Friday, March 22, 2013




அன்றொருநாள்: மார்ச் 23:* * *
17 messages

Innamburan Innamburan Thu, Mar 22, 2012 at 5:46 PM
To: mintamil , thamizhvaasal
Cc: Innamburan Innamburan

அன்றொருநாள்: மார்ச் 23
:Inline image 1Inline image 2Inline image 3



விடுதலை வேள்வியில் தன்னையே ‘ஸ்வாஹாஹா!’ என்று அர்ப்பணித்துக்கொண்ட தியாகச்சுடர்கள் முன்னே நாம் தூசு என்க. மார்ச் 23, 1931 அன்று பகத் சிங், சுக்தேவ் & ராஜகுரு ஆகிய மூன்று வாலிபர்கள் லாஹூர் சிறையில் தூக்கிலிடப்பட்டனர். அவர்களில் பகத் சிங்கை பற்றி பரவலாக அறிந்தவர்களுக்கு , மற்ற இருவர்களை பற்றி அவ்வளவாகத் தெரியாது. மூவரும் தியாக செம்மல்களே. அவர்களுக்கு மனம் நெகிழ்ந்த அஞ்சலி செலுத்திய பின், ஒரு வித்தியாசமான பார்வை; பாமரகீர்த்தி நோக்கு. 
‘அன்றொரு நாள்: ஜனவரி:28‘...மாசற்ற ஜோதி வதனமினிக் காண்பேனோ?...’ என்ற இழையில், ‘...அக்டோபர் 30, 1928 ஒரு கரி நாள். அன்று சைமன் கமிஷனை எதிர்த்துச் சென்ற ஊர்வலத்தில், லாலாஜி தலைமை வகித்தார். ஒரு போலீஸ் முரடன் தடியால் தலையில் அடித்து, படுகாயப்படுத்தினான். அதை பொருட்படுத்தாமல் அன்று மாலை பொதுக்கூட்டத்தில், ‘என் மேல் படும் அடி ஒவ்வொன்றும், பிரிட்டீஷ் சவப்பெட்டியில் ஆணிகளாகும்’ என்று முழங்கினார். இவரது உடல் நிலை கெட்டுப்போய், நவம்பர் 17, 1928 அன்று விண்ணுலகம் ஏகினார்’ என்று கூறினேன்.
லாலா லஜ்பத் ராய் அவர்களை  தடியால் அடித்தவன் ஜேம்ஸ்.ஏ.ஸ்காட். பழி வாங்கும் நோக்கத்துடன் பகத் சிங், சுக்தேவ், ராஜகுரு, ஜெய் கோபால் & சந்திரசேகர் ஆசாத் 
(அன்றொரு நாள்: ஜூலை 23:I: சுளீர்! சுளீர்! சுளீர்! பாலகனுக்கோ வயது 15; கசையடிகளும் 15.  ஒவ்வொரு சுளீருக்கும் ஒரு ‘பாரதமாதாவுக்கு ஜே!’ வெள்ளைக்காரனுக்கே தாங்கவில்லை. உன் பெயர் என்னவென்றான். இவனும் ‘திவாரி’ என்று சொல்லமாட்டானோ? ‘சுதந்திரப்பறவை என்று பொருள்பட ‘ஆசாத்’ என்றான். சுளீர்!) 
ஆகிய ஐவர் குழு, அவன் என்று நினைத்து ஜான் சாண்டர்ஸ் என்ற போலீஸ் அதிகாரியை சுட்டுக்கொன்றனர்.  (மத்திய அசெம்ப்ளியில் குண்டு வீசிய வழக்கு வேறு.) தந்திரமாக, கல்கத்தா, கான்பூர், லக்னெள என்று ஓடிப்போனாலும், பிடிபட்டார்கள். இந்த மூவருக்கும் தூக்கு தண்டனை. இதையெல்லாம் படித்துக்கொள்ளலாம். நான் சொல்லப்போகும் விஷயம்: 1945ல் ‘பகத் சிங்கும், தோழர்களும்’ என்ற ஆங்கில நூல். பம்பாயிலிருந்து பிரசுரம் ஆனது; ஆசிரியர் அஜாய் கோஷ்,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் காரியதரிசி (1951 -62)பகத் சிங்குடன் சிறையில் இருந்தவர்.
சாராம்சம்: 
நான் பகத் சிங்கை முதலில் பார்த்தது 1923ல். வயது 13/14. நல்ல உயரம், மெலிந்த உடல், கிராமத்தான். வெள்ளந்தி.  சில நாட்கள் கழித்து நாங்கள் இருவரும் அளவளாவினோம். மக்களுக்கு விழிப்புணர்ச்சி இல்லையே என்று மிகவும் கவலைப்பட்டான். முதல் லாஹூர் சூழ்ச்சி வழக்கில் தூக்கிலிடப்பட்ட கர்தார் சிங் தான் அவனுக்கு மாடல். எங்கள் நட்பு வளர்ந்தது... சில வருடங்கள் கழித்து 1928ல் அவனை சந்தித்தபோது அவனுடைய புதிய அவதாரம் கண்டு வியந்தேன். அவன் கிராமத்தானாக இல்லை. அவனுடைய சாதுரியமும், ஒளி விசும் கண்களும், வசீகர தோற்றமும் என்னை கவர்ந்தன. அவன் பேசினால், நாள் பூரா கேட்கலாம். அத்தனை வேகமும், தாகமும்... ஏப்ரல், 1929ல் கம்யூனிஸ்ட் வேட்டை தொடங்கியது. பி.