாக்கும்) அடகு பிடிச்சுண்டு, ஒரு ஆயிரம் ரூபாய் தரேளா? பேரனுக்கு கேஜி சீட் கிடச்சிருக்கு. இது அன்றாடம் காய்ச்சியின் பேச்சு. ஒரு கருப்புப்பணம்வாலா சொல்றாரு, ‘முதல் கோடி பண்ணிவிட்டால், முப்பது கோடி “தானே’ ஓடோடி வரும்.’ சரி, இதற்கும் ஒயிலான மயிலுக்கும் என்ன சம்பந்தம்? பாயிண்ட் மேட். சும்மா இழுத்துப்பார்த்தேன், காலேஜ் பரிக்ஷையில் பக்கம் நிரப்பற மாதிரி. போர் அடிக்கிறதா? விஷயத்துக்கு வாரேன்.
1.15 டன் பொன்னை உருக்கி, ஜோடி,ஜோடியாக, மயில்கள் ஒயிலாகத் தாங்கும் ராஜ தர்பார் நாற்காலி ( அதை எப்படி சிம்மாசனம் என்று சொல்வது?) மயிலாசனமாக செய்து, அகமகிழ்ந்தான், ஜிலே -இ-இலாஹி (‘ஆண்டவனின் நிழல்’). நிழலுக்கும் தன்னருமை சாற்றும் ஆசை இருக்காதா, அது நப்பாசையாகவோ, தப்பாசையாகவோ இருந்தாலும்? ஒரு நிழலாசனம் செய்ய ஆணையிட்டான். பொக்கிஷத்திலிருந்த வைரம், வைடூரியம், மரகதம், நீலம், ரூபி, ஆகிய நவரத்னங்களும், நன்முத்துக்களும், தங்கக்கட்டிகளும் போதாது என்று, அவை மேலும், மேலும் வரவழைக்கப்பட்டன; எல்லாம் வரிப்பணம் தான். பட்ஜெட் போட்டாஹ, செஞ்சாஹ. பத்தடி நீளம், எட்டடி அகலம், பதினைந்தடி உயரம், பனிரெண்டு பச்சைக்கல் தூண்கள், ஒவ்வொன்றின் தலைமாட்டில் இரட்டை ‘இறகு போடாத’ மயில்கள். நடுவில் மரம்.  நவரத்னங்கள் எங்கெங்கும் ஜொலித்தன. கோஹினூர் (186 காரட்), அக்பர் ஷா (95 காரெட்), ஷா (88.77 காரெட்்), ஜஹாங்கீர் (83 காரட்),டைமூர் ரூபி (283) ஆகியவை போதாது என்று, கெய்ட்ஸி என்ற ஆஸ்தான கவிஞரின் மெய்கீர்த்தி (பொய் தான்) ஒரு பச்சைக்கல்வெட்டில் பதிக்கப்பட்டது.
மொகலாய சக்ரவர்த்தி ஷாஜஹான் மார்ச் 12, 1635 அன்று மயிலாசனத்தின் மூன்று படிகள் ஏறி, ‘ஆண்டவனின் நிழலாக’, அதில் அமர்ந்தார். ஆனால் 1658ம் ஆண்டு பதவி பறி போனது. அருமை மைந்தன் ஒளரங்கசீப்பு அப்பனை சிறையில் தள்ளி, உடன் பிறந்தோரை ஒழித்துக்கட்டி, கிடுகிடுவென்று படியேறினான். 49 வருடங்கள் ஆண்டு மடிந்தான், 1707ல்.  டைமூர், ஜெங்கிஸ்கான், முகம்மது கஜினி ஆகியோரின் ‘கொள்ளையடிக்கும் மரபணுவை எப்படியோ கிரஹித்துக்கொண்ட, பெர்சிய(இன்​றைய ஈரான்) மன்னனும், தீவட்டிக்கொள்ளைக்காரனும் ஆன நாதிர் ஷா, 1739ல் அன்று டில்லையை குலைத்து, இன்றைய மதிப்பில் எட்டு பிலியன் டாலர் விலை போகும் ஸ்தாவர ஐஸ்வர்யங்களை, அள்ளிக்கொண்டுப் போனான். மார்ச் 22ம்தேதி அடித்துக்கொண்டு போனது இந்த மயிலாசனம். எட்டு வருஷங்களில், அவனது உயிரும் போச்சு; மயிலாசனமும் போச்சு. குர்திஷ் பழங்குடிகளுடன் போர். இந்திரா காந்திக்கு ஆன மாதிரி, இவனுடைய மெய்க்காப்பாளர்களே, இவனை கொன்று விட்டனர். மயிலாசனம் உடைக்கப்பட்டு, குடைத்து நோண்டப்பட்டு, உடைந்தாசனமாயிற்று. பிற்காலம், போலி மயிலாசனங்கள் ‘கான மயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாக பாவித்தது’ போல் தானும்தன் பொல்லாச் சிறகைவிரித்து ஆடின’.
இன்னம்பூரான்
22 03 2012
Inline image 1

