Thursday, April 18, 2013

தண்டோரா! Nov 15, 2011 & 20 11 2011




தண்டோரா!
Nov 15, 2011 & 20 11 2011

Innamburan Innamburan Tue, Nov 15, 2011 at 9:54 PM

தண்டோரா!
ist2_6619956-indian-drums.jpg
சாமியோவ்! தாய்க்குலமே! சின்னப்பசங்களா!
டும்! டும்! டும்! அஞ்சு நிமிஷம் முன்னாலெ வந்த சேதி. விடிவு காலம் வந்துருச்சு. எல்லாரும் காது குடுத்துக் கேளுங்கோ. 62 வருஷங்களுக்கு முன்னாலெ, ஊர்லெ இருக்கற பெரியமனுஷா எல்லாரும் டில்லிலெ டேரா போட்டு, இந்திய மக்கள் ஆளும் குடியரசு அப்டீன்னு முதுகிலெ ஷொட்டுக்கொடுத்துண்டு இந்திய அரசியல் சாஸனத்தை விமரிசையாக பிரகடனம் பண்ணச்ச, இந்தியாவில் பிறந்த பசங்களுக்கு எல்லாம் ஆரம்ப கல்வி கட்டாயமா இலவசமா இருக்கணும்னு பேசிகிட்டாஹ. ஆனா, சாக்கிரதையா, அதை அடிப்படை சட்டமா போடாமா, மேலெழுந்தவாரியா, அப்டி ஆசைப்பட்றோம்னு சொல்லிப்போட்டாஹ. யாரும் கண்டுக்கலெ. காசும், பணமும், புரள, கல்விதந்தைகள் கல்வித்தாத்தாக்கள் ஆனாஹ. ஏழு தலமுறைக்கு சொத்து வச்சுட்டு, செத்தும் போனாஹ. ஏழை பாழை வீட்டு சின்னப்பசங்க பீடி சுத்தினாஹ, தீக்குச்சி அடுக்கினாஹ, முறுக்கு சுத்தினாஹ, கண்ணாடி வளையல் பண்ணாஹ, ஜமக்காளம் நெஞ்சாஹ, செங்கல் சூளைலெ  செத்து மடிஞ்சாஹ, கொத்தடிமைகளா. படிக்க மட்டுமில்லை. இப்டி நாலு தலமுறைக்கு, படிப்புக்கு தலை முழுகினாங்க. நம்ம தாத்தன், பாட்டி, மாமன், அத்தைக்காரி எல்லாரும் இந்திய மக்களின் உரிமையை இழந்து, படிக்காமலெ செத்துப்போய்ட்டாஙக. அவங்களுக்கு, அரசு, சமுதாயம், அப்பன், ஆத்தா, நீங்க, நான் எல்லாரும் தலை முழுகினோம், வெட்கம் கெட்டு.
இரண்டு வருஷம் முன்னாலெ தான், Right of Children to Free and Compulsory Education Act, 2009 அப்டீன்னு, இலவச, கட்டாயக்கல்வி சின்னப்பசங்களுக்கு உரிமை அப்டீனு இந்த கும்பகர்ணங்க சட்டம் போட்டாஹ.  அதனாலே தம்பிடி ஆதாயமில்லை அப்பனே, அதற்கான விலாவாரியான விதிகளை பிரகடனம் செய்யும் வரை. ஆந்திரபிரதேஷ், மஹராஷ்ட்டிரா, ஒரிஸா, ராஜஸ்தான், டில்லி அப்டீனு 20 மாநிலங்களில் அந்த காரியம் நடந்தது. தமிழ் நாட்டில், தி.மு.க. அரசும், அதக்கப்றம் அ.தி.மு.க. அரசும் இன்று மாலை வரை (15 11 2011) ஏன் தூங்கி வழிஞ்சாங்கன்னு புரியல்லைங்க. 12ம்தேதி கெஜட்லெ போட்டாஹ. இன்னிக்கி பொது மன்றத்தில் வச்சாஹ. ஆன ஒரு பிரச்னைங்க. அந்த சட்டத்திலெ சொன்னமாதிரி அண்டை அயல் பசங்களுக்கு எப்டி இடம் பதிவு செய்யோணுங்கிறதை பத்தி ஒன்னும் சொல்லலைங்க. சண்டை போட்டு வாங்கணுங்க. புரியுதா/
சாமியோவ்! தாய்க்குலமே! சின்னப்பசங்கள கொத்தடிமையா அனுப்பாதீங்க. பள்ளிக்கூடம் அனுப்புங்க. இல்லென்னு துரைத்தனத்தார் உங்களை தண்டிப்பாஹ. சொல்லிபோட்டேன். டும்! டும்! டும்!
இன்னம்பூரான்
14 11 2011

செல்வன் Wed, Nov 16, 2011 at 3:54 AM

சட்டம் போட்டால் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி விடுவார்களா?