சி.ஜோஷி காலேஜ் பையன். கைது. நாங்களும் கொஞ்சம் கம்யூனிஸ்ட் வாடையால் இழுக்கப்பட்டோம். ஆனால், எங்களுக்கு ஆயுதம் தாங்கி ஆங்கிலேயனை விரட்டவேண்டும். கம்யூனிஸ்ட்டுகள் அதை ஆதரிக்கவில்லை. மற்றபடி, ஆங்கில ஏகாதிபத்தியத்தை, அரசியல் சாஸன அணுகுமுறையை எதிர்ப்பதிலும், நேரடி தாக்குதல் கொள்கையிலும், நாங்கள் ஒத்துப்போனோம். கம்யூனிஸ்ட்டு கட்சியினரை கைது செய்வதை எதிர்த்தோம்... அசெம்ளியில் குண்டு வீசியதற்கு, ஸ்தலத்திலேயே பகத் சிங்கும், தத் என்பவரும் கைதானார்கள். பகத் சிங்கின் வாக்குமூலம் கணீரென்று இருந்தது. பொறுப்பை ஏற்றுக்கொண்டான். தீவாந்திர தண்டனை.
லாஹூரில் இருந்த எங்கள் குண்டு தொழிற்சாலையை மோப்பம் பிடித்து, சுக்தேவ், கிஷோரி லால் ஆகியோரை கைது செய்தார்கள். ஜெய் கோபாலும்,ஹன்ஸ்ராஜ் வோஹ்ராவுக்கும், போலீஸ் அடிதடி பொறுக்காமல், அரசு தரப்பு சாட்சிகளாயினர். மேலும் ஐந்து பேர். இந்தியா முழுதும் எங்கள் குழுவே கைதாயிற்று; அல்லது அஞ்ஞாத வாசம். நானும் அஞ்ஞாத வாசம் புகுமுன் கைதானேன்.
ஜூலை 1929ல், கோர்ட்டில் பகத் சிங்கை பார்த்து அழுதேன். அவன் தன்னுடைய நிழலாகி விட்டான். போலீஸ் டார்ச்சர், சமத்துவம் கோரி உண்ணாவிரதம். மெலிந்து, இளைத்து, துரும்பாகி, கிழித்தக் கந்தலாகக் கிடந்த அவனை ஸ்டெரெச்சில் கிடத்திக் கொண்டு வந்தார்கள். லாஹூர் சூழ்ச்சி வழக்கு என்று ஒன்றும் தொடர்ந்தார்கள். நானும், பகத் சிங்கும், வழக்கை கவனிக்காமல், பேசிக்கொண்டிருப்போம். அவன் சொன்னது: ‘எல்லாம் முடிந்த கதை என்று சோர்வடையக்கூடாது; இது வெறும் சட்டரீதியான வழக்கு அன்று; எல்லாரையும் காப்பாற்ற முயல்வோம்; ஆனால், அரசியல் பின்னணியை மறக்காதே. இந்த வழக்கை ஒரு தருணமாக கையாண்டு, சொல்லாலும், செய்கையாலும் துணிந்து அசகாய புரட்சிகரமான வேலைகள் செய்து, ராஜாங்கத்தை அசத்துவோம்.’. அது எங்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது. எல்லாரும் உண்ணாவிரதத்தைத் தொடங்கினோம். மெலிந்தோம், இளைத்தோம். துணிவு இழக்கவில்லை. பத்து நாட்களுக்குப் பிறகு வலுக்கட்டாயகாக ஊட்டினார்கள். 13ம் நாள், ஜதீன் தாஸ்சின் நிலைமை மோசமாகி விட்டது. நன்றாகத்தான் இருந்தான். ஒரு சிறிய அதிகாரி தயங்கி, தயங்கி, அவனுக்கு வலுக்கட்டாயமாக ஊட்டியதில் கேடு விளைந்தது என்றார். ஜதீன் தாஸ் ஒரு நகைச்சுவையாளன். கதை சொல்லி. பாமர கீர்த்தி செப்புவான். அவனோ நினைவிழந்து கிடந்தான், ஆஸ்பத்திரியில். ஜெயில் அதிகாரிகளை மிரட்டி, நான் போய் பார்த்தேன். அடுத்த பலிகடா சிவ் வர்மா. ஆஸ்பத்திரி ஃபுல். கோர்ட் காலி. தண்ணீருக்கு பதிலாக பால் கொடுத்தார்கள். நாங்களும் இல்லாத தந்திரங்களை கையாண்டோம். இந்தியா முழுதும் பரவியது உண்ணாவிரத புரட்சி. அவ்வப்பொழுது பகத் சிங்கின் ஊக்கம் எங்களை ஆட்கொண்டது.
ஜதீன் தாஸ் செத்துப்போய்ட்டான். சிறை அதிகாரிகள் அழுதார்கள். வாசலில் பெரும் கூட்டம். லாஹூர் போலீஸ் சூபரிண்டெண்ட், ஹாமில்டன் ஹார்டிங்க், தலை குனிந்து வணங்கினார்.
(தொடரும்)
இன்னம்பூரான்
23 03 2012
பி.கு. தொடர் கட்டுரையாக எழுத நினைக்கவில்லை. பகத் சிங் செய்த கொலையை நியாயப்படுத்தவும் இல்லை. ஆனால்... 
Inline image 1


