Sunday, April 14, 2013

தணிக்கை செய்வதில் தணியா வேகம்: பல்ப் வாங்கின கதை: 6




தணிக்கை செய்வதில் தணியா வேகம்: பல்ப் வாங்கின கதை: 6

Innamburan S.Soundararajan Sun, Apr 14, 2013 at 11:01 AM


Innamburan Innamburan <innamburan@googlemail.com>
1/7/10

தணிக்கை செய்வதில் தணியா வேகம்: பல்ப் வாங்கின கதை: 6

இப்படியாக நாளொரு மேனியாக, பொழுதொருவண்ணமாக, ஏ'ஜீ. ஆஃபீஸ்லே நான் குப்பைக்கொட்ட ஆரம்பித்த வேளையிலே, ஃப்ண்ட்ஸ் 4 என்ற பிரிவையும், என் தலையில் கட்டினார்கள். அந்த்க்காலத்து கணினி போன்ற, கணினி இல்லாத விசித்ர மிஷின் ஒன்றில், கலைமாமணி சான்றிதழ் போன்ற மாபெரும் அட்டை ஒன்றைப்பொருத்தி (லெட்ஜெர் கார்ட்),  'டொக்' டொக்' என்று அடிப்பார்கள். சிக்கல்கள் பல, விட்டகுறை, தொட்டகுறை, புதிர்கள் யாவற்றையும் தாண்டி, அரசு ஊழியர்களின் க்ஷேமநிதி கணக்குப்போடப்படும்.ஃப்ண்ட்ஸ் 4  சங்கக்காலத்து பாலை/சுரம் மாதிரி. வறண்டப்பிரதேசம். கொட்டைப்போட்ட பழம்பெரும் அதிகாரிகள், தாக்கு பிடிக்காமல் ஓடிவிட்டார்கள் என்ற கீர்த்தி வேறு. போதாக்குறைக்கு, ஏ.ஜீ. என்னிடம் சொன்னார், 'இது உனக்கு பரிக்ஷை. தினந்தோறும் எனக்கு ரிப்போர்ட் செய்யவேண்டும்'. என்று.
அதிர்ஷ்டம் பாருங்கோ! அப்பத்தான், நானும் வஸந்தாவும் தனிக்குடித்தனம் போனோம். அவளுக்கு ஹிந்திப்பாட்டுன்னா, அப்டி ஒரு மோஹம். விட்டுக்கொடுப்பாரோ, தோப்பனார்? என்னிடம் ஒரு முன்னூறு ரூபாய் கொடுத்து, ரேடியோ வாங்கிக்கச்சொன்னார். (அந்த வால்வ் ரேடியோ இன்னும் இருக்கு. தமிழ்த்தேனீ சாட்சி.) அலைந்தோம்; அலசினோம், ஆய்வுகள் பல செய்தோம், போன வீடுகளில், ரேடியோ மட்டும் தான் கண்ணில் பட்டது. ஆக மொத்தம், ஜீ.ஈ.ஸி ரேடியோ செட்டாச்சு.
இந்த காலகட்டத்திலே, ஃபண்ட்ஸ் 4 மிஷன்கள் மக்கார் செய்ய, ஓடிப்போய் பார்த்தேன். மிஷனுக்குள் ஒளி விடும் பல்ப் ஃப்யூஸ்! உடனே, மிஷின்கம்பேனிக்காரன், ரெமிங்டன் ரேண்ட் வந்தார்கள். இரண்டு பல்ப் தான் இருந்தது. தேவையோ பத்து. இரண்டு போட்டுவிட்டு, 'பாப்பத்தியம்மா! மாடு வந்தது...' என்ற தோரணையில் போய்விட்டார்கள், ஒரு பல்ப் ரூபாய் 11/- என்று பில்லைக் கொடுத்துவிட்டு. ஷெர்லாக்ஸ் ஹோம்ஸ் ஆகிய அடியேன், ஜீ.ஈ.ஸி என்ற அட்டை டப்பாவை பத்திரபடுத்திக்கொண்டேன். ரேடியோக்கூட, எட்டு பல்ப், இரண்டு ரூபாய் ரேட்டிலே. விஷயத்தைக்கேட்டு ஏ.ஜீ. அகமகிழ்ந்தார். தட்டிக்கொடுத்தார். நானும் தக்க சமயம் பார்த்து டைய்லி ரிப்போர்ட்டை நிறுத்திவிட்டேன். பல்ப் காசு வர ஒரு மாதம் ஆயிற்று.  வஸந்தாகிட்ட டோஸ்.  ஏன் டிலேன்னு கேட்டாதானே சொல்லலாம்?
இன்னம்பூரான்.

எஸ் ஒ எஸ். பத்தாமபசலியின் பிழைத்திருத்தம்: பலப் x   
Geetha Sambasivam 
1/7/10
to mintamil
 
//ரேடியோக்கூட, எட்டு பல்ப், இரண்டு ரூபாய் ரேட்டிலே. விஷயத்தைக்கேட்டு ஏ.ஜீ. அகமகிழ்ந்தார். தட்டிக்கொடுத்தார்.//

அது சரி, மாமனார்????


 //நானும் தக்க சமயம் பார்த்து டைய்லி ரிப்போர்ட்டை நிறுத்திவிட்டேன்.//

ஹிஹிஹி


// பல்ப் காசு வர ஒரு மாதம் ஆயிற்று.  வஸந்தாகிட்ட டோஸ்.  ஏன் டிலேன்னு கேட்டாதானே சொல்லலாம்?////

ஏ.ஜி. தான் அகமகிழ்ந்தார், வீட்டிலே டோஸ் வாங்கிண்டு தான் ஆக்ணும்!  காசு வந்தது இல்லை???


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email tominTamil@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
*

No comments:

Post a Comment