Saturday, May 11, 2013

'லகான்’ : தணிக்கை செய்வதில் தணியா வேகம் -35




**லகான்**’ : தணிக்கை செய்வதில் தணியா வேகம் -35*
Innamburan S.Soundararajan Sat, May 11, 2013 at 2:27 PM

'லகான்’ : தணிக்கை செய்வதில் தணியா வேகம் -35
Inline image 1

அன்னிக்குப்பிடிச்ச லகானை, அவன் இன்னும் விடவில்லை. அது மாதுரியானபையன், என்
மகன். நாலு வயது. படுகுஷியாக ஜட்கா குதிரையை. ஹாய்.ஹூய்' என்று விரட்ட, காசி
ஸ்டேஷனிலிருந்து மான்ட்வாடி கிராமத்துக்குப் பறந்தோம். கும்போணத்லே, நான், என்
மனையாளின் கைத்தலம் பற்றி ஐயங்கார் தெருவில் உலா வந்த போது, மாமிகள்
குச்சுலிருந்து எட்டிப்பாத்தமாதிரி, மாண்ட்வாடி ரயில்வே குடியிருப்பு
எங்களை வியப்புடன் நோக்கியது. அவுக ஜீப்லெ தான் போவாக. இல்லையா? இப்படியாக,
நான் எல்.ஸீ.டபிள்யூ/டீ.எல்.டபிள்யூ டபிள் சார்ஜ் ஏற்றுக்கொண்டேன்.

என்ஜின் உதிரிப்பாகங்களை உற்பத்திச் செய்ய ஆரம்பித்த 'வர வர மாமியார்
கழுதை போல் ஆனாளாம் ' என்றபடி L. C .W உருக்குலைய, ரயில்வே போர்ட், அந்த
இடத்தில் டீஸல் என் ஜின் உற்பத்தி தொடங்க நினைத்த வேளை அது. எனவே மூன்று
சார்ஜ். சித்தரஞ்சன் தொழிற்சாலையில் கற்றுக்கொண்ட (தணிக்கைத்துறையில் அல்ல.)
நுணுக்கங்கள் உதவின. என்க்கு பல செளகரியங்கள். புரியாத சித்தரஞ்சன்
நுணுக்கங்களை, லக்னெள ஆய்வு மையத்திலும், அங்கு புரியாதவையை, மான்ட்வாடியிலும்
கேட்டுத்தெரிந்து கொள்ள்லாம். மான்ட்வாடிக்கு சித்தரஞ்சன். புரியறதோ? அவங்களுக்கு உள்ள  உள்குத்து எல்லாம், நமக்கு சாதகம். அரசுக்கும் தான். ரொம்பநாள், மான்ட்வாடிக்காரங்கள் நான் பொறியாளர் படிப்பில் தேறியவன் என்று நினைத்து கொண்டிருந்தார்கள். நானும் மழுப்பிவிடுவேன். இப்படியாக குப்பை கொட்டிக்கொண்டிருக்கும்போது,
அதிகப்பிரசங்கித்தனமாக், ஒரு வேலை செய்தேன் திமிர் தான். ஒத்துக்கொள்கிறேன். ஒரு நாள், ஜி.எம். விருந்துக்கு
அழைத்தார். ஜீப்பிலிருந்து இறங்கினவுடன், வண்டியோட்டி, 'ப்ரைவேட்' என்று
எழுதுங்கள். நீங்கள் தானே தப்பு கண்டுபிடிக்கறவர்கள் என்றார். நாக்குலே சனி.
நான் வழக்கமாக, இந்த விஷயங்களில் கறராக இருப்பேன்; பணம் கட்டிவிடுவேன்
என்பது தெரிந்த விஷயம். வந்ததே, மூக்கு மேல் கோபம். எல்லா வண்டிகளின்
போக்குவரத்துக்கணக்கு பதிவுகளையும் (log books) பறிமுதல் செய்து, ஸீல்
போட்டு, சித்தரஞ்சனுக்கு எடுத்துக்கொண்டு போய், இரண்டு மாதம்
திரும்பவில்லை. எல்லாருக்கும் கணகணப்பு. என்ன பில் வருமோ? என்று. வந்தவுடன்,
ஜி.எம். கூப்பிட்டு அனுப்பினார்.

 *உரையாடல்: ***

 ஜி.எம். உனக்குத்தான் தெரியுமே. நாங்கள் அத்வானத்தில் இருக்கிறோம்.
கத்திரிக்காய் வாங்கக்கூட காசிக்கு போகணும்
(அங்கு விட்ருலாமே என்று சொல்ல நினைத்தேன்!  சொல்லவில்லை.) மெடிக்கல்
பிரச்னைகள் வேறே. இந்த விஷயம் ரயில்வே போர்ட் வரை போனால், பிடுங்கி எடுத்து
விடுவார்கள்.

அடியேன்: நான் அவற்றை கொண்டுவந்திருக்கிறேன். ஸீல் உடையவில்லை
என்பதைப்பார்த்துகொள்ள்வும். ஸீல் உடைத்தால் தானே தணிக்கை செய்ய?
ஜி.எம்: நான் நினைத்தேன், நீ அது மாதுரியான பையன் என்று.
 எல்.ஸீடபிள்யூ ஆட்டம் க்ளோஸ். டி.எல்.டபிள்யூ ஆரம்பம்.

இன்னம்பூரான்
சித்திரத்துக்கு நன்றி:http://2.bp.blogspot.com/-DMWZfL7rdT4/TeQszffzOYI/AAAAAAAAEEw/zhQk7ZS3O-8/s1600/horse+vandi.jpg
இன்னம்பூரான்
11 05 2013

No comments:

Post a Comment