Tuesday, October 11, 2016

வம்பும் தும்பும் ~1

வம்பும் தும்பும் ~1


இன்னம்பூரான்
11 10 16
விஜயதசமி

காக்கைக்கு தன் குஞ்சு பொன்குஞ்சு. வண்ணாரப்பேட்டை ஜனார்த்தனன் அதற்கு விதி விலக்கு அல்ல. திருவல்லிக்கேணி கஸ்தூரி பாய் கோஷா ஆஸ்பத்திரியில் பிருந்தா என்ற அவர் இல்லத்தரசி மகப்பேறு பொருட்டு அனுமதிக்கப்பட்டார். தாயும், சேயும் நலம். இருவரையும் பார்க்க வந்த புருஷன் ஜனார்த்தனனை காவலாளர் அனுமதிக்க மறுக்கவே, அவரும் தந்திரசாலியாக செயலாற்றினார். உடனுக்குடன் காசு கொடுத்து வாங்கிய பர்தாவை மாட்டிக்கொண்டு அன்ன நடை போட்டு பிருந்தா தரிசனம் முடித்து விட்டு வெளியே திரும்பும் போது வசமாக மாட்டிக்கொண்டார். எப்போது? செருப்பை மாட்டிக்கொள்ளும் போது ~ ஆண் காலணி! ஷெர்லாக் ஹோம்ஸா வேண்டும்? மாட்டிக்கொண்டார், இந்த துப்படிக்கா பட்டர். 

1950 களில் ஊருக்கு பெரியவர்கள் தேர்தல் விழிப்புணர்ச்சி விவாதம் நடத்திய போது மாட்டிக்கொண்ட துப்படிக்கா பட்டர் பெயர்: கோபால் ரெட்டி. கனகச்சிதமாக, ந்டை, உடை ஆடை பாவனைகள் கொண்ட அந்த காங்கிரஸ்க்காரர் ஒரு ஆன்டி-பெண்ணிய ஜோக் அடித்தார்: ‘ கோஷா போட்டுக்கொண்டு முதலில் வந்த பீகம் மற்றொரு பீகமாகவும் இரு தடவை  வந்து வாக்களித்தார்.' கரகோஷம் அந்த ஶ்ரீநிவாச சாஸ்திரி ஹாலின் கூரையை பிளந்தது. சாவதானமாக எழுந்த திருமதி. நல்லமுத்து ராமமூர்த்தி அவர்கள் வினவியது: “கோபால்!  அந்த நபர் ஆண் இல்லை என்று உமக்கு எப்படி தெரியும்?” ரெட்டிகாரு அசடு வழிந்தார். அவையில் சலனம், மவுனம்.

(தொடரும்)
-#-

பின்குறிப்பு: நண்பர்களர் பலர் பங்கேற்பார்கள். முதற்கண்ணாக திரு. மருமக்கத்தாயனார்  வருகை புரிவார்கள் என்று தம்பட்டம் அடித்தார்கள்.

சித்திரத்துக்கு நன்றி: ttp://3.bp.blogspot.com/-brMq307AgWw/Tbv7Wavb_BI/AAAAAAAAAfw/Pa_hJ_QMJ10/s1600/funnysinger.jpg

இன்னம்பூரான்



No comments:

Post a Comment