Thursday, June 27, 2013

அன்றொரு நாள்: ஜூன் 28




அன்றொரு நாள்: ஜூன் 28

Innamburan Innamburan Tue, Jun 28, 2011 at 5:19 AM



அன்றொரு நாள்: ஜூன் 28


கல் தோன்றி, மண் தோன்றாக்காலத்திலிருந்து, இந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொரு நானோ வினாடியிலும் லக்ஷோபலக்ஷம் நிகழ்வுகள். அவற்றில் ஒரு நாளைக்கு ஒன்று என்று தனது நினைவுலகத்திலிருந்தும், நனவுலகத்திலிருந்தும், கனவுலகத்திலிருந்தும், படித்ததிலிருந்தும், தேடியதிலிருந்தும், ஒரு நிகழ்வை பற்றி எழுதவே ஒரு நாள் பிடிக்கிறது. கட்டுரை நீண்டு விடுகிறது. ‘ஏன் இந்த எமெர்ஜென்ஸியை பற்றி அரைகுறையாகவும், சுருக்கமாகவும் எழுதி விட்டீர்கள்?’ என்று ஒரு நண்பர் வினவினார். ‘என்னால் இயன்றதை மட்டுமே நான் எழுத முடியும். இது யாவரும் பொறுப்புணர்ச்சியுடன் மடலாடும் இழை. திருவேங்கிடமணி கேட்ட மாதிரி வினாக்களும் நல்வரவே.’ என்றேன். இது நிற்க.

இன்று மூன்று நிகழ்வுகளை பற்றி எழுதவேண்டிய வரலாற்று நிர்பந்தம்.

  1. ஜூன் 28,1914: அன்று ஞாயிற்றுக்கிழமை. ஆஸ்டிரிய இளவரசர் ஃப்ரான்ஸ் ஃபெர்டினாண்டும் அவரது மனவி ஸொஃபியும் கவிரோ ப்ரின்ஸிப் என்பவனால் சரஜீவோ என்ற ஊரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவமே லக்ஷக்கணக்கான வீரர்கள் கொல்லப்பட்ட முதலாவது உலக யுத்ததிற்கு அடி கோலியது.

  1. ஜூன் 28,1919: முதலாவது உலக யுத்தம் முடிந்து, சரணடைந்த ஜெர்மனி,வெர்ஸேய்ல்ஸ் என்ற ஃப்ரென்ச் இடத்தில் சமாதன ஒப்பந்தம் செய்து கொள்ள நிர்பந்திக்கப்பட்டது. கடுமையான ஷரத்துக்கள்.அமெரிக்க ஜனாதிபதி வில்ஸன் அவர்களில் நியாயமான 14 பாயிண்ட் ஷரத்துக்கள் நீர்த்துப்போயின. நாடு பறித்தல், காலனி பறித்தல்,  அபகீர்த்தி பெற்ற 231வது ஷரத்துப்படி கடுமையான நஷ்ட ஈடு அபராதம், ராணுவத்தை குறைத்தது எல்லாம் நடந்தேறியன. ஆக மொத்தம், ஜெர்மானிய மக்களுக்கு, வறுமை, பட்டினி, இரண்டாவது உலக யுத்தத்திற்கு, இதுவே மூலாதாரம். தெரிந்தே இந்த கூத்துக்கள் நிகழ்ந்தன. பிரபல பொருளியல் வல்லுனர் ஜான் மேனார்ட் கீன்ஸ் ‘சமாதானத்தின் பொருளியல் தாக்கங்கள்’ என்று எழுதிய நூல் மின்னாக்கம் செய்யப்பட்டுள்ளது. இன்றைக்கும் அதன் படிப்பினைகளை மறக்கலாகாது.