MAINSTREAM, VOL XLV, NO 42

renuka rajasekaran Thu, Mar 22, 2012 at 6:05 PM
To: Innamburan Innamburan
ஐயா 
சாராம்சம் என்ற பகுதியின் கீழ் நீங்கள் தந்துள்ளது உங்கள் வரலாறா ஐயா?
சொல்லுங்கள் ஐயா! 
ஐயா இந்த விவரங்கள் அறிந்து நெஞ்சுள் புல்லரிக்கிறது - பிறாண்டுகிறது 
இன்றைய குழந்தைகள் விவரம் தெரியாத குழந்தைகளாகவே வளர்க்கப் பட்டிருக்கிறார்கள் என்று வேதனைப் படக் கூறிய கண்ணதாசனின் குரல் என் காதில் ஒலிக்கறது ஐயா
உம்மைப்போல பொறுப்புடன் எமக்கு இந்த விவரங்கள் தர வேறு எவரிருக்கிறார் ஐயா?
உம்மைப் பற்றி நிறைய அறிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறேன்!
சொல்லுங்கள் ஐயா! நிறைய சொல்லுங்கள்!
கேட்க ஆவலாய் இருக்கிறேன்   
[Quoted text hidden]
--
Renuka Rajasekaran

Innamburan Innamburan Thu, Mar 22, 2012 at 6:13 PM
To: 
அன்பின் அவ்வை மகள்,
 நான் மிகவும் உணர்ச்சிவசப்படுபவன். என் அம்மா சொன்னமாதிரி, ஒருமாதிரியான பையன்! பள்ளியில் படிக்கும் போது அரஸ்ட். அதை விடுங்கள். உணர்ச்சி வசப்பட்டு மேலே எழுதமுடியாமல் ஆகி விட்டது. அந்த பகத் சிங் ஃபோட்ட்டோவில் என்னே அமைதி! அது என்னை வசமிழக்கச்செய்தது.எனக்கு ஒரு ஐயம் கூட உண்டு, அது பற்றி. பகத் சிங் தாடியை எடுத்தவர். நாத்திகர். ஜெயிலில் ஏன் இப்படி சம்பிரதாயமாக. ஒரு வேளை ஃபோட்டோ பொய்யோ? 
சாரம்சம், அஜாய் கோஷ் எழுதியதின் சாராம்சம். உசாத்துணையில், முழுதும் ஆங்கிலத்தில் உளது.
அன்புடன்,
இன்னம்பூரான்
[Quoted text hidden]

renuka rajasekaran Thu, Mar 22, 2012 at 7:36 PM
To: Innamburan Innamburan
பலே!
உணர்ச்சிவசப்படுகிறவன் தான் பாரதியும்!
உணர்ச்சிவசப்படுகிறவன் தான்  பகத் சிங்கும் 
உணர்ச்சிவசப்படுகிறவன் தான்  வீர பாண்டியனும் 
உணர்ச்சிவசப்படுகிறவள் தான் அவ்வையும் 
உணர்ச்சிவசப்படுகிறவள் தான் துர்க்கையும் 
உணர்ச்சிவசப்படுகிறவன் தான்முருகனும்  