அடிப்படை கல்வி,சுகாதாரம் என அடிப்படை பிரச்சனைகளை கவனிக்க வேண்டிய அரசு ஏர் இந்தியா, அசோகா ஓட்டல்,செயில் மாதிரி கம்பனிகளை நடத்தி நஷ்ட மழையில் குளிக்கிறது. இந்தியாவின் ஏழ்மையான உபி அரசின் பொதுதுறை நிறுவனங்களின் நஷ்டம் 18,000 கோடி ரூபாய். இந்த காசு முழுக்க நம் வரிப்பணமே.இதெல்லாம் அரசு கம்பனிகளில் வீனாகிறது

ஏர்-இந்தியாவில் கடன்சுமை 65,000 கோடி.

65,000 கோடியில் எத்தனை பள்ளிகள் கட்டலாம்?..கணக்கு போடலாமா?

இத்தனை நஷ்டம் வந்தும் ஏன் ஏர்-இந்தியா மற்றும் பொதுதுறை நிறூவனங்களை அரசு நடத்துகிறது?

ஏர்-இந்தியா இயங்கினால் தான் அதுக்கு பல்லாயிரம் கோடி செலவில் விமனாங்களை வாங்க முடியும்.கமிஷன் அடிக்க முடியும். அதுக்கு பொதுதுறை நிறுவனங்கள் தொடர்ந்து இயங்கவேண்டும்.அரசியல்வாதிகளின் கட்டுபாட்டில் இயங்கவேண்டும்.

மக்களை ஏழ்மையில் வைத்திருந்தால் தான் ஆளும்வர்க்கம் கொள்ளை அடிக்க முடியும்.

--
செல்வன்

"அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி - அதன்
  அருகினில் ஓலை குடிசை கட்டி
பொன்னான உலகு என்று பெயரும் இட்டால் - இந்த
பூமி சிரிக்கும், அந்த சாமி சிரிக்கும்"





Innamburan Innamburan Wed, Nov 16, 2011 at 9:00 AM

சட்டம் போட்டால் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி விடுவார்களா?.............................
~ கனவலைகள் மோதுகின்றன. அப்பாவுக்கு சாமுவேல் தேவசகாயம்னு ஜிக்ரி தோஸ்த். நேரே கிட்சன்லெ வந்து ஃபில்டர் காபி கேப்பார். அவர் வீட்டுக்குப்போனா சுவை மிகுந்த கேக் கிடைக்கும். தோட்டத்திலெ கொடுக்காப்புளி பறிச்சுக்கோன்னு துரட்டி கொண்டு வந்து கொடுப்பார். ஆனா பாருங்கோ! அவர் கிட்ட என்ன பேச்சுக் கொடுத்தாலும் ~ நேருவும் சீனாவும், காந்தியும் திருவள்ளுவரும், சுருட்டில்லா சர்ச்சில், தொல்காப்பியமும் நாமக்கல் கவிஞரும், எப்படி வாணாப்பேசிப்பாருங்கோ, சுவிசேஷத்தவப்புதல்வரான, சாமுவேல் தேவசகாயம் மாமா, ‘கர்த்தர் என்ன சொல்றார்னா’, பரமண்டலத்திலிருக்கும் பரம பிதாவே, இந்த சிவபிரான் படுத்துவதை பாரும்’, ‘விவிலியத்திலிருந்து ஒரு பகுதி தாண்டா, இந்த திவ்யபிரபந்தம்’ என்று விட்டு விளாசுவார்.
 அந்த மாதிரி...
இன்னம்பூரான்
16 11 2011 

Innamburan Innamburan Wed, Nov 16, 2011 at 9:06 AM



2011/11/16 செல்வன் <holyape@gmail.com>
சட்டம் போட்டால் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி விடுவார்களா?