உசாத்துணை:

Mohanarangan V Srirangam Wed, Mar 21, 2012 at 6:25 PM
Reply-To: thamizhvaasal@googlegroups.com
To: thamizhvaasal@googlegroups.com
Cc: mintamil
ஒரு நாயகமாய் ஓட உலகுடன் ஆண்டவர், 
கருநாய் கவர்ந்த காலர், சிதைகிய பானையர், 
பெருநாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர், திருநாரணன் தாள் காலம் பெறச் சிந்தித்து உய்ம்மினோ ! 

---- நம்மாழ்வார் அருளிய இந்தப் பாசுரத்திற்கு அமைந்த வியாக்கியானம் விசேஷமானது. 

ஆயினும் அதையெல்லாம் இங்கு விரித்தால் இன்னம்பூரார், 

‘கஷ்டப்பட்டு நான் எல்லார் கவனத்தையும் என் பக்கம் சேமித்து வைத்துக் கொண்டால் நீ வந்து திசை திருப்புகிறாயோ..’ என்று கோபித்துக் கொள்வார். இந்த இடுகையின் தொனி இந்தப் பாசுரத்தை ஞாபகப் படுத்தியது அவ்வளவே. 

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 



Innamburan Innamburan Wed, Mar 21, 2012 at 6:34 PM
To: thamizhvaasal@googlegroups.com
அஹோ பாக்யம்! தன்யனானேன். பெரிய வார்த்தைகள் சொல்லி எம்மை புளகாங்கிதம் கொள்ள வைத்து விட்டீர். நீர் அறியாததா? சினம் கொள்வதை அறவே ஒழித்த மாணாக்கன் யான் என்பது நீவிர் அறிந்ததே, ஶ்ரீரங்கம் மோஹன ரங்கா. அதா அன்று. யார் திசை மாற்றினாலும், போர்ட்ஸ்மத் சுக்கான் என் கையில்.
‘தொனி’ என்று அடித்தால், ‘தீனி’ என்று அடிக்கிறது, இந்த மிஷின்!
‘தொனி’ இன்னம்பூரான்
[Quoted text hidden]

Subashini Tremmel Wed, Mar 21, 2012 at 8:57 PM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
Cc: Subashini Kanagasundaram


2012/3/21 Innamburan Innamburan <innamburan@gmail.com>
அன்றொருநாள்: மார்ச் 22
மயிலும் ஒயிலும்
..
மொகலாய சக்ரவர்த்தி ஷாஜஹான் மார்ச் 12, 1635 அன்று மயிலாசனத்தின் மூன்று படிகள் ஏறி,
 

‘ஆண்டவனின் நிழலாக’, அதில் அமர்ந்தார். ஆனால் 1658ம் ஆண்டு பதவி பறி போனது. அருமை மைந்தன் ஒளரங்கசீப்பு அப்பனை சிறையில் தள்ளி, உடன் பிறந்தோரை ஒழித்துக்கட்டி, கிடுகிடுவென்று படியேறினான். 49 வருடங்கள் ஆண்டு மடிந்தான், 1707ல்.  டைமூர், ஜெங்கிஸ்கான், முகம்மது கஜினி ஆகியோரின் ‘கொள்ளையடிக்கும் மரபணுவை எப்படியோ கிரஹித்துக்கொண்ட, பெர்சிய(இன்​றைய ஈரான்) மன்னனும், தீவட்டிக்கொள்ளைக்காரனும் ஆன நாதிர் ஷா, 1739ல் அன்று டில்லையை குலைத்து, இன்றைய மதிப்பில் எட்டு பிலியன் டாலர் விலை போகும் ஸ்தாவர ஐஸ்வர்யங்களை, அள்ளிக்கொண்டுப் போனான். மார்ச் 22ம்தேதி அடித்துக்கொண்டு போனது இந்த மயிலாசனம். எட்டு வருஷங்களில், அவனது உயிரும் போச்சு; மயிலாசனமும் போச்சு. குர்திஷ் பழங்குடிகளுடன் போர். இந்திரா காந்திக்கு ஆன மாதிரி, இவனுடைய மெய்க்காப்பாளர்களே, இவனை கொன்று விட்டனர். மயிலாசனம் உடைக்கப்பட்டு, குடைத்து நோண்டப்பட்டு, உடைந்தாசனமாயிற்று. பிற்காலம், போலி மயிலாசனங்கள் ‘கான மயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாக பாவித்தது’ போல் தானும்தன் பொல்லாச் சிறகைவிரித்து ஆடின’.
அருமையான விளக்கம்.  எவ்வளவு கோடிகளைக் குவித்தாலும் எதுவும் நிரந்தரமில்லை. 