உலகில் உப்பு பூத்ததே உணர்ச்சிவசப் படுவதற்காக மட்டுமே! 
உலகில் குருதி எனும் ஊற்று உருவானது உணர்ச்சிவசப் படுவதற்காக மட்டுமே! 
இவையெல்லாம் இயற்கையின் கொடை
பிதாமகர்கள் உணர்ச்சிவசப் படுவதற்காக மட்டுமே பிறப்பெடுக்கிறார்கள்!

இதில் உம்மைப்போல ஒருவரை அறிந்து கொண்டபேறு பெற்றமைக்காக
நான் உணர்ச்சிவசப் படுகிறேன்!
 
இது வார்த்தைகளுக்குக் கட்டுப்படாத உணர்ச்சிப் பிரவாகம்!!
[Quoted text hidden]
--
Renuka Rajasekaran

Innamburan Innamburan Thu, Mar 22, 2012 at 9:27 PM
To: 
எனக்கு மகிழ்ச்சியே. அன்றொரு நாள் அந்த பாரதியை பற்றி எழுதினேன். பச்சை நிறக்கவிதை தத்க்ஷணத்தில் நான் படைத்தது. செய்தி மூலம் வெ.சாமிநாத சர்மா அவர்களின் 'நான் கண்ட நால்வர்'. கட்டுரையில் சொல்லப்பட்ட பாலு சார் நிகழ்வு: 7/8 வயதில் அவர் சொல்லிக்கொடுத்ததை, நெட்டுரு போட்டு, தஞ்சை திலகர் மைதானத்தில் பரவசத்துடன் உரை நிகழ்த்தியதற்கு கிடைத்த பரிசு, இன்று சைண்ட் லூயிஸில், என் மகளிடம். 60 வருடங்கள் கழித்து அந்த பள்ளியில் மாணவர்களுடன் அளவளாவும் தருணம் கிட்டியது. 

ஆம். உணர்ச்சி வார்த்தைகளுக்குள் அடங்காது.
அன்புடன், இன்னம் பூரான்
******
அன்றொரு நாள்: டிசம்பர் 11
ஒளி படைத்தக் கண்ணினாய்!

இன்று மஹாகவி சுப்ரமண்ய பாரதி அவர்களின் ஜன்மதினம். இணைய தளத்தில் பலர் அவருடைய புகழுரைப்பார்கள். செப்டம்பர் 11, 2011 அன்று யான் ‘‘செய்யுந்தொழிலுன் தொழிலே காண்;...’ என்று இறை வணக்கம் செய்து, ‘பால பருவத்தில் எனக்கு தேசாபிமானம் என்ற அடிசில் ஊட்டி...’ என்று குரு வந்தனம் செய்து, 
‘வந்தாரே அமானுஷ்யன்; 
சட்டையில் காலரில்லை; 
ஆனா டை கட்டி தொங்குதடா, 
சீமானே! மனம் போல் திறந்த கோட்டு, 
தோளின் மேல் சவாரி, 
நீலக்கலரிலே, ஐயா, சவுக்கம் ஒன்று.
முண்டாசு முடிச்சிருக்கான், கரை போட்ட துண்டாலே. 
அதற்கு வாலும் தொங்குதடா, ராச மவராசன் போல. 
எம்மாம் பெரிசு சோப்புக்கலர் குங்குமப்பொட்டு.
மீசையாவது, ஒளுங்கா, மன்மதனே, கத்திரிச்சிருக்கு. 
எத்தனை நாள் பட்டினியோ, தெய்வத்திருமகனே! 
கன்னமெல்லாம் ஏண்டாப்பா நசுங்கிப்போச்சு? 
உனக்கு வில்லியம் ப்ளேக் தெரியுமோடா? 
அவன் பாடின மாதிரி, புலிக்கண்ணோ உந்தனுக்கு? 
என் கண்ணெல்லாம் சுணங்குதும்மா; 
அப்படி ஜொலிக்கது உன்னோட கண்மலர்கள்!
மஹமாயி!  ஆதி பராசக்தி! 
அந்த மணக்குளத்து பிள்ளையாரே!
பாஞ்சாலி மானம் காத்தாய்! நீ
இவனுக்கு சேவகன் இல்லையாடா?
அதெல்லாம் சரி. 
அதென்ன ரயில் வண்டி புகை, ‘குப்’,குப்’னு?
ஓ! தொரை உரையூர் சுருட்டுத்தான் பிடிக்கிறாரு!