அடிப்படை கல்வி,சுகாதாரம் என அடிப்படை பிரச்சனைகளை கவனிக்க வேண்டிய அரசு ஏர் இந்தியா, அசோகா ஓட்டல்,செயில் மாதிரி கம்பனிகளை நடத்தி நஷ்ட மழையில் குளிக்கிறது. இந்தியாவின் ஏழ்மையான உபி அரசின் பொதுதுறை நிறுவனங்களின் நஷ்டம் 18,000 கோடி ரூபாய். இந்த காசு முழுக்க நம் வரிப்பணமே.இதெல்லாம் அரசு கம்பனிகளில் வீனாகிறது

ஏர்-இந்தியாவில் கடன்சுமை 65,000 கோடி. 

Kingfisher is in the most critical condition, despite the number of passengers flying in the first nine months of 2011 soaring 19 per cent from the same period a year earlier. 

65,000 கோடியில் எத்தனை பள்ளிகள் கட்டலாம்?..கணக்கு போடலாமா?

இத்தனை நஷ்டம் வந்தும் ஏன் ஏர்-இந்தியா மற்றும் பொதுதுறை நிறூவனங்களை அரசு நடத்துகிறது?

ஏர்-இந்தியா இயங்கினால் தான் அதுக்கு பல்லாயிரம் கோடி செலவில் விமனாங்களை வாங்க முடியும்.கமிஷன் அடிக்க முடியும். அதுக்கு பொதுதுறை நிறுவனங்கள் தொடர்ந்து இயங்கவேண்டும்.அரசியல்வாதிகளின் கட்டுபாட்டில் இயங்கவேண்டும்.

மக்களை ஏழ்மையில் வைத்திருந்தால் தான் ஆளும்வர்க்கம் கொள்ளை அடிக்க முடியும்.

--
செல்வன்


sound rajan Wed, Nov 16, 2011 at 3:13 AM

superb! Yera vendiyavanga kaathile yeruma?

செல்வன் 


2011/11/16 Innamburan Innamburan <innamburan@gmail.com>
Kingfisher is in the most critical condition, despite the number of passengers flying in the first nine months of 2011 soaring 19 per cent from the same period a year earlier. 

கிங்க்பிஷர் நஷ்டமானதால் மல்லையாவுக்கு நஷ்டம்.

ஏர்-இந்தியா நஷ்டமானதால் மக்கள் வரிப்பணம் தண்டம்.

மல்லையா எக்கேடும் கெட்டால் நமக்கு எந்த பிரச்சனையும் இல்லை.ஆனால் ஏழை,பாழையின் வரிப்பணத்தை வாங்கி விமான கம்பனி நடத்தி ஆயிரகணக்கான கோடிகள் பணத்தை தொலைப்பது ஒரு அரசுக்கு அழகில்லை.

பொதுதுறை கம்பனிகள் இத்தனை லட்சம் கோடி நஷ்டத்துக்கு பிறகும் இயங்க காரணம் அரசியல்வாதிகளுக்கு கமிஷன் அடிக்க வாய்ப்பு கிடைக்கவேண்டும் என்பதால் தான்.

நம் அரசியல்வாதிகள் நம்மை திட்டமிட்டு ஏழையாக வைத்திருக்கின்றனர். இந்தியாவின் ஏழ்மை திட்டமிட்டு உருவாக்கபட்டது.அதற்கான கருவி சோஷலிசம்,பொதுதுறை.


Thiruvengada Mani T.KWed, Nov 16, 2011 at 2:38 PM
சாமியோவ் ...... குறவன் மொழி
டும் டும் டும் ... தண்டாரா போடுபவன்...
ரெண்டு பேரும் சொல்லறாங்களோ?
எப்படியோ தகவல் போய் சேர்ந்தால் சரி
மணி

கவி.செங்குட்டுவன் Wed, Nov 16, 2011 at 3:46 PM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
குழந்தைகள் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் தனியார் பள்ளிகள் 25% இடங்களை ஏழைக் குழந்தைகளுக்கு ஒதுக்க வேண்டும் எனவும், அவர்களுக்கான கட்டணத்தை சம்மந்தப்பட்ட மாநில அரசு ஏற்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. ஏன் எல்லா அரசுப் பள்ளிகளும் தனியார் பள்ளிகள் போலச் செயல்பட வேண்டுமென்றும், அதே போன்ற அடிப்படை கட்டமைப்புகளை மாநில அரசுகள் செய்து கொடுக்கப்படல் வேண்டும் எனச் சட்டம் இயற்றவில்லை. தெரிந்தவர்கள் கூறுவார்களா?

