Sunday, April 14, 2013

தணிக்கை செய்வதில் தணியா வேகம்: 'கம கம' ப்பூவும், மணக்காத நாரும்!: 8

Innamburan S.Soundararajan


தணிக்கை செய்வதில் தணியா வேகம்: 'கம கம' ப்பூவும், மணக்காத நாரும்!: 8



1/7/10

 தணிக்கை செய்வதில் தணியா வேகம்: 'கம கம' ப்பூவும், மணக்காத நாரும்!: 8
கீர்த்தனாரம்பக்காலத்திலே - அதாவது, நான் தலையெடுத்து நாலு காசு (ரூபாய் 152/- மைனஸ் ஸ்டாம்புக்காசு) சம்பாதிக்க ஆரம்பித்தபோது தான் -  'பூவுடன் சேர்ந்த நாரும் மணக்கும்' என்ற சொலவடை  மாயக்கூற்று என உணர்ந்தேன். .புஷ்பத்திற்கு உபமானமாக துட்டு என்றால், அதை அரவணைக்கும் ரெவென்யூ ஸ்டாம்பு நார் எனலாம். காசு 'கம கம' . நாற்றமில்லா ஸ்டாம்ப்.
 
யார் செய்த முன்வினையோ, ரயில்வே ஆடிட் என்னை ஒதுக்க (அது ஒரு கதை), ஏ.ஜீ ஆந்திரா அட் மட்றாஸ் என்னை ஏற்றுக்கொண்டது, 'ஆடிட்டர்/ அப்பர் டிவிஷன் குமாஸ்தாவாக. அடயார் பாரக்ஸ்,  அடையாரிலிருந்து காத தூரம்,!துறைமுகம் அருகில். அங்கு தான் ஆஃபீஸ். நடராஜா ஸர்வீஸ். மெரீனா பீச் வழியாக நடை. முதல் நாள் கருவூலக்கணக்கை சரி பார்க்கச் சொன்னார்கள்.ரொம்பத்தப்புதப்பா இருந்தது. எல்லாம் தலைகீழ். நான் சரி பார்த்த்தை ஸூபரின்டெண்ட் மெச்சினார்.  அடிக்கடி இப்டி இருந்தா 'ட்ரெஷரி இர்ரெகுலரிட்டி' அப்படின்னு ப்ளாக் மார்க் கொடுப்போம். ஒரு நாள் அந்த மாதிரி வாங்கி கட்டிண்ட கருவூல அதிகாரி ஒருவர் பக்கத்து வீட்டுக்கு வந்திருந்தார். யோகக்ஷேமங்கள் விசாரித்த பிறகு, இது பற்றி என் ஆழ்ந்த கவலையை தெரிவித்தேன் அவரோ அப்டியான்னு கேட்டார். வேலை ஜாஸ்தியா இருக்கு.  ஏ.ஜீ. அஃஃபீஸ் கடிதமெல்லாம் படிக்கறதில்லை என்றார். எனக்கு சுரத்து இறங்கிப்போச்சு. 
35 வருஷத்திற்கு அப்பறம், உத்தர் பிரதேசத்தில் கருவூலக்கணக்கை பரிசோதித்தேன். 35 வருஷத்திற்கு முன்னால் மத்ராஸில் பார்த்ததை விட மட்டமாக இருந்தது. இதெல்லாம் தீராவழக்குன்னுட்டு, அப்போதே நான் ஸ்டாம்ட் ரசீது பக்கம் போனது சரியாகப்பட்றது. இது நிற்க.
 
அட்யார் பேரக்ஸ்லேருந்து.  ட்ராக்டர்லே, கவர்மன்ட் 
கடுதாசியெல்லாம் எடுத்துண்டு எக்ஸ்ப்ரெஸ் எஸ்டேட்லே பாசறை அமைத்தோம். அப்போ வந்த ஸூபெரிடெண்ட் ஒரு மாதிரி.  அபரிமிதமாக ஆடிட் குறைபாடுகள் கண்டுபிடிக்கணும். அப்றம் தீர்த்தும் வைக்கணும். இது என்ன 'ஸேம் சைட் கோல்'னு கேட்டேனாம். டீ.ஏ.ஜீ.கிட்ட வத்தி வச்சுட்டார்!
 
கிட்டத்தட்ட ஆறு மாதம் போச்சு. முதல் மூன்று மாதம், போன மாஸம் சென்னையிலெ பெய்ததே, அந்த மாதிரி, ஆடிட் அப்ஜெக்ஷன் மாரி பெய்த வண்ணமும், அடுத்த மூன்று மாதங்கள் ஸெட்டில்ட் ஆடிட் அப்ஜெக்ஷன்'  மாரி பெய்த வண்ணமும்!!! எல்லாருக்கும் சந்தோஷம்.
 
நம்ம ஸல்யூஷன் எளிது. எளிது.  செக்க்ஷனில் உள்ள எல்லா குமாஸ்தாக்களும் உள்கை. முதல் மூன்று மாதங்கள் வந்த ஸ்டாம்ப்ட் ரசீதுக்களை உருவி தனித்து வைப்போம். அவை வரவில்லை என்று பலமாக அப்ஜெக்ஷன் போடப்போட, ஸூப்ரிண்டெண்ட் ஐயா ஜாலியா கையொப்பம் இடுவார். அடுத்த மூன்று மாதம், அவற்றை இணைத்து, வந்த்தாக கூறி நன்றிக்கடிதம் போட்டு, அப்ஜெக்ஷன் நீக்குவோம். ஸூப்ரிண்டெண்ட் ஐயா  கையொப்பம் இடுவார், இன்னும் ஜாலியா.
டீ.ஏ.ஜீ.கிட்ட நல்லபெயர். கொஞ்சநாட்களுக்கு பிறகு வேலையை விட்டு விட்டேன். ஆனால், ஆந்திரப்பிரதேஷ் தப்பவில்லை.
மிகைப்படுத்தவில்லை,கற்பனை ஒழித்துவிட்டேன் என்றாலும், பொது நலம் கருதி, சில விஷயங்களை தவிர்த்து விட்டேன்.


இன்னம்பூரான்

சித்திரத்துக்கு நன்றி:
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhToYe0-MzgYIrOGwLNPL48JRlqQnbyILVDTqIz0ePbVEX7-uh_FAjeXx0gMp5MqP4hMl0jeqmhJal2xY87uERbbFqqmuJJEu4MwwHba8yj-2xhp3tC3fncax320rLq8xYAdwduALBVeYNq/s1600/1931881224_47eac98e29.jpg

No comments:

Post a Comment