Tuesday, May 5, 2015

நாளொரு பக்கம் 6

நாளொரு பக்கம் 6
Monday, the 2nd March 2015
அருந்ததிக் கற்பினார் தோளும், திருந்திய
தொல் குடியில் மாண்டார் தொடர்ச்சியும், சொல்லின்
அரில் அகற்றும் கேள்வியார் நட்பும், - இம் மூன்றும்
திரிகடுகம் போலும் மருந்து.
திரிகடுகம் 1
அருந்ததி எழு முனிவருள் ஒருவராகிய வசிஷ்டரின் தர்மப்பத்தினி; கற்புக்கு இலக்கணம்.
மூன்று விண்மீன்களில் நடுவிலிருப்பதான வசிஷ்டர் மீனோடு துணையாய் மின்னும் அவருக்கு பிரபஞ்சமே புகழாரம் சூட்டுகிறது.  அம்மி மிதித்து அருந்ததி பார்த்தல்லவோ திருமணம்.  இள்ங்கோவடிகளின் சிலப்பதிகாரத்தில் கோவலன்

நீல விதானத்து நித்திலப்பூம் பந்தர்க்கீழ்
வானூர் மதியஞ் சகடணைய வானத்துச்
சாலி யொருமீன் தகையாளைக் கோவலன்
மாமுது பார்ப்பான்...
நற்குண நற்செய்கைகளுள்ள பெண்ணை மணஞ்செய்திருப்பது இம்மை மறுமைகளில் நேரிடும் துன்பங்களைத் தீர்த்து இன்பங் கொடுப்பவாதலால் நோயைப் போக்கி நலத்தைக் கொடுக்கும் சுக்கு திப்பிலி மிளகுகளாகிய மருந்து போலும் என்மனார், நல்லாதனார்.

நற்குடியில் பிறப்பதே இறைவனின் கொடுப்பினை. தொன்மையும், மரபும், வம்சாவளி பெருமிதமும் ஒருசேர இருக்கும் குடும்பத்தில் பிறந்து, காலாகாலத்தில் சிறப்புற மாட்சிமை அடைந்தவரின் தொடர்ச்சியே, கூடப்பிறந்த மூலிகை என்க.

அது போலவே, சொற்களில் மாசு அகற்றும் சான்றோரின் நட்பும் அருமருந்தே.

‘நுணங்கிய கேள்விய ரல்லார்' என்ற குறளில் கருத்தை ஒப்பு நோக்குக.

-x-

சித்திரத்துக்கு நன்றி: http://i1.wp.com/www.brahminsnet.com/wp/wp-content/uploads/2015/03/mangalya-dharanam.jpg?resize=300%2C225

No comments:

Post a Comment