Geetha Sambasivam Wed, Nov 16, 2011 at 3:55 PM
என்னவோ சட்டம் இயற்றாமல் தான் பிள்ளைகள் கல்வி கற்க வரலைனு சொல்வதை ஏற்க முடியலை;  எத்தனையோ பிள்ளைகள் பள்ளிக்குச் செல்வதை வெறுக்கவும் செய்கின்றனர்.  எங்க வீட்டில் வீட்டு வேலைக்கு உதவி செய்யும் பெண்ணின் மகளுக்கு எவ்வளவோ அறிவுரை சொல்லிப் படிக்கப் புத்தகம் வாங்கப் பணம் கொடுத்து, துணிகள் எடுத்துக் கொடுத்து
ம்ஹும்.,
 
பதினைந்து வயதுக்குள்ளாகக் காதல்;  கல்யாணம்; குழந்தை.  இப்போ அந்தப் பெண்ணுக்குப் பதினெட்டே வயது, இரண்டு குழந்தைகள்.  கணவன் தச்சு வேலை பார்க்கிறான்.  21 வயசு!  சம்பாதிக்க ஆரம்பிச்சால் பெரும்பாலான இளைஞர்கள், இளம்பெண்கள் அதைத்தான் விரும்புகிறார்கள்.  மேலும் இம்மாதிரியான அடித்தட்டு மக்களுக்குப் பணம் காசோடு சினிமா தான் சொர்க்கம். அடுத்துத் தொலைக்காட்சி, நல்ல உடைகள்.  இப்போ அநேகமா எல்லாருமே உடையில் கவனம் செலுத்துவதால் இவங்க அதோடு திருப்தி அடையறாங்க.  (அப்படினு நினைச்சுக்கறாங்க.) படிக்கலையேனு குறை எல்லாம் இல்லை அவங்களுக்கு.

Innamburan Innamburan Wed, Nov 16, 2011 at 4:16 PM
To: mintamil@googlegroups.com

Kingfisher is in the most critical condition, despite the number of passengers flying in the first nine months of 2011 soaring 19 per cent from the same period a year earlier. 

கிங்க்பிஷர் நஷ்டமானதால் மல்லையாவுக்கு நஷ்டம். 
இல்லை சார்! வங்கிகள் பங்கியடிக்கணும்.
இ 

Nagarajan Vadivel Wed, Nov 16, 2011 at 4:49 PM

இந்தியக் குடிமக்கள் இருக்கும்வரை ஏர் இந்தியா நஷ்டத்தில் ஓடலாம்
இந்தியக் குடிமகன்கள் இருக்கும்வரை மல்லையா நஷ்டத்தைச் சமாளிக்கலாம்
இஞ்சி தின்ற பதினொரு குரங்குகள் எப்படி இருக்கும்?
மல்லையாவுக்குக் கடன் கொடுத்த வங்கித் தலைவர்களின் இருள் சூழ்ந்த முகத்தை அருள் கூர்ந்து பார்க்கவும்
விட்டதைப் பிடிக்கோனும் போட்டதை எடுக்கோனும் என்ற கூத்தாட்டம் விரைவில் தொடங்கும் என்று நம்பலாம்
நாகராசன்


Innamburan Innamburan Wed, Nov 16, 2011 at 5:07 PM
To: mintamil@googlegroups.com
பேராசிரியரே! பாயிண்ட் மேட். எதற்கும், ப்ளீஈஈஸ்!, தண்டோரா போட்டதை பற்றி மட்டும் இங்கு பேசுவுமே. சாமுவேல் மாமாவும் ஒத்துக்கிறார்.


DEV RAJ Wed, Nov 16, 2011 at 5:15 PM

>>> இல்லை சார்! வங்கிகள் பங்கியடிக்கணும்.<<<
:)))