என்று கவி வந்தனம் செய்து, ‘பராக்! பராக்!’ என்று சல்யூட் அடித்து, அஞ்சலி செய்ததை மீள்பதிவு செய்து விட்டு, சில வார்த்தைகள் சொல்ல ஆசைப்படுகிறேன். 1930-40களில் பாரதியார் வாசம் மாணவர்கள் நாவில். அவருடைய பாடல்கள் ஸ்ருதி தான். படிக்கக்கிடைக்காது.
நான் சொல்வது எந்த அளவுக்கு இன்றைய சூழ்நிலையில் புரியும் என்று தெரியவில்லை. மதிப்புக்குரிய தமிழாசிரியர் வி.ஜி.ஶ்ரீனிவாசன், பாலு சார், தலைமை ஆசிரியர் யாகூப் கான் போன்றோரின் ஊக்கம் எங்களுக்கு மிகவும் உற்சாகம் அளித்தது. பாலு சார், எமது சூத்ரதாரி. அவருடைய எதிரொலியாக திலகர் மைதானத்தில் கர்ஜித்தேன், பாரதி கீர்த்தியை. வி.ஜி.எஸ். தந்தையின் நண்பர். ரொம்ப அன்யோன்யம் என்று நினைக்கிறேன். அவருடைய இல்லத்தில் என் அம்மா பால் காச்சியதும், அதிலிருந்த பால் ஏடு வாங்கி ருசித்ததும் மட்டுமே பாலப்பருவத்திலிருந்து இன்று வரை நினைவில் இருக்கிறது. அப்பா அடிக்கடி பாரதியாரை பற்றி வி.ஜி.எஸ் சொன்னதாக, அவ்வப்பொழுது சொன்னது மனதில் தங்கியிருந்திருக்கலாம். தலைமை ஆசிரியரோ எங்களை எங்கள் போக்கில் விட்டதே பெரிய ஸ்வாதந்தர்யம். அதற்கான வலியையும் பொறுத்துக்கொண்டார். எங்கள் ஹீரோ. 
ஆம். ஒரு பிற்போக்கான கிராமத்தில், பின் தங்கிய சமுதாயத்திற்கான ஏழைகளின் பள்ளியில், ‘என்னா ப்ரதர்!’ என்ற உறவே துலங்கும் மாணவருலகத்தில் பீடு நடை போட்டு, வீறாப்புடன் நடந்த கவிஞன் மஹாகவி சுப்ரமண்யபாரதியார். எங்களை உய்விக்க வந்த மஹானுபவன். ஒளி படைத்த கண்ணினான். 

60 வருடங்களுக்கு மேல் கடந்தன. புதுச்சேரியில் மஹாகவி வாழ்ந்த இல்லத்தை அங்குலம் அங்குலமாக யான் அனுபவிக்கும் வேளையிலே, இரு சம்பவங்கள். ஒரு பெண் எம்.லிட். ஆய்வு செய்கிறாளாம். நூலகத்தில் உள்ள நூல்களை படித்து வந்தாள். ஏடுகள் காற்றில் பறக்காமல் இருக்க, ஒரு கல்லை அதன் மேல் வைத்தாள். மடிந்த பக்கம் லேசாகக் கிழிந்தது. நான் அவளை கோபித்துக்கொண்டேன். அங்கு ஒரு விசிப்பலகை. அதில் அமர்ந்து தான் மொட்டை மாடியில், மஹாகவியும், நண்பர்களும் அளவளாவினர். அந்த விசிப்பலகையில் ஒருவர் அமர, நான் அவரை எழுந்திருக்கச் சொன்னேன், கறாராக பேசி. அவர் ஒத்துக்கொண்டார். ஆனால், அந்த இல்லத்தை பராமரிப்பவர்கள் தங்களால் அத்தனை கண்டிப்பாக பேச முடியவில்லை என்றும், பார்வையாளர்கள்.  கேட்கமாட்டார்கள் என்றும் சொன்னார்கள். அங்கு வாங்கிய பாரதியார் நூல்களை, எங்கு வாங்கியவை அவை, ஆங்கிலேயனை அவர் விமர்சித்த முறை, வின்ச் துரையெல்லாம் சொல்லி, போர்ட்ஸ்மத் நூலகத்துக்கு அன்பளிப்பாகக்கொடுத்தேன். 