  1. ஜூன் 28,1921:‘ஆந்திர பெட்டு’ என்று செல்லமாக அழைக்கப்பட்ட பீ.வி. நரசிம்ஹ ராவ் அவர்களின் ஜென்மதினம். ‘லைசன்ஸ் ராஜ்’ அவரால் களையப்பட்டது. அவரால் நியமனம் செய்யப்பட்ட நிதி அமைச்சர் மன் மோஹன் சிங் அவர்களின் பட்ஜெட் பேச்சு இன்றும் நினைவில் இருக்கிறது. காலம் தான் மாறிப்போச்சு. ஆளும் மாறிப்போயிட்டார்! பீ.வி. நரசிம்ஹ ராவ் அவர்கள் பன்மொழிபுலவர். படித்த மேதை. பிரதமரான பிறகு பலவித சர்ச்சைக்கும் உள்ளானார். நேரு வம்சாவளியின் சொத்து ஆன காங்கிரஸ் கட்சியும், இவரை பிற்காலம் புறக்கணித்தது. இவருடைய ஆட்சியில் தான் பாப்ரிமஸ்ஜீத் அவலம் நடந்தது. அலஹாபாத்தில் நள்ளிரவில், போலீஸ் பாதுகாப்புடன் ஊர் வலம் வந்து வன்முறைகளை கண்ட நான், கணிசமான அளவு, இவரையும், ‘கண்டும் காணாமல்’ இருந்ததற்குக் குறை சொல்லுவேன். மற்ற சர்ச்சைகள், சேகர் குப்தாவின் குற்றச்சாட்டுக்கள் என்றெல்லாம் சுற்றாமல், திரு.ராமசந்திர குஹா இவரை பற்றி எழுதியதை, குறிப்பால் உணர்த்தி விட்டு, அவருடைய கட்டுரையின் இணைய தொடர்பு அளித்து,விடை பெற்றுக்கொள்கிறேன். 

 திரு.ராமசந்திர குஹா: 
‘...காங்கிரஸ் கட்சிக்கு ‘வேண்டாபடாதவராக‘   ஆகி  விட்டார், நரஸிம்ஹ ராவ் அவர்கள்...இந்தியாவின் பொருள் ஆதாரத்தை அவர் உயர்த்தியதைப்பற்றி பேசாத அந்தக்கட்சி, அவரை பாப்ரிமஸ்ஜித் அவலத்துக்குக் குறை கூறினர். நேரு வம்சாவளியினர் அல்ல என்பதும் மட்டுமல்லாமல், நேரு-காந்தி குழுவுக்கு கூழைக்கும்பிடு போடாதாதும் அவர் குற்றமே!...அவருடைய சாதனைகளை மறந்து, தவறுகளை மட்டும் நினைவூட்டுவது, மிக கவனத்துடன் திட்டமிட்ட வரலாற்றுக் கூத்து...’.

மேலும்் படிக்க:

    இன்னம்பூரான்
    28 06 2011

Geetha Sambasivam Tue, Jun 28, 2011 at 5:52 AM

To: mintamil@googlegroups.com

Cc: Innamburan Innamburan , தமிழ் வாசல்
நேரு-காந்தி குழுவுக்கு கூழைக்கும்பிடு போடாதாதும் அவர் குற்றமே!...அவருடைய சாதனைகளை மறந்து, தவறுகளை மட்டும் நினைவூட்டுவது, மிக கவனத்துடன் திட்டமிட்ட வரலாற்றுக் கூத்து...’.//

உண்மைதான். ஆனால் காங்கிரஸ் தான் ஒரு குடும்பத்தின் காலடியிலேயே விழுவது என்று முடிவு கட்டி விட்டதே. :(((((((
 இரண்டாம் முறையாகவும் அவர் பிரதமராய் வந்திருக்கலாம் என்று நினைக்கத் தோன்றியது, அவருடைய காலத்தின் நிர்வாகம்.  மறக்க முடியாத ஒன்று.

இதில் குறிப்பிட்டிருக்கும் முதல் நிகழ்வு முற்றிலும் புதிய செய்தி என்னைப் பொறுத்த வரையில், இன்றே இந்தச் செய்தி குறித்து அறிகிறேன்.  நன்றி.  இம்மாதிரியான பகிர்வுகளை நிறைய எதிர்பார்க்கிறேன்.

