Wednesday, March 27, 2013

அன்றொரு நாள்: ஜூலை 23:IIசந்திரசேகர் ‘ஆசாத்’

Innamburan S.Soundararajan


அன்றொரு நாள்: ஜூலை 23:II
4 messages

Innamburan Innamburan Sat, Jul 23, 2011 at 1:38 PM
To: mintamil

அன்றொரு நாள்: ஜூலை 23:II
I. சுளீர்! சுளீர்! சுளீர்! பாலகனுக்கோ வயது 15; கசையடிகளும் 15.  ஒவ்வொரு சுளீருக்கும் ஒரு ‘பாரதமாதாவுக்கு ஜே!’ வெள்ளைக்காரனுக்கே தாங்கவில்லை. உன் பெயர் என்னவென்றான். இவனும் ‘திவாரி’ என்று சொல்லமாட்டானோ? ‘சுதந்திரப்பறவை என்று பொருள்பட ‘ஆசாத்’ என்றான். சுளீர்! சந்திரசேகர் ‘ஆசாத்’ என்ற புரட்சி வீரனின் ஜென்ம தினம் ஜூலை 23, 1906. ஹிந்துஸ்தான் சோஷலிஸ்ட் ரிபப்ளிகன் என்ற அமைப்பை தோற்றுவித்தது, நம்ம ‘ஆசாத்’, பகத் சிங்க், சுக்தேவ், ராஜ்குரு. ‘ஆசாத்’ ஹனுமத் உபாசகர். ஜாலியன்வாலா பாக்  படுகொலை (அதை பற்றி எழுதணும்.) இவரை மிகவும் பாதித்தது. வைஸ்ராய் பயணித்த ரயில்வண்டியை தகர்க்க முயன்றது (1926), ககோரி ரயில் கொள்ளை (1926), லாலா லஜ்பத் ராய்  மரணத்துக்கு பழிக்கு பழி என்று ஸாண்டர்ஸ் கொலை என்று தீவிர வாத குற்றம் சாட்டிய வழக்குகள். பாருங்கள், விதி விளையாடுவதை! 
      ஃபெப்ரவரி 27, 1990 அன்று, சந்திரசேகர் ‘ஆசாத்’ தோட்டத்தில் (முற்காலம் ஆல்ஃப்ரெட் பார்க்), 1931ம் வருடம் இங்கு தன் கையாலேயே வீரமரணம் அடைந்த சந்திரசேகர் ‘ஆசாத்’ அவர்களுக்கு, அஞ்சலி செலுத்த சென்றிருந்தேன். அலஹாபாத் நகரம். ஒரு முதியவர், ‘இங்கு தான் வந்தார், இப்படித்தான் போனார், இங்கு தான் துரோகிகள் காட்டிக்கொடுத்தனர். இங்கு தான் சுட்டுக்கொண்டார். இங்கு தான் அவரது பூதவுடல் கிடந்தது’ என்று காண்பித்தார். 1931ல் அவர் சிறுபையனாக இருந்திருக்கலாம். வெள்ளைக்காரன் ஆட்சியில் போய் பார்த்திருப்பது துர்லபம். ‘உங்களுக்கு எப்படி தெரியும்’ என்று கேட்டேன். தன்னுடைய தந்தை காண்பித்ததாகச் சொன்னார். கனத்த மனதுடன் திரும்பி வந்தேன்.

2. எந்த வீட்டுப்பிள்ளையோ? எங்கேயோ பொறந்து எங்கேயே கண்காணாதத் தேசத்திலே அல்பாயிசுலே போயிட்டான் என்றாலும், எரிநக்ஷத்ரம் மாதிரி தோன்றியவுடன் மறைந்த இந்திரலால் ராய் (டிசம்பெர் 2, 1898 ~ ஜூலை 23, 1918) என்ற ராயல் ஏர்ஃபோஸ்ஸின் இந்திய விண்மீனை பற்றி எழுதத்தான் வேண்டும். அந்த 19 வயது பாலகனின் அம்மையாவது மின் தமிழில் நம்ம பையனை பற்றி வந்திருக்கிறதே, என்று தேவருலகத்தில் ஆனந்திப்பாள். அன்னையும் பிதாவும் கொல்கத்தாவில் பிரபல கல்வியாளர்கள். இவன் படித்ததோ,லண்டனின் பிரபல பள்ளி ஒன்றில். 17 வயதில் ராணுவத்தில் அதிகாரியாக வேலை அமர்ந்தது. இல்லை, பறந்தது! வேலை அப்படி. 13 நாட்களில் பத்து தடவை வாகை சூடினான். அடுத்த தடவை நடந்த ஆகாயப்போரில், இவனது விமானம் எரிந்து நொறுங்கியது. அமரனானான். அந்த விமானப்படையின் தலை சிறந்த மெடல் தரப்பட்டது, அதற்கு பிறகு. இந்தியாவின் விமானப்படை தந்தை என அறியப்படும் ஸுப்ரடோ முக்கர்ஜி, இவனுடைய மருமான்.
  