சுபா
 
இன்னம்பூரான்
22 03 2012


உசாத்துணை:



renuka rajasekaran Wed, Mar 21, 2012 at 9:03 PM
To: Innamburan Innamburan

ஐயா 
மீண்டும் மீண்டும் படிக்கவைக்கும் மட்டற்ற இன்பம் தந்தீர்!
இந்த உமது படைப்பை ஒவ்வொரு முறை படிக்கும்போதும் புதுப் புது இன்பம் நுகர்கின்றேன்!
ஐயா உங்கள் hybrid மொழி தரும் சுகானுபவம் பேரானந்தம் 
மொழி நடந்தால் அதனை உரை நடை என்பர் - அது நடனமாடினால் கவிதை என்பர் 
இங்கு மொழி பறந்து -உயர்ந்து -விரிந்து - வியாபிக்கும் ஏகாந்தம் தெரிகிறது 
அடுத்த உங்கள் "வாக்கிற்காய்" எதிப்பார்ப்புடன் காத்திருக்கிறேன்
நன்றி ஐயா 
[Quoted text hidden]
--
Renuka Rajasekaran

Innamburan Innamburan Wed, Mar 21, 2012 at 9:32 PM
To: 
Bcc: innamburan88
ரொம்ப சந்தோஷம், ரேணுகா. சில நண்பர்கள் தனிமடலில் கேட்டு வாங்கி, காத்திருந்து, படிக்கிறார்கள். இப்போது, நீங்களும் அந்த பட்டியலில் நல்வரவு. ஆனால், மின் தமிழில் வரும் பின்னூட்டங்கள் சில சமயம் என்னை அசத்துகின்றன, நீங்கள் இப்போது எழுதியது போல. என் பாக்கியம். You made a valid point. Jonathan Livingstone Seagull is my model, whom I intorduced to Pavalasankari. இந்த ஹைப்ரிட் மொழியின் ரகஸ்யம்: என் மனது எழுதுகிறது. சொற்கள் வந்து விழுகின்றன. பெரும்பாலும் அடித்தல், திருத்தல் கிடையாது. அன்றன்று எழுதுகிறேன். இத்தனைக்கும், மூன்று வருடங்களாக தான் தமிழ் பரிச்சியம்.BA (Hons) வகுப்பில் சேர்ந்து தொலைக்கல்வி மூலம் படிக்கத்தொடங்கினேன். 
நான் வரும் செவ்வாய் St.Louis வருகிறேன், என் பெண் வீட்டிற்கு. நான்கு மாதங்கள் இருப்பேன். நாம் டெலிஃபோனில் பேசிக்கொள்ளலாம்.
அன்புடன்,
இன்னம்பூரான்


2012/3/21 renuka rajasekaran
[Quoted text hidden]
நன்றி ஐயா 

2012/3/21 Innamburan Innamburan <innamburan@gmail.com>
[Quoted text hidden]
உசாத்துணை:



