Sunday, April 14, 2013

‘பாரத தேசமென்று பெயர்சொலலுவார்...’ 4




‘பாரத தேசமென்று பெயர்சொலலுவார்...’ 4

Innamburan S.Soundararajan Sun, Apr 14, 2013 at 8:47 AM
To: Innamburan Innamburan
‘பாரத தேசமென்று பெயர்சொலலுவார்...’ 4
Inline image 2
தேசமுன்னேற்றத்துக்கும், சமுதாய மறுமலர்ச்சிக்கும், தனிமனிதர்களின் வாழ்வாதாரத்துக்கும் கல்வி தான் அடித்தளம் என்பது கண்கூடு. மற்றும் பல பண்புகளும் அத்தியாவசியம் என்பதிலும் ஐயமில்லை. அவை யாவற்றையும், ஒன்றன் பின் ஒன்றாக நாம் கலந்தாலோசிப்போம். கல்வியை பற்றி சில சிந்தனைகள்:
  1. கல்வி ஒரு மகரந்தம். அது பரவுவதற்கு எல்லை இல்லை.
  2. ஆரம்பக்கல்வி கட்டாயமாக இருக்கவேண்டும்; இலவசமாக இருக்க வேண்டும். அரிச்சுவடி பாடங்கள் பிறப்புரிமை. அரசு தன் கடமையை செய்ய வேண்டும். சமுதாயம் அதை வற்புறுத்தவேண்டும். தனி மனிதர்கள் அதற்காக போராட வேண்டும்.
  3. சிறார்களுக்கும், வயது வந்தோர்களுக்கும் எண்ணையும், எழுத்தையும் ( இன்றைய கால கட்டத்தில் கணினி பயன்பாடும்) சொல்லிக்கொடுக்க கொழுத்த முதலீடும், மாட மாளிகைகளும், புலவர்களும் அமைவதற்குக் காத்திருக்க வேண்டியதில்லை. நம்மில் பெரும்பாலோர் தன்னார்வ பள்ளிகள் நடத்த முடியும். பள்ளி செல்லும் மாணவர்களுக்குக்கூட திட்டமிட்டு பேருதவி செய்யமுடியும். நாம் ஏன் அவ்வாறு செய்யாமல் தயங்குகிறோம்? வாரத்தில் எட்டு மணி நேரம் தந்தால், அது பேருதவி. கிராமம் தோறும், பேட்டை தோறும் இதை செய்ய முடியும். 
  4. ஆதாரக்கல்வி முதல் நிலை. மாணவர்களிடையே, பள்ளிப்பாடத்துடன் நிற்காமல், ஒரு விகசித்த அணுகுமுறையை பயிற்றுவைக்க வேண்டும். அதற்கு நூலகங்களும், அன்றாட அறிவுரையும் தேவை. படித்து பயன் பெற்றவர்கள், இதை ஏன் செய்யக்கூடாது?
  5. மாணவர்களுக்கு தன்னம்பிக்கையும், சிந்தனா சக்தியும், அறிவு தாகமும் திட்டமிட்டு புகலமுடியும். பள்ளி நிறுவனங்களும், பெற்றோர்களும் ஏன் இணைந்து பணி செய்யக்கூடாது?
திரு. சந்திரமோஹன்:
வாணிபம் செய்பவர்கள் விலை போகும் சரக்கைக் கையாள்வார்கள். கல்வி விலைபோகும் சரக்கு.  அருமையாக சொன்னீர்கள்: ‘...Speak the real value every where. Identify valuable personalities who are still remaining uncorrupt and back them.  Continue sponsoring poor students. Show them gentle and noble  gestures and direct them to a right guru. This is the need of the hour...’. நீங்கள் நாள்தோறும் இவ்வாறு செய்கிறீர்கள் என்று நினைக்கிறேன். இவ்வகையில் உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். 
சுபாஷிணி:
உமது கேள்வி நியாயமானது. எனக்கு உடன்பாடு தான். விடுதலை வீரர்களின் வரலாறு பரவ வேண்டும். அது தேசாபிமானம், சமுதாய மறுமலர்ச்சி ஆகியவற்றை உந்தவேண்டும் என்பது என் கருத்து. சிலைகள் தேவையில்லை. ஆனால், சந்ததி வறுமையை பற்றி சில வரிகள்:
  • ‘...இன்பதுன்பங்களை சமமாக பாவிக்க வேண்டும் என்ற கவியின் உபதேசப்படி, நான் வாழ்நாளைக் கழித்து வந்திருப்பதால், வறுமை என்னை வென்று விடாது...’ [செல்லம்மா பாரதி: 30 04 45: கல்கி இதழுக்கு: cited: http://s-pasupathy.blogspot.co.uk/2012/09/3_12.html]
  • செக்கிழுத்த வ.உ.சி. அவர்கள் தியாக செம்மல். அவர் தன் மகன் வேலைக்கு சிபாரிசு தேடினார். நாட்டுக்காகத் தன் செல்வத்தைத் தொலைத்த பக்தனின் வறுமை; அதன் கொடுமை.
  • தமிழுக்கு தான் செய்த பணியை சொல்லி, நோயும், வறுமையும், பசிக்கொடுமையும் வாட்டிய போது, யாசகம் செய்தார், புதுமைப்பித்தன். தமிழன் கண்டு கொள்ளவில்லை.
  • சமீபத்தில் தி.ஜ.ர. அவர்களின் வாரிசு வாடுவதாக செய்தி வந்த போது, பெரிதும் பேசப்பட்டது. அத்துடன் சரி. நான் தனிப்பட்ட முறையில் எடுத்த முயற்சிகள் வீண். இத்தனைக்கும், அவரது படைப்புகளில் சில நாட்டுடமை செய்யப்பட்டன. அந்த நிதி வரவு என்ன ஆச்சு? தெரியவில்லை.
  • தமிழ் படைப்புகள் நாட்டுடமை ஆனதில் அரசியல் விளையாடியது. பிரசுரகர்த்தாக்கள் செல்வம் தீட்டினர்.
சுருங்கச்சொல்லி, சுபாஷிணி, ஒவ்வொருவரின் நிலைமையும் வேறு, வேறு. தாரதம்யம் தேவை. 
தியாக உள்ளம் படைத்தவர்கள் பிற்காலமும் இருந்தனர்: எஸ்.ஆர்.சங்கரன் ஐஏஎஸ் போன்ற சிலர். விரல் விட்டு எண்ணி விடலாம். 1947க்கு முன்னால் கணக்கில் அடங்காத தேசாபிமானிகள். சமுதாய நலன் ‘சிறுதுளி பெருவெள்ளத்திற்கு’ சரியான உதாரணம். நம்மில் யாவரும் கடுகளாவது சமுதாய நலனுக்கு உழைக்க முடியும். அது போதும். ஒரு ராஜாராம் மோஹன் ராய், ஒரு திரு.வி.க., ஒரு மஹாத்மா பூலே; 
பிற பின்னர்.
இன்னம்பூரான்
28 03 2013
சித்திரத்துக்கு நன்றி: http://eluthu.com/images/poemimages/k/106995.gif

No comments:

Post a Comment