   இன்னம்பூரான்
   23 07 2011
   உசாத்துணை:

Sri SritharanSat, Jul 23, 2011 at 2:29 PM
Reply-To: mintamil@googlegroups.com
To: மின்தமிழ்

எகிப்து - புரட்சி நாள் (1952)


1967 - அமெரிக்காவின் வரலாற்றில் மிகப் பெரும் கலவரம் ஆபிரிக்க அமெரிக்கர்கள் செறிந்து வாழும் டிட்ராயிட் நகரில் இடம்பெற்றது. 43 பேர் கொல்லப்பட்டு 342 பேர் காயமடைந்தனர். ஆயிரத்துக்கும் அதிகமான கட்டிடங்கள் எரிக்கப்பட்டன.


1983 - கறுப்பு யூலை: இலங்கையில் இரண்டு வாரங்களில் 3000 தமிழர்கள் சிங்கள பௌத்த இனவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு ஆரம்பமானது.

Blackjuly.jpg
1995 - ஹேல்-பொப் என்ற வால்வெள்ளி சூரியனுக்கு வெகு தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டது. இது கிட்டத்தட்ட ஓராண்டிற்குப் பின்னர் வானில் தெரிந்தது.



________________________________

N. Ganesan Sat, Jul 23, 2011 at 2:37 PM
Reply-To: mintamil@googlegroups.com
To: மின்தமிழ்


On Jul 23, 8:29 am, Sri Sritharan <ksthar...@hotmail.com> wrote:
> எகிப்து - புரட்சி நாள் (1952)
>
> 1967 - அமெரிக்காவின் வரலாற்றில் மிகப் பெரும் கலவரம் ஆபிரிக்க அமெரிக்கர்கள் செறிந்து வாழும் டிட்ராயிட் நகரில் இடம்பெற்றது. 43 பேர் கொல்லப்பட்டு 342 பேர் காயமடைந்தனர். ஆயிரத்துக்கும் அதிகமான கட்டிடங்கள் எரிக்கப்பட்டன.
>
> 1983 - கறுப்பு யூலை: இலங்கையில் இரண்டு வாரங்களில் 3000 தமிழர்கள் சிங்கள பௌத்த இனவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு ஆரம்பமானது.
>
கறுப்பு யூலையிலிருந்து இன்றும் தொடர்கிறது
ஈழத் தமிழர் துயரம். புலஞ்சிதறிய தமிழர்கள்
வழிகாட்டலைவிட, அங்கு வாழ்வோர் முடிவெடுத்து
நல்வாழ்வு பெற இறைவன் அருளவேண்டும்.

நா. கணேசன்

> 1995 - ஹேல்-பொப் என்ற வால்வெள்ளி சூரியனுக்கு வெகு தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டது. இது கிட்டத்தட்ட ஓராண்டிற்குப் பின்னர் வானில் தெரிந்தது.
>
> ________________________________

Innamburan Innamburan Sat, Jul 23, 2011 at 4:01 PM
To: mintamil@googlegroups.com
Bcc: innamburan88
நன்றி இருவருக்கும். நான் நீங்கள் எடுத்தாண்ட நிகழ்வுகளை மிகுந்த நேரம் அசை போட்டபின்,அவற்றை விட்டு விட்டு, நான் கூறியவற்றை மட்டும் பதித்தேன். நான் எடுப்பதை விட, விடுப்பது தான் நேரமும், பிரயாசையும் எடுத்துக்கொள்கிறது. உதாரணத்திற்கு, ஃபரூக்கையும், நகீப்பையும், நாசரையும் அந்தக்காலத்திலேயே விமரிசித்தவன், நான். அன்றைய புரட்சி, இன்றைய புரட்சிக்கு கொண்டுபோனதே மனித இனத்தின் அவலம். அதை பற்றியெல்லாம் எழுத தகுந்தத் தருணம் கிடைக்கவேண்டும். எழுத சக்தி வேண்டும். நேற்றை விட இன்று சுகவீனம். போன வருடம் பல நிகழ்வுகளை நான் பட்டியலிட்டபோது, பொது மன்றத்துக்கு அலுப்பு தட்டியது; நண்பர் சிறீதரனும், நான் எழுதுவது 'ஞாயமா?' என்று கேட்டு கட்டிப்போட்டார். 
ஒரு வேண்டுகோள்: மற்ற சமாச்சாரங்களை, கருணை கூர்ந்து வேறு இழையில் எழுதுங்களேன். வேண்டுகோளை நிராகரிக்க உங்களுக்கு முழு உரிமை உண்டு.
நன்றி, வணக்கம்,
இன்னம்பூரான்
23 07 2011

No comments:

Post a Comment