Thursday, October 8, 2015

நோபெல் விருது: 2015: 4

நோபெல் விருது: 2015: 4


இன்னம்பூரான்
அக்டோபர் 8, 2015

இன்றைய நோபெல் விருதை இலக்கியத்துக்கும் ஆணிவேரான ‘பாமரகீர்த்திக்கு’
பல்லாயிரம் ஆண்டுகளாக கண்டுகொள்ளப்படாததால் ஓரிடத்தில் பிறந்து பற்பல இடங்களில் வளர்ந்து வரும் பாமரகீர்த்திக்குக் கிடைத்த விருதாகத்தான் பேசப்படுகிறது; ஏற்றுக்கொள்ளப்பட்டது; பாராட்டப்படுகிறது. ஒரே விருதாளரான Svetlana Alexievich பேலரஸ் நாட்டைச் சேர்ந்தவர். கடைசி நிமிடம் வரை உலா வந்த ஹேஷ்யங்களில் என்னுடைய வாக்கு இவருக்குத் தான் இருந்தது. இரட்டிப்பு மகிழ்ச்சி. ரத்னச்சுருக்கமான சுற்றறிக்கை இது தான்;

The Swedish Academy, announcing her win, praised Alexievich’s “polyphonic writings”, describing them as a “monument to suffering and courage in our time”.

அதாவது, பல்லாயிரம் மக்களின் துன்பக்கேணியில் இறங்கி அவர்களின் அச்சமின்மையை நேர்த்தியாகவும், உணர்ச்சி பிரவாஹம் தடையில்லாமல் பெருக்கெடுப்பதை மூலாதாரமாக வைத்து பண்ணிசையில் எழுதியிருக்கிறார்,

விருது வந்தடைந்த செய்தி அவருடைய ஸ்தித பிரதிஞ்ஞத்தை அசைக்கமுடியவில்லை. மகிழ்ச்சி என்றாலும், கலங்கினேன் என்கிறார், Svetlana Alexievich. Ivan Bunin, Boris Pasternak போன்ற விருதாளர்கள், அவர்களுக்கு கொடுக்கப்பட்ட குடைச்சல்கள் அவற்றை நினைத்து வருந்தினார். விருது அளிக்கப்பட்ட செய்தி கிடைத்தபோது, சராசரி மனுஷி ஆன இவர் துணிகளுக்கு இஸ்திரி போட்டுக்கொண்டிருந்தாராம்.

நோபெல் அகாதமி சொல்வதை கேட்போம். 

“கடந்த 30/40 வருடங்களாக சோவியத்/ மாஜி சோவியத் மானிடர்களின் உணர்ச்சி, மனவோட்டம், நிழல் மனவோட்டம் எல்லாவற்றையும், நுட்பங்கள் தவறாமல், பொதுமை மறக்காமல், மானிடத்தின் உள்ளே சென்று, ‘ஆவியின் உள்புகுந்து’ அவர் செய்த பதிவுகள், அதுவும்  Chernobyl விபத்து, ஆஃப்கனிஸ்தானில் ஆட்டம் ஆகியவற்றை தனி மனிதப்பார்வையில் பதிவு செய்திருப்பது மாபெரும் சாதனை.

Svetlana Alexievich சொல்வது: நான் மக்களிடம் சோஷலிசம் பேசவில்லை; என்னுடைய ஆயிரக்கணக்கான பேட்டிகளில், சிறார்களிடமும், பெண்களிடமும், ஆடவர்களிடமும் அன்பு, காதல், பொறாமை, மழலை, முதுமை, இசை, நடனம், சிகை அலங்காரம் ஆகியவை பற்றி துளைத்து, துளைத்து விசாரித்தேன். சராசரி மனிதர்கள் அன்றாடம் மன்றாடும் சிக்கல்கள், அவற்றில் கொழுந்து விட்டெரியும், சுட்டுப்பொசுக்கும் உண்மைகள். 

ஒரு சுட்டெரிக்கும் உண்மையை போட்டு உடைக்க வேண்டும் தாய்மார்களே. Svetlana Alexievich எழுதிய U vojny ne ženskoe lico (War’s Unwomanly Face) என்ற நூல் இரண்டாவது உலக யுத்தத்தில் பங்கெடுத்துக்கொண்ட நூற்றுக்கணக்கான பெண்களை பேட்டி எடுத்ததின் சாராம்சம். குறைந்தது பத்து லக்ஷம் பெண்மணிகள் யுத்தத்தில் பங்கெடுத்தனர். வரலாற்றில் அதை பற்றி சொல்லொன்றும் காணவில்லை. அந்த குறையை மேற்படி நூலில் நீக்கி விட்டார், இவர். அதற்கு இன்னொரு நோபெல் கொடுக்கலாம், மேரி க்யூரிக்குக் கொடுத்தது போல.
-#-
சித்திரத்துக்கு நன்றி: http://i.ndtvimg.com/i/2015-10/svetlana-alexievich_650x400_71444303070.jpg



இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

No comments:

Post a Comment