எமர்ஜன்சி குறித்துச் சீக்கிரம் முடித்துவிட்டதில் எனக்கும் கொஞ்சம் வருத்தம் தான்.  இன்னும் நிறைய எதிர்பார்த்தேன்.




Dhivakar Tue, Jun 28, 2011 at 6:06 AM


ஜூன் 28,1921:‘ஆந்திர பெட்டு’ என்று செல்லமாக அழைக்கப்பட்ட பீ.வி. நரசிம்ஹ ராவ் அவர்களின் ஜென்மதினம். 


பி.வி. மிகச் சிறந்த ஆட்சியாளர் என்பதில் யாருக்குமே சந்தேகம் இருந்ததில்லை. தெரியாத செய்தி, அவரிடம் 1990 ஆண்டில் சந்நியாஸ வாஸம் தெரிய ஆரம்பித்து அதற்கான முஸ்தீபுகளில் இறங்கிவிட்டது. ‘குற்றால மடத்து பீடாதிபதி பதவியும் தேடி வந்த போது (அந்தச் சமயம் உள்ள பீடாதிபதி மறைந்ததினால்) அதையும் ஏற்றுக் கொள்ள முடிவு செய்து விட்டார். ஆனால் 1991 ராஜீவ் படுகொலை, சோனியா காந்தி கட்சித் தலைமையை (அந்த நிலையில் பயந்து போய்) மறுத்தது, பிரணாப் மீது ராஜீவுக்கு எல்லோருக்கும் தெரிய ஏற்பட்டிருந்த சந்தேகம், இந்த நிலையில் சீதாராம் கேசரிக்கு கட்சி போயிருந்தால், கட்சி அம்பேல் என்ற எல்லோருக்கும் தெரிந்த நிலை, எல்லாமாக சேர்த்து, நரசிம்மா ராவை ஒரேயடியாக தூக்கி ஆட்சிபீடத்தில் உட்கார்த்தி வைத்துவிட்டது. 

அருமையான சிந்தனையாளர். நல்ல ஆன்மீகவாதி,  நல்ல ஆட்சியாளர், தனக்கு யார் தேவையோ அவரை மட்டுமே தனக்குப் பக்கத்தில் வைத்துக் கொண்டவர், இந்தியாவின் மானத்தை அந்தக் கடுமையான பொருளாதார நெருக்கடியில் காப்பாற்றிய புண்ணியவான், இன்னும் எத்தனையோ உண்டு. ஆனால் அவர் இருந்தவரை சோனியாவை உள்ளே வர விட வில்லை என்பதும் முக்கியமானது. ஆனால் இவருடைய மகன்கள் இவர் பெயரைப் பயன்படுத்தி இவருக்கு கெட்ட பெயர் உருவாக்கிக் கொண்டிருந்தனர். இவருடைய அரசியல் எதிரிகளும், சோனியா ஆதரவாளர்களும் நேரம் பார்த்துக் காத்திருந்தனர். இதற்கெல்லாம் பிரதமர் பதவி போன பின் சின்ன சின்ன வழக்குகளில் கோர்ட் படி ஏறிக் களைத்துப் போனார். ச்சே.. என்ன இந்த பிழைப்பு எதற்காக இந்த பிரதமர் பதவி, பேசாமல் குற்றாலம் மடத்தில் ஜாலியாக ஆசனத்தில் உட்கார்ந்து கொண்டு, வருவோர் போவோருக்கு அருளாசி வழங்கிக் கொண்டு, வரும் ஜென்மத்துக்கும் சற்று புண்ணியத்தைச் சேர்த்துக் கொண்டும் விடுவதை விட்டு எதற்காக இப்படி ஒரு கஷ்டம் ..