--
Renuka Rajasekaran

renuka rajasekaran Wed, Mar 21, 2012 at 10:08 PM
To: Innamburan Innamburan
மிக்க மகிழிச்சி 
மொழிப்பற்று முக்கியம்தான் என்றாலும் 
மொழி பற்றிய பிரக்கஞ்சையில் நான் வித்தியாசமானவள்
மொழி என்பது கருவி -- 
உள்ளத்துக் கிடக்கையை வெளிப்பபடுத்துவது மொழியின் பணி   
இதில் கருவியின் திறன்தான் முக்கியமே தவிர - அந்தக் கருவி  இன்ன நாட்டில் செய்யப்பட்டது என்பது முதன்மையான முக்கியமல்ல.
உள்நாட்டுக் கருவி நாம் தேர்ந்தெடுத்தப் பயன்பாட்டுக்கு  உபயோகமாகும் எனும்போது அதனை விடுப்பது நல்லதல்ல என்றாலும் - அது கையில் நாம் எடுத்துக்கொண்டுள்ள பணிக்கு நிறைவு தரும் வகையில் உதவ இயலாததாய் இருக்கும் தருணங்களில் பொருத்தமானதொரு பிற ஊர் அல்லது பிறநாட்டுக் கருவியைப் பயன்படுத்தக் கூடாது என்று சொலவதிலே எனக்கு உடன் பாடு இல்லை.

உங்கள் தொனி - உங்கள் பிரதான மொழி தமிழ் என்பதையும் - நீங்கள் உள்ளூர்த் தமிழர் என்பதையும் காட்டுகிறது.
தமிழை மொழிப்  பாடமாக எடுத்துப் படிக்கும் வாய்ப்புப பெறாத சூழல் இருந்திருக்கும் என  உணர்கிறேன்.
தமிழை முறைப்படி கற்கும் உமது முயற்சி பாராட்டுதற்குரியது!
இது மாபெரும் கடமை. வயது கருதாது இக்கடைமையைச் செய்யவேண்டும் என நீங்கள் கொண்டுள்ள முந்துணர்வு கண்டு வியக்கிறேன்! 
உமது கடமை உணர்வுக்குப் பாராட்டுக்கள் 
உங்கள் தமிழ்க் காதலுக்குத் தனியே விழா எடுக்கலாம். 
வணக்கம் 
எல்லா நன்மைகளும் சிறக்க இறையருளைச் சிந்தித்து 
வரவேற்கிறேன் 
பேசுவோம் 
அவ்வை மகள் 

      

   
[Quoted text hidden]
--
Renuka Rajasekaran

Geetha Sambasivam Wed, Mar 21, 2012 at 11:19 PM
To: thamizhvaasal@googlegroups.com
Cc: mintamil
எத்தனை எத்தனை இப்படிப் போயிருக்கின்றன. :((( நம் நாட்டுச் செல்வங்கள் இப்படிச் சூறையாடப் பட்டது அந்நியர்களால் என்றால் இன்றோ?  நம் ஆளுநர்களே நம்மைச் சுரண்டுகிறார்கள். எப்படியோ சுரண்டல் என்னமோ நிற்கவில்லை. 

On Wed, Mar 21, 2012 at 11:35 PM, Innamburan Innamburan <innamburan@gmail.com> wrote:
அன்றொருநாள்: மார்ச் 22
மயிலும் ஒயிலும்


coral shree Wed, Mar 21, 2012 at 11:41 PM
To: Innamburan Innamburan
அன்பின் ஐயா,

’மயிலும் ஒயிலும்’ - என்ன அழகான தலைப்பு! ம்ம்.. குரங்கு கையில் கிடைத்த பூமாலையாக எத்தனை சொத்துகள் பறி போயின... எவ்வளவு உழைப்பு நாசமாக்கப்பட்டுள்ளது... அதையெல்லாம் கணக்கெடுத்தால் நாம் உலக அரங்கில் எங்கோ நிற்போம்.... காலக்கொடுமை. அருமையான விவரிப்பு ஐயா. நன்றி.

அன்புடன்

பவளா.
[Quoted text hidden]


கி.காளைராசன் Thu, Mar 22, 2012 at 6:48 PM
To: mintamil@googlegroups.com
Cc: thamizhvaasal , Innamburan Innamburan , coral shree , anantha narayanan nagarajan , Soumya Srinivasan , Manimekalai kalai , renuka rajasekaran
ஐயா ‘இ‘னா அவர்களுக்கு வணக்கம்.

2012/3/21 Innamburan Innamburan <innamburan@gmail.com>
அன்றொருநாள்: மார்ச் 22
மயிலும் ஒயிலும்
1.15 டன் பொன்னை உருக்கி, ஜோடி,ஜோடியாக, மயில்கள் ஒயிலாகத் தாங்கும் ராஜ தர்பார் நாற்காலி ( அதை எப்படி சிம்மாசனம் என்று சொல்வது?) மயிலாசனமாக செய்து, அகமகிழ்ந்தான், ஜிலே -இ-இலாஹி 
மயில் வடிவில் ஆசனம் செய்ததது எதற்காக?
இதற்கும் முருகன் வழிபாட்டிற்கும் ஏதேனும் தொடர்பு உண்டா?
 
