Friday, March 14, 2014

சொன்னால் விரோதம் :-$ :
Innamburan S.Soundararajan Fri, Mar 14, 2014 at 8:44 PM

சொன்னால் விரோதம்


இன்னம்பூரான்
14 03 2014
பெண்ணியம், பென்ணியம் என்று போட்டுக்கொடுப்பவர்கள், ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி, இலக்கை ஒதுக்கி, இங்கிதம் பேசுகிறார்கள், அங்கதமாக. பல இழைகள் யான் பழகும் குழுக்களில், மின்னல் அடிக்கின்றன, யதார்த்தை விலக்கி ! முதற்கண்ணாக, பெண்மையின் உரிமை காப்பாற்றப்படவேண்டும். டில்லியில் அதைத் தாக்கி கொலை செய்த பாவிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது, பிரச்னைக்கு தீர்வு அன்று என்பது உறுதி. கரையானை ஒரு நாள் மருந்து அடித்துக் கொல்ல முடியாது. அடித்தளம் புகுந்து வேரொடு களைய வேண்டும்.
இன்றைய அமெரிக்க செய்தி காண்க:
டார்ட்மத் காலேஜில் வன்முறைக்கு ஆளான ஒரு மாணவியின் அபயக்குரல் 50,000 ஆர்வலர்களை உந்தி அழைத்தது. அந்த காலேஜில் மாணவர் தளம் ஒன்றில் ‘வன்முறை கையேடு’ இருக்கிறதாம். அல்ட்ரா வயலெட் என்ற பெண்ணிய குழு விண்ணப்பம் ஒன்றை காலேஜுக்கு அனுப்பியும் உடனே மவுனம் தான் பதில்! ‘துஷ்டனை விரட்டு’ என்பது தான் கோரிக்கை. ஆனாலும், மவுனம் சர்வார்த்த சாதகம். டைட்டில் 9 என்ற சட்டம் இருக்கிறது (http://www2.ucsc.edu/title9-sh/titleix.htm). கேட்பார் இல்லை, ஹார்வேர்ட்டில் கூட !!! வன்முறையும், பாலின தாக்குதல்களும் அந்த டார்ட்மத் காலேஜில் பல்லாண்டு, பல்லாண்டாக இருக்கிறது. தாங்கொண்ணா நிலைக்கு வந்து விட்டோம் என்கிறார்கள், பெண்கள். இணைய தளத்தில் வந்து சமர் புரிவோம் என்கிறார்கள்.  இது நிற்க.
எனக்கு நல்லதோ, கெட்டதோ, பல பாலிய சீரழிப்புகளை பற்றி அறிய வேண்டிய நிர்பந்தம், பல வருடங்களாக எனக்கு அமைந்தது, கிட்டத்தட்ட அரைநூற்றாண்டு காலத்துக்கு. ஆயிரக்கணக்கான நபர்கள் இருக்கும் அலுவலகங்களில் நான் தான் கடைசி அப்பீல் என்று இருந்ததால், எல்லா ரகசியங்களும் என்னிடம் அம்பலம்.  நடுவு நிலை வகிக்க அந்த நிர்பந்தம் உதவியது. மக்கள் மன்ற ஆலோசகராக இருந்த போது, இங்கிலாந்தில் எண்ணற்ற கேசுகள் வர, நான் அவற்றை சட்டரீதியாக திரை போட்டு, தீஸிஸ் எழுத வேண்டி இருந்தது. என் மதிப்புகுந்த பெண்மணியிடம் அதை காட்ட வேண்டியிருந்தது. இதை அனுபவ குப்பையில் போட்டு விடுவார்கள், இதர பெருந்தகையோர். 
எனக்கு நல்லதோ, கெட்டதோ,அமெரிக்காவில் இந்த பிரச்னையை அன்றாடம் கையாளுபவர்களுக்கு, முதல் கட்டத்தில் உதவுவதற்காக, யான் படிக்க வேண்டிருந்த ‘வன்புணர்ச்சி’ ஆய்வு நூல்களையும், பரிகார கையேடுகளையும் பற்றி, நம்முடைய மதிப்புக்குரிய பேராசிரியர். நாகராஜனை தவிர, மற்றவர்கள் முக்காலும் முச்சூடம் கண்டு அறிந்து புரிந்து கொண்டவர்களா என்பதில் எனக்கு ஐயம் உண்டு. அந்த நூல்களின் உசாத்துணைக்கூட கொடுக்க எனக்கு தயக்கம். யாராவது தனிமடலில், பயன்படுத்த வேண்டிய காரணம் சொல்லிக்கேட்டால், எனக்கு அது சம்மதமானால், அனுப்புகிறேன். தனிமடல் ப்ளீஸ்.
Coming to the ‘red herrings afloat’, அமெரிக்காவில் இற்செறிக்கப்பட்ட ஆண்கள்/பெண்கள் இனம், இந்தியாவில் வீட்டில், சுற்றத்தில், தெருவில், பேட்டையில், ஊரில், மாநிலம் தோறும் பேயாட்டம் ஆடுகிறார்கள். இந்த அவலத்தை பற்றி சட்டம், அரசு, சமுதாயம், தனியார் கவலைப்படுவதில்லை.  They are bloody well ‘honour-bound’.  இதை படிக்கும்/படிக்காத எல்லா மனிதர்கள்/மனுஷிகளிடம் நான் கேட்பது: ‘மனசாக்ஷியை தொட்டு சொல்லுங்கள். நீங்கள் எழுதுவதற்கும், சுயமாக அறிந்து கொண்டதற்கும் என்ன வித்தியாசம்/ முரண்பாடு இருக்கிறது?’.
மனக்கிலேசத்துடன் தான் நான் இதை எழுதுகிறேன். எத்தனை நாட்கள் தான் நாம் சால்ஜாப்பில் காலம் தள்ளமுடியும்? பெண்களை தாழ்த்தும், இழிவு படுத்தும் வன்முறைகளை தடுக்க நாம் என்ன தான் செய்ய வேண்டும்? [பெண்களில் வன்முறை செய்து, கொலைகள் செய்து, நிர்தாக்ஷின்யமாக கொடுமைகள் செய்தவர்களை பற்றி என்னிடம் கேஸ்-ஸ்டடிகள் உளன. ஆனால், விவரம் கிடைப்பது அரிது. கிடைத்த வரை ஆண்: பெண் :: 98 : 02].
I have thrown the guantlet. You do what you like. If in doubt, read my evidence placed before the Verma Commission.
இன்னம்பூரான்

No comments:

Post a Comment