அவர் இறந்தவுடன் அவர் சவத்தைக் கூட தில்லி காங்கிரஸ் தலைமையக வெளிகேட் வெளியே ஏதோ சற்று நேரம் வைத்துவிட்டு ஹைதராபாத் அனுப்பிவிட்டனர்.  எரித்த போது அந்த உடம்பு சரியாக வேக்க்கூடவில்லை.

நேருவுக்குப் பிறகு காங்கிரஸிலிருந்து ஒரு சிறந்த ஆட்சியாளர் என்றால் அது நரசிம்ம ராவையே சாரும்.

இ’ சார்.. அது ஆந்திர பெட்டு இல்லை, பிட்ட.. bidda

anbudan
Dhivakar




Dhivakar Tue, Jun 28, 2011 at 6:48 AM


http://blog.lkadvani.in/blog-in-english/two-missed-opportunities-six-disastrous-consequences

The Blog of LK Advani mentioning two missed opportunities. He could have mentioned Rajaji too in the forgotten leader category.

Though it is irrelevant to the subject of your's today, but it is relevant to the 'after PV period'.



D



Innamburan Innamburan Tue, Jun 28, 2011 at 7:16 AM


இந்த மாதிரியான நல்வரவுகளுக்காகத்தான், நான் ஏங்கியிருந்தேன், திவாகர். ஏற்கனவே நம் மதிப்புக்குரிய ஷ்யாம் பிரசாத் முக்கர்ஜீ அவர்களை பற்றி நான் மின் தமிழில் எழுதியிருந்ததால், இந்த தடவை எழுதவில்லை. உங்கள் தயவினால், மனித நேயம்' இழையிலிருந்து சில பகுதிகள், மீள்பதிவு:

----------
1.
    "பத்து மாதம் மின் தமிழ் கர்ப்பத்தில் இருந்த  இந்த 'மனித நேயம்இழைஇன்று 'க்வாக்வா!' மென்மையான சிசுவின் குரலில்உம்மையெல்லாம் அழைக்கிறதுநேரம் இருந்தால்முந்திய இடுகைகளை ஒரு கண் பார்க்கவும்இன்று ஒரு நிஜக்கதை.

     ஸர் அஷுடோஷ் முகர்ஜி வங்காளத்தின் தவப்புதல்வன்தலைமை பதவியில் பணி புரியாத துறை கிடையாதுஅக்கால நாடாளுமன்றத்தலைவர்அரசுக்கு முதன்மை ஆலோசகர்தலைமை நீதியரசர்கல்கத்தா பல்கலைகழக இணை வேந்தர் இத்யாதி.வெள்ளைக்காரனுக்கு சிம்ம சொப்பனம்வைதீகப்பார்ப்பனர்அதாவது சாஸ்திரப்படி அந்தணச்சான்றோன்தினந்தோறும் கங்காஸ்நானம்நதிக்கரையிலிருந்து நடந்து தான் வருவார்ஒரு நாள்ஒரு விதவை அவரை நிறுத்தினாள், 'இங்கு இருக்கும் புரோகிதர்கள் அளவுக்குமீறி கேட்கும் தக்ஷிணை கொடுக்க வசதியில்லைஎன் கணவனுக்கு இன்று திதிஉம்மை பார்த்தால் படித்த பிராமணன் போல் இருக்கிறதுசிரார்த்தம் செய்து வையும்என்றாள்கோர்ட்டாவதுகீர்ட்டாவதுஐயா நிதானமாகஅக்ஷரசுத்தத்துடன்மந்த்ரஹீனம் இல்லாமல்,சிரார்த்தம் செய்து வைத்தார்அவள் கொடுத்த ஒரு ரூபாயையும் இடுப்பில் சொருகிக்கொண்டுகிளம்பினார்யாரோ இவரின் பதவியை சொல்லி அவளை அதட்டஓடோடி போய்அவள்அவர் தாள் பணிந்து மன்னிப்பு கேட்டாள்இந்த சிம்மம் சொல்லிற்று, 'நான்அந்தணன்என் குலதர்மத்தை செய்தேன்.' என்றுசற்றே சுதாரித்துதஷிணை ஏன் வாங்கினீர் என்று கேட்டாள்இல்லாவிடின்நீ சந்தேஹப்படுவாயேபலன் இருக்காதோ என்றுஅதான் என்றார்

