Tuesday, September 20, 2016

சிவகாமியின் செல்வன் 15

சிவகாமியின் செல்வன் 15

இன்னம்பூரான்
20 09 2016

பெருந்தலைவர் காமராஜரை பற்றி தேடிப்படிக்கும் போதெல்லாம், நாம் அவரிடம் கற்கவேண்டியதை கற்றுக்கொள்ளவில்லை என்ற ஆதங்கம் எழுகிறது. காங்கிரஸ் கட்சியின் எதிர்துருவங்கள் ராஜாஜியும் காமராஜரும், அணுகும் முறையில். இருவரும் தேசபக்தர்கள் தான். மாஜியான காலகட்டத்திலும் அவர்கள் தான் ஒரிஜினல் காங்கிரஸ்காரர்கள். 1950/60 களில் இதெல்லாம் வெளிப்படையாக ஊடகங்களால் விமரசிக்கப்பட்டவை. முதலமைச்சரான காமராஜர் முரண்பாடு கொண்டவர்களை, தன்னைப் பற்றி யார் என்ன சொன்னாலும் உடனடி பதில் சொல்வதில்லை என்ற வழித்தடத்தில் இயங்கினார்.

அரசு இயந்திரம் என்றுமே தானியங்கி. தியாகராய நகரில் இருந்த புகழ் வாய்ந்த ராஜாஜி சேவா சங்கக்கட்டிடத்தை, சிடி இம்ப்ரூவ்மெண்ட் ட்ரஸ்ட் அதிகாரிகள், புதிய கட்டிடம் கட்டுவோம் பேர்வழி என்று, அடியோடு இடித்துத் தரைமட்டம் ஆக்கி விட்டார்கள்.நம்மூர் வாசிகளை தெரியாதா என்ன? இது காமராஜரின் வேலை என்று அடித்துப் பேசிக்கொண்டார்கள்.  சங்கத்தை சேர்ந்த டி.என். சோமசுந்தர நாயரும் மற்றவர்களும் இடிபாடுகளின் படங்களை எடுத்துக்கொண்டி முதல்வரை சந்தித்தார்கள். அவர் 'ஆகட்டும்! பார்க்கலாம்' என்று சொல்லாமல், ' நீங்க போயிட்டு வாங்க. இது ப்த்தி நான் விசாரிக்கிறேன்.' என்றதுடன் நிற்காமல், அந்த தான்தோன்றி அதிகாரிகளை கண்டித்து, அவர்கள் மூலமே ராஜாஜி சேவா சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டிக்கொடுத்தார். சிவகாமி ஆத்தா தன் திருமக்னை 'ராசா' என்றழைத்தது பொருத்தமே.

இந்த நிகழ்வு மற்றொன்றை நினைவு படுத்துகிறது. இரண்டாம் உலகப்போரில் பிரிட்டீஷ் ராயல் விமானப்படை உலகபுகழ் வாய்ந்த கொல்ன் கதீட்ரலை தாக்கி உடைத்து விட்டது, குறி வைத்துத் தாக்காவிடினும். போர் முடிந்த பின்னர், அந்த ராயல் ஏர்ஃபோர்ஸ் ஊழியர்களே சந்தா வசூல் செய்து அந்த கதீட்ரலை மராமத்து செய்து, முன்மாதிரியே கட்டி கொடுத்தனர்.

அந்த பெருந்தன்மையை இழந்து நிற்கிறார்கள், தமிழ் மக்கள், இன்று.

சித்திர்த்துக்கு நன்றி:

No comments:

Post a Comment