எது எப்படியோ! மஹாகவி சுப்ரமண்ய பாரதியாரின் தயவில், அவர் பெயரில், ஒரு புரட்சி நிகழவேண்டிய நேரம் நெருங்கிவிட்டது.
இன்னம்பூரான்
11 12 2011
Subramanya_Bharathi_Signature.jpg

2012/3/22 renuka rajasekaran 

renuka rajasekaran Thu, Mar 22, 2012 at 11:11 PM
To: Innamburan Innamburan
உமது இந்த வார்த்தைகளுக்காய் இதோ  ஒரு சிறு பரிசு 
அந்த பகத் சிங் ஃபோட்ட்டோவில் என்னே அமைதி! அது என்னை வசமிழக்கச்செய்தது.எனக்கு ஒரு ஐயம் கூட உண்டு, அது பற்றி. பகத் சிங் தாடியை எடுத்தவர். நாத்திகர். ஜெயிலில் ஏன் இப்படி சம்பிரதாயமாக. ஒரு வேளை ஃபோட்டோ பொய்யோ? 

உண்மைகள் பொய்ப்பதில்லை - நிழலும் கூட என்றும் பொய்ப்பதில்லை 

Inline image 1


பா- ரதி- நீ! எனப் பாடுவேன்! பாரதிரப் பாடுவேன்! பாரம் தீரப்  பாடுவேன்! பாரின் தீரமெங்கும் பாடுவேன்! பா தீரப் பாடுவேன்!

பேசினாய் பேசினாய் பேசினாய் - உன் பேச்சிலே என் வழி மாற்றினாய்!
[Quoted text hidden]
--
Renuka Rajasekaran

Geetha Sambasivam Thu, Mar 22, 2012 at 11:28 PM
To: thamizhvaasal@googlegroups.com
Cc: mintamil , Innamburan Innamburan
பி.கு. தொடர் கட்டுரையாக எழுத நினைக்கவில்லை. பகத் சிங் செய்த கொலையை நியாயப்படுத்தவும் இல்லை. ஆனால்... //

கண்ணீரோடு படித்தேன்.  பகத்சிங் செய்த கொலையை நியாயப் படுத்தவில்லை எனில்?? பகத்சிங் என்ன செய்திருக்க வேண்டும்?? தொடர் கட்டுரையாக எழுத நினைக்காவிட்டாலும் இது எழுத ஆரம்பித்தால் பல பதிவுகளுக்குத் தொடரும் ஒன்று.

பகத்சிங் விஷயத்தில் காந்தியின் நிலைப்பாடு ஏற்கக் கூடிய ஒன்றா? :((((((

On Thu, Mar 22, 2012 at 11:16 PM, Innamburan Innamburan <innamburan@gmail.com> wrote:






Innamburan Innamburan Fri, Mar 23, 2012 at 9:51 AM
To: 
நான் உங்களிடமிருந்து எதிர்ப்பார்த்தக் கேள்விகள் தான் இவை. உங்களுக்கு தெரிந்தவகையில் காந்தியின் நிலைப்பாடு என்ன? பதில் எனக்கு, தொடர உதவும்.
[Quoted text hidden]

கி.காளைராசன் Fri, Mar 23, 2012 at 10:08 AM
To: mintamil@googlegroups.com
Cc: thamizhvaasal , Innamburan Innamburan
ஐயா ‘இ‘னா அவர்களுக்கு வணக்கம் பல.

2012/3/22 Innamburan Innamburan <innamburan@gmail.com>
அன்றொருநாள்: மார்ச் 23
மார்ச் 23, 1931 அன்று பகத் சிங், சுக்தேவ் & ராஜகுரு ஆகிய மூன்று வாலிபர்கள் லாஹூர் சிறையில் தூக்கிலிடப்பட்டனர்.
மார்ச் 23 ஆம் நாளன இன்று இம்மூன்று விடுதலை வீரர்களையும் என் நெஞ்சில் நினைந்து வணங்குகிறேன்.
 
அவர்களில் பகத் சிங்கை பற்றி பரவலாக அறிந்தவர்களுக்கு , மற்ற இருவர்களை பற்றி அவ்வளவாகத் தெரியாது.
தங்களது எழுத்துக்கள் வாயிலாக அறிந்து கொண்டேன்.
இவ்வீரர்களால் வீரசுதந்திரம் பெற்றுள்ளோம் என அறிந்து பெருமிதம் கொள்கிறேன்.

தேசத்தைக் காத்த வீரர்களை அறிமுகம் செய்துவைத்த தங்களுக்கு எனது பணிவான வணக்கங்களும், பாராட்டுகளும்.