புரிகிறதோ?
அன்புடன்,

இன்னம்பூரான்

16 09 2010"
------------

2. 'நன்றிதேவ்கோவத்துக்கும் நமக்கும் காததூரம்சின்ன காதம்அவர்
ஹிமாலயம் என்றால்நான் கூழாங்கல்.
இந்த ஆஷுதோஷரின் திருமகன் ஷியாமப்பிரசாதரும் புகழ் பெற்ற அரசியல்ஹிந்து
முன்னணி தலைவர்கொல்கத்தாவின் முக்ய பகுதிகள் ஆகிய செளரங்கி - பாலிகஞ்ச்
ராஸ்தா மிகவும் நீண்டதுஒரு பகுதி அப்பா பேரில்தொடருவது பிள்ளை
பேரில்வங்காளத்தின் தவப்புதல்வர்கள்அந்த ராஸ்தாவில்
ஷியாமப்பிரசாதரின் இறுதி ஊர்வலம் சென்றபோது கல்கத்தாவின் கண்ணீர்
கங்காப்பிரவாகமாக இருந்ததுநினைவில் இருக்கிறது. (ஒரு படம்ஹிந்துவில்)
தேசபக்தியில் காங்கிரஸ்க்காரர்களுக்கு லவலேசமும் குறையாத அவர்,
காஷ்மீரில் நுழைய இருந்த தடையை மீறினார்கைது செய்யப்பட்டார்நீரழிவு
நோய்க்குஅவர் கொண்டு வந்திருந்த மருந்துகளை கொடுப்பதில்
தகராறு/குழப்பம்மனிதநேயத்தை மண்ணாங்கட்டியாக கருதிய காஷ்மீர் அரசு.
சான்றோன் இறந்து போனார்சாமான்ய குடும்பமாசட்டம் அறியாமல் இருக்க!
சகோதரர் ராமப்பிரசாத் நீதியரசர்அன்னை ஜவஹர்லால் நேஹ்ருவுக்கு கடிதம்
எழுதினார்இறுதி வரிமனக்கண்ணின் முன் நிற்கிறது, "I charge you with
complicity in my son's murder." எனக்கு தெரிந்தவரைஅவர் விடையளித்ததாக
வரலாறு இல்லைதேடுகிறேன்என்னிடம் உள்ள நூல்களில்.
11/12/10'
----------------
3.
'செப்டம்பர் 20க்கு பிறகு புதிய அங்கத்தினர்கள் வந்துள்ளதால்தொடர்கிறேன்சிலர் ஆர்வம் காட்டலாம் என்ற எதிர்ப்பார்ப்புஇது ஒரு தனி மொழி இழையாக இருந்துவிட்டால்பிழை எனது.

அந்தக்காலம்ஒரு பிரபல வழக்கறிஞர்அப்பெல்லாம் இரட்டை மாட்டு வண்டி தான் ரோல்ஸ்ராய்ஸ் கார்ஒரு சிற்றூரில்  கோர்ட்டு அலுவலாக வந்த அவர்மாலை சொந்த ஊருக்கு திரும்புகிறார்ஏதோ கலவரசத்தம்வன விலங்குகள்கொள்ளையர்கள் நடமாடும் இடம்.கையில் இருந்த துப்பாக்கியால்திசை நோக்கி சுட்டுவிட்டார். 'ஐயோஎன்ற சத்தம் கேட்டு போய் பார்த்தால்ஒரு பாமர மனிதன் காலைப்பிடித்துக்கொண்டு அலறுகிறான்குறி தப்பவில்லைஅவனை முடக்கத்தானே நினைத்தார். He was a good shot. அவனை வண்டியில் போட்டுக்கொண்டுவைத்தியம் பார்த்துஆயுசு பரியந்தம் பென்ஷன் கொடுத்தாராம்சின்ன வயதில் படித்ததுஆதாரம் கையில் இல்லை எனினும்நம்பகம் வாய்ந்த இதழில் படித்தததாக நினைவு.

