Sunday, May 12, 2013

'சுக்ரதிசை!' : தணிக்கை செய்வதில் தணியா வேகம் -39




'சுக்ரதிசை!' : தணிக்கை செய்வதில் தணியா வேகம் -39

Innamburan S.Soundararajan Sun, May 12, 2013 at 5:38 PM
To: Innamburan Innamburan
Bcc: innamburan88

'சுக்ரதிசை!' : தணிக்கை செய்வதில் தணியா வேகம் -39

31 03 2010

'சுக்ரதிசை!' : தணிக்கை செய்வதில் தணியா வேகம் -39

Inline image 1


வேலை கடுமையாக இருந்தாலும், ஒரு நிறைவு இருந்தது. திரு. ராம் மனோஹர் லோகியா, நேரு அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொணர்ந்த அன்று, அதிகாரிகள் அமரும் இடத்தில் நெருக்கம் தாங்கமுடியவில்லை என்றாலும், வீ.டி.தெஹிஜா என்ற உயர் அதிகாரி அநியாயமாக பறித்துக்கொண்டாலும் என் ரெசெர்வ்ட் இடத்தை பறித்தாலும், அருகில் அமர்ந்து, எனக்கு விமர்சனம் அளித்த வண்ணம் இருந்தார்; அதையும் சேர்த்து, என் ரிப்போர்ட்டை தாக்கல் செய்தேன். ஜே.எஸ்.லால் ஐ.ஸீ.ஸ், என்னை கூப்பிட்டு, 'நீ ஜர்னலிஸத்துக்கு தான் லாயக்; டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு சொல்கிறேன்;போகிறாயா?' என்று கேட்டார். மறுத்து விட்டேன். அவருக்கு என் மேல் பரிவு. ஒருநாள் காலை எட்டு மணிக்கு, காற்று வாங்க ஆஃபீசிலிருந்து இறங்கும் போது எதிரில் வந்த அவர், 'எப்படியிருக்கிறாய்/' என்று கேட்டதற்கு [நாக்குலே சுக்ரன்!], 'I am most unhappy, Sir.' என்றேன். தன்னறைக்கு அழைத்து சென்று, காஃபி கொடுத்து ஆஸ்வாசப்படுத்திய பிறகு, விசாரித்தார். 'குடக்கூலிக்கு இருக்கும் இடம் ஒழுகல், பாதுகாப்பு இல்லை, மனைவுக்கு, நானோ ராப்பகலா பாசறையில்' என்று யான் குரல் கொடுக்க, 'நானாச்சு, மாலை வா' என்றார். போனால், யாரும் போக விரும்பாத, ராமகிருஷ்ணாபுரம் செக்டர் 4ல், இல்லம் கொடுக்கும் ஆணை, வேறு அமைச்சரகத்திலிருந்து! அங்கு மனைவிக்கு அருமையான கம்பெனி; நல்ல மனிதர்கள். அக்காலம், கார் வாங்குவது, குதிரைக்கொம்பு. ஃபியட் டப்பாவுக்கு மூன்று வருடம் காத்திருக்கவேண்டும். ஸ்டாண்டர்ட் டப்பா வாங்கினேன். நானும் அவருக்கு ஒரு பதிலுபகாரம் செய்தேன். அக்காலம், சுழல் முறையில், கன்ட்ரோல் அறையில் காவல் ட்யூட்டி. கூட இருக்கும் கர்னல் பழங்கதையெல்லாம் சொல்லுவார். ஒரு நாள், திடீரென்று தெற்கு சீமையிலிருந்து, 'சைனாக்காரன் வந்துட்டான்!' என்று சங்கேத மொழியில் அலறல்! லால் ஐயாவை வரச்சொல்லவேண்டும். 'என்னப்பா புரளி. நீயே அம்மாகாணத்து தலைமையுடன் பேசு. நான் பொறுப்பு' என்றார். ரகசிய தொடர்பு மூலம் அந்த தலைமை காரியதரிசியை கேட்டால், 'அப்படியா' என்றார், அரை தூக்கத்தில். ஒரு விடு விட்டேன். மேட்டர் செட்டில்டு. இப்படியா குப்பை கொட்டிகொண்டிருக்கும்போது, என் நண்பரின் தந்தை, சென்னையில் உயர் அதிகாரி, வந்திருந்தார். ஸ்கூட்டர் வாங்கிய அவனுக்கும், கார் வாங்கிய எனக்கும் மெகா-டோஸ் கொடுத்தார், 'வீட்டுமனை வாங்க தெரியாத மக்குகளா!' என்று. ஐ.ஏ.எஸ்ஸுக்கு தான் நீங்கள் கொடுப்பீர்கள் என்று நான் குற்றம் சாட்ட, மிலிடரி விஸ்கி கொடுத்த துணிச்சலில், என்னுடன் பந்தயம் போட்டார். நான் கெலித்தேன். எப்படி தெரியுமா? அவர் வந்த வேலை எங்கள் அமைச்சரகத்தில்; பாஸ் இல்லாமல் அவரை கூட்டிச்செல்லவேண்டும். ரொம்ப சுளிவு. அதிகாலையில் வரும் எனக்கு, செக்யூரிடியில் பல நண்பர்கள். என் பின்னால், அவர் வர, நான் அவருக்கு சலாம் போட, அவர்களும் சலாம் போட்டு உள்ளே விட்டார்கள். எனக்கு மனை ஒதுக்கப்பட்டது, பந்தய விதிப்படி. அது பெரிய கொடுப்பினை. டபால்னு சுக்ரன் ஓடிப்போயிட்டார், சனி நுழையப்போரார். ஏன்?, என்னை அரெஸ்ட் பண்ண வந்துவிட்டார்கள்.

[தொடரும்: அரெஸ்ட் வாரண்ட்!]


Tthamizth Tthenee
4/2/10

'சுக்ரதிசை!' :
 
சுக்கிரதிசையா.?
 
சுக்ர தசையா.?
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
Geetha Sambasivam 
4/2/10

சுக்ர தசை என்பதே சரி என நம்புகிறேன். வேறே பெரியவங்க வந்து சொல்லட்டும். திசை என்றால் பொருள் மாறுபடுகிறது.
Thiruvengada Mani 

அரஸ்ட் வாரண்டா? தப்பித்து விட்டீர்களா? ஒரே விறு விறுப்பு!
4/2/10

மணி
Tthamizth Tthenee 
4/2/10

சுக்ர தசை, ஒன்பதாம் மடத்தில் குரு
 
அப்புறம் எப்படி மாட்டுவார்.?
 
தப்பித்திருப்பார்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
____________________
சித்திரத்துக்கு நன்றி: http://2.bp.blogspot.com/_YXhBd2jSUy8/S0NR9V5zEPI/AAAAAAAACgA/cgRNEjMLRdg/s400/Doubt+21.jpg

No comments:

Post a Comment