அன்பன்
கி.காளைராசன்


Geetha Sambasivam Fri, Mar 23, 2012 at 10:27 AM
To: Innamburan Innamburan , தமிழ் வாசல்
Cc: mintamil
சரி, சொல்றேன்,  காந்தி நினைத்திருந்தால் இளைஞர்களைத் தூக்கு மேடையில் இருந்து காப்பாற்றி இருக்கலாம் அல்லவா?  ஆனால்!!!!!!!!!
[Quoted text hidden]

Geetha Sambasivam Fri, Mar 23, 2012 at 10:33 AM
To: Innamburan Innamburan , தமிழ் வாசல்
Cc: mintamil
காந்தியை ஒருவகையில் தந்திரக்காரர் என்று மட்டுமின்றி எமோஷனல் ப்ளாக்மெயிலர் என்றும் சொல்லலாமோ? 

இதனால் காந்தியிடம் எனக்கு மதிப்போ, மரியாதையோ இல்லை என அர்த்தம் இல்லை.  என்றாலும் யானைக்கும் அடி சறுக்கும் என்பதற்கொப்ப காந்தியின் மாபெரும் தவறுகளில் இவையும் ஒன்று.  போஸை நிராகரித்தது, சுதந்திரத்துக்குப் பின்னர் படேலை நேருவுடன் ஒத்துப் போகக் கட்டாயப் படுத்தியது,  என எத்தனையோ இருக்கு. :(((((((

அவருடைய சக்தியை, ஆற்றலைச் சரியானபடி செலுத்தி இருக்கலாம். இல்லையா?  இன்று நாடு இருக்கும் மோசமான நிலைக்கு காந்தியும் ஒரு மறைமுகக் காரணம் எனத் தோன்றுகிறது.  அவர் பார்வையில் அவர் செய்தவை நியாயமாய் இருக்கலாம்.  ஆனால் ஒரு சாதாரணக் குடிமகனாக என் பார்வை வித்தியாசப் படுகிறது.

காந்தியின் நிலைப்பாடு குறித்த உங்கள் விளக்கம் எனக்குள் தெளிவைக் கொடுக்கும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கேன்.
On Fri, Mar 23, 2012 at 3:57 PM, Geetha Sambasivam <geethasmbsvm6@gmail.com> wrote:
சரி, சொல்றேன்,  காந்தி நினைத்திருந்தால் இளைஞர்களைத் தூக்கு மேடையில் இருந்து காப்பாற்றி இருக்கலாம் அல்லவா?  ஆனால்!!!!!!!!!




Innamburan Innamburan Fri, Mar 23, 2012 at 11:17 AM
To: 
வபையான பாயீண்டுகள். காந்திஜி வைஸ்ராயுடன் பேசினார். வைஸ்ராய் இர்வினும் தார்மீக  சிந்தனையாளர். காந்திஜியால், வைஸ்ராயின் கருத்துக்குப் பதில் சொல்ல இயலவில்லை. ஆனால். விளக்கமாக பதிலுரைக்கவேண்டும். கூடிய சீக்கிரம் செய்கிறேன். அதற்க்குள், மற்றவர்கள் தங்கள் கருத்தைத் தெரிவிக்கலா, தயக்கமின்றி.
[Quoted text hidden]

திவாஜி Fri, Mar 23, 2012 at 11:27 AM
Reply-To: thamizhvaasal@googlegroups.com
To: thamizhvaasal@googlegroups.com
சட்டத்துக்கு கீழ் படியாதேன்னு சொல்லிக்கொடுத்தவரே அவர்தானே? அதுக்கு ஒரு கௌரவத்தையும் கொடுத்தார். தொலை நோக்கு பார்வை இல்லை. :-(

[Quoted text hidden]

Geetha SambasivamFri, Mar 23, 2012 at 11:32 AM
Reply-To: thamizhvaasal@googlegroups.com
To: thamizhvaasal@googlegroups.com
ஆஹா, ஒரு சப்போர்ட்டு, நன்றி. நன்றி.  நானும் இப்படி நிறைய ஸ்டாக் வைச்சிருக்கேன். 
[Quoted text hidden]

Nagarajan Vadivel Fri, Mar 23, 2012 at 4:34 PM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
Some helpful links

http://www.marxists.org/archive/bhagat-singh/index.htm

http://www.marxists.org/archive/bhagat-singh/1930/x01/x01.htm

http://www.marxists.org/archive/bhagat-singh/1931/x01/x01.htm
As to the question of our fates, please allow us to say that when you have decided to put us to death, you will certainly do it. You have got the power in your hands and the power is the greatest justification in this world. We know that the maxim "Might is right" serves as your guiding motto. The whole of our trial was just a proof of that. We wanted to point out that according to the verdict of your court we had waged war and were therefore war prisoners. And we claim to be treated as such, i.e., we claim to be shot dead instead of to be hanged. It rests with you to prove that you really meant what your court has said.
We request and hope that you will very kindly order the military department to send its detachment to perform our execution.
Yours,
BHAGAT SINGH
Nagarajan
2012/3/22 Innamburan Innamburan <innamburan@gmail.com>