ஊரு சேலம்ஆளுசக்ரவர்த்திசிராஜகோபாலாச்சாரியார்.

துணுக்இந்த தகவல் அநேகருக்கு தெரியாதுஇவர் கவர்னர் ஜெனெரலாக இருந்த போதுராணுவ போட்டி ஒன்றை துவக்க அழைத்துமரியாதை நிமித்தம்துப்பாக்கியை கொடுத்து ஆகாயத்தைபார்த்து சுடச்சொன்னார்களாம்இவரோ குறியை சுட்டு தள்ளிவிட்டாராம். He hit the Bull's eye! இதுவும் கேள்விப்பட்டது தான்

ஆமாம்மனிதநேயம் பேசக்கூட ஆவணம் தேவையாஇடம்பொருள்ஏவல் பொருத்தமாக இருந்தால்?
11/11/10
---------
நன்றி, வணக்கம்.

இன்னம்பூரான்

28 06 2011



Geetha Sambasivam Tue, Jun 28, 2011 at 7:43 AM


'நான் அந்தணன்என் குலதர்மத்தை செய்தேன்.' என்றுசற்றே சுதாரித்துதஷிணை ஏன் வாங்கினீர் என்று கேட்டாள்இல்லாவிடின்நீ சந்தேஹப்படுவாயேபலன் இருக்காதோ என்றுஅதான் என்றார். //

புத்தகங்களில் படித்தாலும் இவ்வளவு விபரமாக இன்று தான் தெரியும்.  அருமையான மனிதர்கள் இருந்த நாடு.  செல்வன் அமெரிக்காவை ஆவ்சம் அமெரிக்கா என்பது போல் இந்தியா குறித்து எழுத யாரும் இல்லையா என செல்வகுமரன் கேட்டதற்கு நீங்கள் அளித்த மறுமொழி முற்றிலும் பொருத்தமானதே. இப்படியான ஆக்கங்களை இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்தல் வேண்டும்..

வந்தேமாதரம்!




Tthamizth Tthenee Tue, Jun 28, 2011 at 6:05 PM



உண்மையிலேயே  எமர்ஜன்சியைப் பற்றி  மேலும் விவரமாக தெரிந்துகொள்ள  ஆசைதான்
அரசாங்க அலுவலர்கள்  அலறித் துடித்து   சரியான நேரத்துக்கு  அலுவலகம் சென்ற நாட்கள்  அவை
அன்புடன்
தமிழ்த்தேனீ
]

Dhivakar Fri, Jul 1, 2011 at 7:00 AM


முகர்ஜி பற்றிய கூடுதல் செய்தி, இ’ சார் சொன்னதுதான் முழுவதும், இன்னும் கூட கொஞ்சம் சேர்த்து.. எழுதியது ஜெக்மோகன் (எமர்ஜென்சி புகழ்)


Innamburan Innamburan Fri, Jul 1, 2011 at 7:21 AM

உங்கள் பங்களிப்புக்கு நன்றி, திவாகர். ஜெக்மோகன் (எமர்ஜென்சி புகழ்) விவரமாக எழுதியிருக்கிறார். நான் நினைவிலிருந்து எழுதினதாலும், அக்காலத்து நாளிதழ்கள் கிடைக்காததாலும், உரை நடையில் கவனமாக இருந்தேன். அன்று என் போன்றவர்களுக்கு இருந்த வியாகூலம் இன்னும் நினைவில் இருக்கிறது.
நன்றி, வணக்கம்.


இன்னம்பூரான்
சித்திரத்துக்கு நன்றி: http://dinamani.com/india/article864297.ece/alternates/w460/narasimarav.jpg




No comments:

Post a Comment