Friday, January 24, 2014

ஓடுகாலி!

ஓடுகாலி!

Innamburan S.Soundararajan Fri, Jan 24, 2014 at 4:43 PM


ஓடுகாலி!
http://www.youtube.com/watch?v=TZyhj5NFbDs

நேத்திக்கு நடந்தது போல இருக்கு. முப்பது வருஷம் ஓடிப்போய்டுத்து. பெரியவா தானே கல்யாணம், காட்சி எல்லாத்துக்கும் பொறுப்பு.  ஒத்தனுக்குக் கால்கட்டு ஆக அவளை கட்டிப்போடுவதாக உத்தேசம். அவளோ ஓடிப்போய்ட்டா. பிடிச்ச ஓட்டம் அமெரிக்காவில் தான் மூச்சு வாங்கிண்டு நின்னது. முதலில் பாஸ்டன். முதல் உத்யோகம் ஒரு கிழத்தைப்பாத்துக்கிறது. அது அன்னிக்கே மண்டையை போட்டுடுத்தா, வேலை அபேஸ். அடுத்த கிழவிக்கு உடம்பு பூரா புண்ணு. அதையெல்லாம் கழுவி களிம்பு தடவணும். ஆறாது ஆனா. அன்னிக்கு நினுச்சுண்டா,‘இதுக்கு மருந்து கண்டு பிடிக்கணும்’ னு. செஞ்சாளே, அதை பாருங்கோ.

அப்றம் நம்ம மனுஷாளுக்கு பாந்தவ்யம் ஆன கால்டெக், கலிஃபோர்னியாலெ சேந்து மலக்யுலர் பயாலஜி படிச்சு ஒருபாடா தேறி வரச்சே, அவளுக்கே லுகிமியா புற்று நோய். சிலதுகள் மாஞ்சு போய்டும். இவளோ கெட்டி. திடமனசு, ஸ்வாமி. காஞ்சு போய் உலர்ந்த இலந்தைப்பழம் போல சுருங்கிப்போன தன்னோடெ தேகத்தை மின்ன வச்சாளே, தான் கண்டு பிடித்த மருந்தாலே.  டிகிரியை வாங்கிண்டா. கூட்டாளிகளெ சேத்துண்டா. ஜெனடா கார்ப்பெரேஷன் அப்டினு கம்பெனி ஆரம்பிச்சா. நெறைய களிம்பு, அரிதாரம் வகையறா. கையிலெ கோடிக்கணக்காப்பணம். ஆனா ஒரு குறை. பொறந்து வளந்த கொல்கொத்தாவை மறக்கமுடியல்லெயே. ஓடோடி வந்தா , இந்த பத்தாம்பசலி மார்வாரி குடும்பபெண்ணுக்கு ரொம்ப கெளரதை காட்றா.

*

மாமி பேரு: சந்தா ஜாவேரி புவால்கா: பேட்டை: கங்கர்குறிச்சி. ஊரு: கொல்கத்தா. அவளொரு கொல்கொத்தா கலிஃபோர்னியாள்.

செய்தி: இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியா:http://timesofindia.indiatimes.com/city/kolkata/Woman-returns-to-Kolkata-after-three-decades-as-a-millionaire/articleshow/29268752.cms?intenttarget=no

பின்குறிப்பு: திருமணம் செய்து கொள்ளவில்லை. அதைப்பற்றி கவலைப்படவும் இல்லை.
இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

No comments:

Post a Comment