Friday, January 30, 2015

சச்சரவாக ஒரு சர்ச்சை!

சச்சரவாக ஒரு சர்ச்சை!


இன்னம்பூரான்
30 01 2015
1950
இந்திய அரசியல் சாசனத்தின் முகவுரையில், 1950 ல் இருந்தபடியும்,  1976 ல் எமெர்ஜென்சி காலகட்டத்தில் புகுத்தப்பட்ட Secular, Democratic என்ற சொற்களை நீக்கியும் அரசு பிரசுரித்தது பற்றி சச்சரவாக ஒரு சர்ச்சை எழுந்துள்ளது. சொற்களின் முக்கியத்துவம் என்று பார்த்தால், நமது அரசியல் கட்சிகள் பெயரளவில் மட்டுமே Secular. ஜாதிமத சார்பின்மையை ஒழித்துக்கட்டிய அழிச்சாட்டியம் மத்திய/மாநில அரசுகளின் நடவடிக்கையில் வெள்ளிடை மலை. மேற்படி சொற்களை இந்திய அரசியல் சாசனத்தின் முகவுரையில் புகுத்துவது பற்றி 1948ல் விவாதம் செய்த பேராசிரியர் கே.டி.ஷா, சேத் கோவிந்த் தாஸ், டாக்டர். பி.ஆர். அம்பேத்கார், ஹெச்.வி.காமத், கே.ஹனுமந்தையா ஆகியோரின் நாட்டுப்பற்றுப் போற்றத்தக்கது. எனவே, எல்லோரின் கருத்துக்களை நாம் ஆராய்ந்து அறிய வேண்டும். அவர்களில், டாக்டர். பி.ஆர். அம்பேத்கார் ஒரு புகழ் வாய்ந்த சட்டமேதை என்பதை மறக்கலாகாது.மேற்படி சொற்களை இந்திய அரசியல் சாசனத்தின் முகவுரையில் புகுத்த வேண்டும் என்று 1948ல் விவாதம் செய்த பேராசிரியர் கே.டி.ஷாவின் கூற்றுக்களை ஆணித்தரமாக மறுத்து, அந்த சொற்களை நீக்குவதை பரிந்துரை செய்த டாக்டர். பி.ஆர். அம்பேத்கார் கூரியதின் சாராம்சம்:

‘...அரசியல் சாசனம் அரசு நடத்துவது பற்றி மட்டுமே பேசுகிறது. அரசியல் கட்சிகளின் வரத்துப்போக்குகளை அது கணிக்கவில்லை. காலதேசவர்த்தமானங்களை அனுசரித்து மக்கள் தான் அரசு குறிக்கோள், சமுதாய, பொருளியல் கட்டுமானங்கள் ஆகியவை பற்றி அரசியல் சாசனம் பேசுவது ஜனநாயகத்துக்கு உலை வைப்பது ஆகும்... மேலும் அத்தகைய சொற்கள் அலங்கார மொழியாக அமைந்து விடும். அதனால், மக்களுக்கு பயன் யாதுமில்லை...’.  
***
1976
அவசரநிலை என்று அரசியல் சாசனத்தையே உதறி எறிந்த பிரதமர் இந்திரா காந்தியின் ஆணைக்கு கட்டுப்பட்டு அரசியல் சாசனம் 42ம் தடவையாக மாற்ரி அமைக்கப்பட்டது. முகப்பு வரியான ‘A  Constitution  to be living must be growing.’ என்பதைத் தவிஅர மற்ற வரிகள் விளம்பர கோஷங்களாக அமைந்தன. ஜனாதிபதி ஃபக்ருத்தீன் அஹ்மதும், சட்ட இலாக்கா அமைச்சர் ஹெச்.ஆர்.பாரத்வாஜும்  தலையாட்டும் பொம்மைகளாக இயங்கினர். 
***
2015
A  Constitution  to be living must be growing.’ என்ற வரி திரும்பிப்பார்த்து, புன்னகைப் பூத்தது. சர்ச்சையும் சச்சரவானது! CONSTITUENT ASSEMBLY OF INDIA - VOLUME VII
Monday, the 15th November, 1948 & ’THE CONSTITUTION (FORTY-SECOND AMENDMENT) ACT, 1976: Statement of Objects and Reasons’  இரண்டுமே இணைக்கப்பட்டுள்ளன, என்னுடைய குறிப்புகளுடன்.


இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

No comments:

Post a Comment