Wednesday, April 17, 2013

பாதிக்குப் பாதி; அதிலும் பாதி!



பாதிக்குப் பாதி; அதிலும் பாதி!

Innamburan Innamburan Fri, Feb 22, 2013 at 10:56 AM


பாதிக்குப் பாதி; அதிலும் பாதி!

பாரத தேசத்தின் தரகர்கள் மகாநாடு ஒன்று கூடினால் அவர்களின் ஏகோபித்தத் தீர்மானம் உளவுத்துறையை அமுக்கி, தணிக்கைத்துறைக்குத் தண்ணி காட்டி, விழித்திருக்கும் விஜிலன்ஸ் துறையை வீழ்த்தி, நீதித்துறையை நிந்தித்து, லஞ்சலாவண்யத்தின் கையேடாக அமையும். பெங்களூரு நில முழுங்கிகளை காட்டிக்கொடுத்தது ஆடிட் ரிப்போர்ட். அது பெரிய கதை. கேட்டால் சொல்லலாம். விஜிலன்ஸ் துறை தப்பு தண்டா செய்பவர்களின் விலாசத்தை பொதுமன்றத்தில் வைத்து விடுகிறது. வேதாளம் முருங்கைமரம் ஏறிய மாதிரி, நீதித்துறையில் அன்றும், இன்றும், என்றும் 2ஜி நீந்தி வருகிறது, உள்குத்து உள்பட.

இப்போதைக்கு உளவாளிகளின் (ஸீ பி ஐ) கை வண்ணம் காண்போம். சுபி மல்லி என்ற குட்டி நீராடியாவின் ‘பாதிக்குப் பாதி;அதிலும் பாதி!’ கைங்கர்யத்தைக் கண்டு மலைத்து நிற்போம். இந்திய ராணுவத்துக்கு சொந்தமான தளவாட உற்பத்திசாலைகள் பல. தரம் தாழ்ந்த தளவாடங்களால் ஜவானின் உயிர்ச்சேத அபாயமுண்டு. அதை தவிர்க்கத்தான் என்றுமே நேரடி (நீராடியா அல்ல!) கண்காணிப்பில் இருக்கும் இந்த தொழிற்சாலைகள் நிறுவப்பட்டன, நாடு முழுதும் - அரவங்காடு வெடிமருந்து முதல், ஆவடி டாங்கி, இஷாப்பூர் துப்பாக்கி வகையறா. 

அவற்றில் ஒன்று மேடக் என்ற ஆந்திரபிரதேச நகரில். பீரங்கிப்படையின் டாங்கிகளுக்கு சக்கரங்களுக்கான உறுப்பு ஒன்று வாங்க டெண்டர் போட்டார்கள். SIFL & AMW-MGM: இரண்டு கம்பேனிகள் மட்டுமே போட்டி. பாருங்கள்: மேடக் ஒரு சின்ன ஊர். அதற்கு அகில இந்திய மஹாத்மியம். மும்பையிலிருந்து சுபி மல்லி என்ற தரகம்மையார் திருச்சூர் வந்திறங்கி, ஆவன செய்து, SIFL க்கும் மேடக் தளவாட  தொழிற்சாலைக்கும் சொந்த பந்த உறவு ஏற்படுத்தி,  ஒரிஜனலை விட 40% அதிக விலையில் ஒப்பந்தம் SIFLக்குக் கிடைக்க வழி வகுத்தார். அதற்குக் கைக்கூலி 12% (16 லக்ஷம் ரூபாய்). அதில் பாதி மேடக் தளவாட  தொழிற்சாலை அதிகாரிகள் இருவருக்கு என்று திருடர்கள் செய்துகொள்ளும் தார்மீக உடன்படிக்கை; எல்லாம் வாய் வார்த்தை தான். தரகம்மையார் தன் வாக்கைக் காப்பாற்றி, அதை கொடுத்து விட்டார். அதில் பாதியை (4 லக்ஷம் ரூபாய்) வல்ஸன் என்ற அதிகாரியின் வீட்டிலிருந்து உளவுத்துறை கைபற்றியது. தன் வாக்கைக் காப்பாற்றிய தரகம்மையார் உளவுத்துறையுடன் ஒத்துழைக்க சம்மதித்துள்ளார் என்று செய்தி. திருடர்கள் செய்துகொள்ளும் தார்மீக உடன்படிக்கைபடி அவ்வாறு செய்யமாட்டேன் என்று அவர் உறுதி கூறவில்லை என்று ஊகம். 

லால் பஹதூர் சாஸ்திரி அவர்கள் ‘ஜய் ஜவான்!’ என்றார். அவர்கள் பாவம் பிழைத்துப்போனால் சரி.
இன்னம்பூரான்
22 02 2012



fractions-of-a-whole-numbers.jpg
7K

No comments:

Post a Comment