Wednesday, April 17, 2013

நெட்டில் வந்த பிட்டு




நெட்டில் வந்த பிட்டு
10 messages


Innamburan Innamburan Tue, Oct 12, 2010 at 5:28 PM
காற்றினிலே பறந்து வந்தது, கண்ணபெருமானே! 
சாற்றுங்கால், இடைச்செருகல் யாதுமில்லை!
போற்றும்படி யாதுமில்லை எனினும், கண்ணா!
தூற்றாமல் இருந்தாலே போதுமப்பா!

இன்னம்பூரான்
நெட்டில் வந்த பிட்டு


"கருணைக்கிழங்கிலே  நந்தலாலா
உந்தன் கருணையே கண்டேன் நந்தலாலா
ரசம்  பிரம்மன் என்று பறை சாத்துகிறது வேதம்
ரசத்திலே உந்தன் சுவையே கண்டேன் நந்தலாலா
வெற்றிலையிலே உலகம் வெறும் மாயை
என்று நீ கீதையில் போதித்த  தத்துவத்தையே
நன்கு உணர்ந்து  கொண்டேன்  நந்தலாலா
கத்தரிக்காயிலே பற்றை கத்தரிக்க வேண்டும்
என்ற தத்துவத்தையே கண்டேன் நந்தலாலா
தயிரிலே உந்தன் மன வெண்மையே கண்டேன் நந்தலாலா
கறியிலே உந்தன் உடலைக்காக்கும் ஆர்வத்தையே
நன்கு கண்டேன் நந்தலாலா
பாயசத்திலே உந்தன் இனிமையே கண்டேன் நந்தலாலா
சமையல் அறையே உந்தன் கோவில்
என்றே காண்கிறேன் நந்தலாலா,
பிறர்க்கு பரிமாறும் காரியம் 
உனக்கு நான் செய்யும் சேவை என்றே
நான் என்றும் உணர்ந்தே உன்னை
அனவரதம் வழிபடுகிறேன் நந்தலாலா
உன் பொற்பாதங்களே எனக்கு
என்றும் தஞ்சம் தர வேண்டும் 
முருகா சரணம், முருகா சரணம்.
                   ----S.Balasubramanian

ARajagopalan

ஆராதி Wed, Oct 13, 2010 at 1:39 AM

திரு இன்னம்பூராரே,

நெட்டில் வந்த பிட்டு
மின்தமிழ் வாயில் இட்டு
கவிதை மழையாய்க் கொட்டு.
கிடைக்குமோ மேலும் திட்டு
என்பதை மறந்து விட்டு
உமக்குச் சாத்துவேன் பீதாம்பரப் பட்டு.

அன்புடன்
ஆராதி


coral shree Wed, Oct 13, 2010 at 2:52 AM

கண்ணபெருமானே உன் படைப்பின் ஆற்றல்
உனக்கே ஆச்சரியமூட்டுகிறதோ?                                                                                                                                                               பின் ஏன் நீ புல்லாங்குழலினுள் உன் முகம் புதைத்தாய்?                                                                                 ஓ, அந்த புல்லாங்குழல்தான் உன் படைப்பின் அற்புதமோ?                                                அந்த அற்புத இன்னம்பூராரை உன் கைகள் தாங்கிக் கிடக்கிறதோ?



coral shree Wed, Oct 13, 2010 at 2:56 AM


பிட்டென்றால் சாதாரண பிட்டா இது? தெய்வப் பிரசாதம் அய்யா! அருமை......அருமை........

2010/10/12 Innamburan Innamburan <innamburan@googlemail.com

Subashini TremmelWed, Oct 13, 2010 at 5:41 PM

இது என்ன நளபாக கண்ணபிரான் வழிபாடாக இருக்கின்றதே. இந்த பாலசும்ரமணியன் சரியான சாப்பாட்டு ராமனாக இருப்பார் போலிருக்கின்றதே. :-)
நந்தலாலா என்று ஆரம்பித்து முருகனுக்கு சரணம் போட ஆரம்பித்து விட்டார்.
 
-சுபா


Subashini Tremmel Wed, Oct 13, 2010 at 5:42 PM

பிட்டு, இட்டு கொட்டு திட்டு விட்டு பட்டு..
ரசித்தேன் உங்கள் கவிதையை..:-)
 
-சுபா

chithra chithra Thu, Oct 14, 2010 at 2:34 PM
arumaiyana  virundhu padaichuteenga sir superb

2010/10/12 Innamburan Innamburan <innamburan@googlemail.com

Innamburan Innamburan Sun, Mar 20, 2011 at 2:06 PM

தகுமோ, ஐயா, இது தகுமோ! 
         நெட் என்னும் மாயவலையிலே,
சிக்கியதெல்லாம் பொறுக்கலாமோ?
         சட் என்று அதை ஒதுக்கி விடலாமே.

- இன்னம்பூரான்
20 03 2011

பி.கு. நெட்டில் பிட்டுகள் வந்தாலும், அழுகிய மட்டைகளும், மிதந்து, ஊர்ந்து, பறந்து, ஓடோடி வந்து விழுந்த வண்ணம் இருப்பதைக் கண்டு சோர்ந்து, களைப்புற்று எழுதப்பட்ட மடல்.


2010/10/14 chithra chithra <senkichithra@gmail.com>:
[Quoted text hidden]

selva kumaran Sun, Mar 20, 2011 at 5:11 PM

:)))))))))))))

கொன்னுபுட்டார் :))))))))))))))))))))
[Quoted text hidden]

Innamburan Innamburan Fri, May 27, 2011 at 2:08 PM

இன்று நெட்டில் வந்த பிட்டில் ஒரு பிட்டு:

'...பின்னால் நான் என் திருமணப் பத்திரிகையைப் புதுமாதிரியாய் நானே அழைப்பதுபோல் போட்டு நண்பர்களுக்கு அனுப்பியபோது ஸ்ரீ ‘சிட்டி’ அவர்கள், “மிக்க மகிழ்ச்சி , வந்து சேருகிறேன். நீ இன்னும் குடுமிதான் வைத்துக் கொண்டிருக்கிறாயா?” என்று கேட்டு எழுதினார். (நான் இன்னும் குடுமிதான் வைத்துக் கொண்டிருக்கிறேன்.)..' -கரிச்சான் குஞ்சு,

இன்னம்பூரான்
27 05 2011

Photo Credit;http://www.netbit.com.mk/images/LogoNetBitEN.gif

No comments:

Post a Comment