1707ல்.  டைமூர், ஜெங்கிஸ்கான், முகம்மது கஜினி ஆகியோரின் ‘கொள்ளையடிக்கும் மரபணுவை எப்படியோ கிரஹித்துக்கொண்ட, பெர்சிய(இன்​றைய ஈரான்) மன்னனும், தீவட்டிக்கொள்ளைக்காரனும் ஆன நாதிர் ஷா, 1739ல் அன்று டில்லையை குலைத்து, இன்றைய மதிப்பில் எட்டு பிலியன் டாலர் விலை போகும் ஸ்தாவர ஐஸ்வர்யங்களை, அள்ளிக்கொண்டுப் போனான். மார்ச் 22ம்தேதி அடித்துக்கொண்டு போனது இந்த மயிலாசனம்.
எல்லாவற்றையும் எல்லோரும் எடுத்துக் கொண்டு போனாலும் 
இந்தியாவில் இன்றும் இறைவன் இருக்கிறான்.

அன்பன்
கி.காளைராசன்


Innamburan Innamburan Thu, Mar 22, 2012 at 6:59 PM
To: "கி.காளைராசன்" 


2012/3/22 கி.காளைராசன் <kalairajan26@gmail.com>
ஐயா ‘இ‘னா அவர்களுக்கு வணக்கம்.

2012/3/21 Innamburan Innamburan <innamburan@gmail.com>
அன்றொருநாள்: மார்ச் 22
மயிலும் ஒயிலும்
1.15 டன் பொன்னை உருக்கி, ஜோடி,ஜோடியாக, மயில்கள் ஒயிலாகத் தாங்கும் ராஜ தர்பார் நாற்காலி ( அதை எப்படி சிம்மாசனம் என்று சொல்வது?) மயிலாசனமாக செய்து, அகமகிழ்ந்தான், ஜிலே -இ-இலாஹி 
மயில் வடிவில் ஆசனம் செய்ததது எதற்காக?
இதற்கும் முருகன் வழிபாட்டிற்கும் ஏதேனும் தொடர்பு உண்டா?
~ மயில் ஆசனம் செய்ததிற்கு, அற்புதமான கலையார்வம் ஒரு காரணமானாலும், செருக்கின் வரவே, அது. முருகன் வழிப்பாட்டிற்கு சம்பந்தம் இல்லை.
 
 
 
1707ல்.  டைமூர், ஜெங்கிஸ்கான், முகம்மது கஜினி ஆகியோரின் ‘கொள்ளையடிக்கும் மரபணுவை எப்படியோ கிரஹித்துக்கொண்ட, பெர்சிய(இன்​​றைய ஈரான்) மன்னனும், தீவட்டிக்கொள்ளைக்காரனும் ஆன நாதிர் ஷா, 1739ல் அன்று டில்லையை குலைத்து, இன்றைய மதிப்பில் எட்டு பிலியன் டாலர் விலை போகும் ஸ்தாவர ஐஸ்வர்யங்களை, அள்ளிக்கொண்டுப் போனான். மார்ச் 22ம்தேதி அடித்துக்கொண்டு போனது இந்த மயிலாசனம்.
எல்லாவற்றையும் எல்லோரும் எடுத்துக் கொண்டு போனாலும் 
இந்தியாவில் இன்றும் இறைவன் இருக்கிறான்.
~ இறைவன் எங்கும் நிறைந்தவன்,
இன்னம்பூரான் 

அன்பன்
கி.காளைராசன்


கி.காளைராசன் Thu, Mar 22, 2012 at 7:06 PM
To: Innamburan Innamburan
ஐயா ‘இ‘னா அவர்களுக்கு வணக்கம்.
2012/3/23 Innamburan Innamburan <innamburan@gmail.com>
~ மயில் ஆசனம் செய்ததிற்கு, அற்புதமான கலையார்வம் ஒரு காரணமானாலும், செருக்கின் வரவே, அது. முருகன் வழிப்பாட்டிற்கு சம்பந்தம் இல்லை.
விளக்கத்திற்கு நன்றி ஐயா.

அன்பன்
கி.காளைராசன்

No comments:

Post a Comment