Subashini Tremmel Fri, Mar 23, 2012 at 9:13 PM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
Cc: Subashini Kanagasundaram


2012/3/22 Innamburan Innamburan <innamburan@gmail.com>
அன்றொருநாள்: மார்ச் 23
...
ஜூலை 1929ல், கோர்ட்டில் பகத் சிங்கை பார்த்து அழுதேன். அவன் தன்னுடைய நிழலாகி விட்டான். போலீஸ் டார்ச்சர், சமத்துவம் கோரி உண்ணாவிரதம். மெலிந்து, இளைத்து, துரும்பாகி, கிழித்தக் கந்தலாகக் கிடந்த அவனை ஸ்டெரெச்சில் கிடத்திக் கொண்டு வந்தார்கள். லாஹூர் சூழ்ச்சி வழக்கு என்று ஒன்றும் தொடர்ந்தார்கள். நானும், பகத் சிங்கும், வழக்கை கவனிக்காமல், பேசிக்கொண்டிருப்போம். அவன் சொன்னது: ‘எல்லாம் முடிந்த கதை என்று சோர்வடையக்கூடாது; இது வெறும் சட்டரீதியான வழக்கு அன்று; எல்லாரையும் காப்பாற்ற முயல்வோம்; ஆனால், அரசியல் பின்னணியை மறக்காதே. இந்த வழக்கை ஒரு தருணமாக கையாண்டு, சொல்லாலும், செய்கையாலும் துணிந்து அசகாய புரட்சிகரமான வேலைகள் செய்து, ராஜாங்கத்தை அசத்துவோம்.’. அது எங்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது. எல்லாரும் உண்ணாவிரதத்தைத் தொடங்கினோம். மெலிந்தோம், இளைத்தோம். துணிவு இழக்கவில்லை. பத்து நாட்களுக்குப் பிறகு வலுக்கட்டாயகாக ஊட்டினார்கள். 13ம் நாள், ஜதீன் தாஸ்சின் நிலைமை மோசமாகி விட்டது. நன்றாகத்தான் இருந்தான். ஒரு சிறிய அதிகாரி தயங்கி, தயங்கி, அவனுக்கு வலுக்கட்டாயமாக ஊட்டியதில் கேடு விளைந்தது என்றார். ஜதீன் தாஸ் ஒரு நகைச்சுவையாளன். கதை சொல்லி. பாமர கீர்த்தி செப்புவான். அவனோ நினைவிழந்து கிடந்தான், ஆஸ்பத்திரியில். ஜெயில் அதிகாரிகளை மிரட்டி, நான் போய் பார்த்தேன். அடுத்த பலிகடா சிவ் வர்மா. ஆஸ்பத்திரி ஃபுல். கோர்ட் காலி. தண்ணீருக்கு பதிலாக பால் கொடுத்தார்கள். நாங்களும் இல்லாத தந்திரங்களை கையாண்டோம். இந்தியா முழுதும் பரவியது உண்ணாவிரத புரட்சி. அவ்வப்பொழுது பகத் சிங்கின் ஊக்கம் எங்களை ஆட்கொண்டது.
எவ்வளவு உறுதியான சிந்தனை பொருந்திய வார்த்தைகள்! இளைய தலிமுறையினர் இவ்வகைச் செய்திகளை வாசித்து நாட்டுப் பற்றும் கொள்கை பிடிப்பும் பெற்று வளர வேண்டும். தொடருக்கு நன்றி
சுபா

 
ஜதீன் தாஸ் செத்துப்போய்ட்டான். சிறை அதிகாரிகள் அழுதார்கள். வாசலில் பெரும் கூட்டம். லாஹூர் போலீஸ் சூபரிண்டெண்ட், ஹாமில்டன் ஹார்டிங்க், தலை குனிந்து வணங்கினார்.
(தொடரும்)
இன்னம்பூரான்
23 03 2012
பி.கு. தொடர் கட்டுரையாக எழுத நினைக்கவில்லை. பகத் சிங் செய்த கொலையை நியாயப்படுத்தவும் இல்லை. ஆனால்... 

No comments:

Post a Comment