N. Ganesan Thu, Nov 17, 2011 at 2:41 PM



On Nov 16, 8:32 am, செல்வன் <holy...@gmail.com> wrote:
> 2011/11/16 Innamburan Innamburan <innambu...@gmail.com>
>
> > Kingfisher is in the most critical condition, despite the number of
> > passengers flying in the first nine months of 2011 soaring 19 per cent from
> > the same period a year earlier.
>
> கிங்க்பிஷர் நஷ்டமானதால் மல்லையாவுக்கு நஷ்டம்.
>
> ஏர்-இந்தியா நஷ்டமானதால் மக்கள் வரிப்பணம் தண்டம்.
>
> மல்லையா எக்கேடும் கெட்டால் நமக்கு எந்த பிரச்சனையும் இல்லை.ஆனால்
> ஏழை,பாழையின் வரிப்பணத்தை வாங்கி விமான கம்பனி நடத்தி ஆயிரகணக்கான கோடிகள்
> பணத்தை தொலைப்பது ஒரு அரசுக்கு அழகில்லை.
>
> பொதுதுறை கம்பனிகள் இத்தனை லட்சம் கோடி நஷ்டத்துக்கு பிறகும் இயங்க காரணம்
> அரசியல்வாதிகளுக்கு கமிஷன் அடிக்க வாய்ப்பு கிடைக்கவேண்டும் என்பதால் தான்.
>
> நம் அரசியல்வாதிகள் நம்மை திட்டமிட்டு ஏழையாக வைத்திருக்கின்றனர். இந்தியாவின்
> ஏழ்மை திட்டமிட்டு உருவாக்கபட்டது.அதற்கான கருவி சோஷலிசம்,பொதுதுறை.
>
ஆம் ஐயா. ஏர் இந்தியா அதில் வேலை பார்ப்பவர்களுக்கும்,
அரசு பெரிய அதிகாரிகளும், குடும்பங்களும் சுற்றுலா
செல்லவும் பயன்படுகிறது.

ஏர் இந்தியாவை இழுத்து மூடினால் நல்ல பல்கலைக்
கழகங்கள் ஏற்படுத்தலாம். மாணவர்களின் உழைப்பும்,
ஆய்வும் இந்தியாவை மேல்நிலைக்குக் கொண்டுவரும்.

நா. கணேசன

Innamburan Innamburan Thu, Nov 17, 2011 at 4:08 PM
To: mintamil@googlegroups.com
தண்டோரா கேட்காமல் காதைப் பொத்திக்கொள்வது உங்கள் உரிமை.தயை செய்து திசை திருப்பாதீர்கள் என்று கெஞ்சுவது என் கடமை.
'...ஆம் ஐயா. ஏர் இந்தியா அதில் வேலை பார்ப்பவர்களுக்கும்,அரசு பெரிய அதிகாரிகளும், குடும்பங்களும் சுற்றுலா செல்லவும் பயன்படுகிறது.' என்ற குற்றச்சாட்டுக்கு ஆதாரம் கூறினால், நலம், கணேசனாரே.
இன்னம்பூரான்


Innamburan Innamburan Sun, Nov 20, 2011 at 6:29 PM


ist2_6619956-indian-drums.jpg


டும்! டும்! டும்!
ஐயாமார்களே! அம்மாமார்களே! சின்னப்பசங்களா!
கவனமா கேளுங்க, சாமியோவ். மலையை கிள்ளி எலியை பிடிச்சுண்டாங்களாமே. டும்! டும்! டும்! இன்கம்டாக்ஷ் காரங்க டில்லிலெ வலை போட்டுத் தேடினாங்களாம். எல்லாம் ஸ்விஸ் தகவல் மேலெ. கற்றுப்புப்பணம் 500 கோடியாமெ. அம்மாடியோவ். 22 பேருகிட்ட பிடிச்சு, எம்ப்ளது கோடி வரி வசூல் பண்றப்போறாங்களாம். அந்த 22 பெர்ரிய மனுஷங்களும் ஒத்துகிணாங்களாம். சேதி கேளுங்க சாமி. அதுலெ எல்லாரும் பிஸ்னெஸ் காரங்க. ஒரு அரசியல் வாதி கூட இல்லெ. ஹூக்கும்!!!!! டும்! டும்! டும்!
என்னாங்க்றே! முறைக்காதே, சாமி. சுக்ராம்ன்கிற மந்திரிக்கு 5 வருஷம் ஜெயிலு. புலனாய்வு ஆசாமிங்க அந்தக்காலத்து மஹாஜன் வரை தோண்ட்றாக. அவுக எல்லாம் பிஸ்னெஸ்ஸான்னு கேக்க்றயே. இன்னா தெனாவெட்டு, உனக்கு!
டும்! டும்! டும்!
இன்னம்பூரான்
20 11 2011 (இரவு அப்புடேட்டு)

Geetha Sambasivam Wed, Nov 23, 2011 at 10:12 PM

என்னாங்க்றே! முறைக்காதே, சாமி. சுக்ராம்ன்கிற மந்திரிக்கு 5 வருஷம் ஜெயிலு. புலனாய்வு ஆசாமிங்க அந்தக்காலத்து மஹாஜன் வரை தோண்ட்றாக. அவுக எல்லாம் பிஸ்னெஸ்ஸான்னு கேக்க்றயே. இன்னா தெனாவெட்டு, உனக்கு!//
 
அதானே!

No comments:

Post a Comment