Friday, November 4, 2016

வம்பும் தும்பும் ~5





வம்பும் தும்பும் ~5

இன்னம்பூரான்
நவம்பர் 4, 2016

காலம் கெட்டுப்போச்சு. சுயம்புவாக புவனியெல்லாம் பவனி வரும் வம்பும் தும்பும் தேடினால் தான் கிடைக்கும் போல இருக்கிறது. காலையில் நாளிதழ் பிரிக்கவே, (படிக்கிறது அப்றம்) பயமாக இருக்கிறது. பக்கத்துக்குப் பக்கம் கொலை, வன்புணர்வு, கொள்ளை, இத்யாதி.

ஆனாலும், இந்த ‘ அடுத்த வீட்டுக்காரன் நெய்யே! என் பொண்டாட்டி கையே’ என்கிற கோட்பாடு இந்திய பொருளிருட்டல் விவகாரத்தில் பூதாகாரமாக வளைய வருகிறது.  அன்றைக்கு ஆடிட்டர் ஜெனெரல் ‘ஐயோ! அப்பா!’ என்று அடித்துக்கொண்ட போது கேள்வி முறையில்லை. ஓஎன் ஜிசி ஒரு அரசு நிறுவனம். நேரு காலத்தில் கே.டி. மாளவியா என்ற மந்திரி தான் இதனுடைய பிதாமஹன். பர்மா ஷெல், கால்டெக்ஸ், எஸ்ஸோ என்ற மூன்று அமெரிக்க எண்ணை கம்பெனிகள் தான் இந்திய எண்ணை கிணறாளர்கள், ஊற்றிக்கெடுப்பவர்கள். அவர்களின் கொட்டத்தை அடக்கத்தான் ஓஎன்ஜிஸி. அவர்களின் எண்ணைக்கிணறுகளிலிருந்து பாய்ந்த எரிவாயுவை (As much as 11.122 billion cubic metres of ONGC gas had migrated from its Godavari-PML and KG-DWN-98/2 blocks to adjoining KG-D6 of RIL between April 1, 2009 and March 31, 2015. At prevailing prices, the gas was worth Rs 11,000 crore.)
ஸ்வாஹாஹா செய்த வகையில் ரிலையன்ஸ் இண்டெஸ்ட்ரீஸ் அரசுக்கு நியாயமாக கொடுக்கவேண்டியது $ 1.55 பிலியன் என்று கூறிய ஏ.பி.ஷா, கமிட்டி ஆகஸ்ட் 30 அன்று பிரகடனம் செய்தது. ஆகஸ்ட் போச்சு; செப்டம்பர் போச்சு; அக்டோபர் போச்சு. இன்று செய்தி வருகிறது. அந்த கமிட்டி இந்த ‘அப்பாவி’
பரிவர்த்தனையை அந்த தனியார் கம்பெனிக்கு நியாயமற்ற செல்வ வரவு என்கிறது. இல்லை என்று சொல்லமுடியாது என்றாலும், 2009லிருந்து வறண்டு போன கிணறாளும் ஓஎன் ஜீ.ஸி. என்ன தான் செய்து கொண்டிருந்தது?

வாலு தான் போச்சு! தும்பு என் செய்யும்? பார்க்கலாம்.
-#-
சித்திரத்துக்கு நன்றி: 


இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

No comments:

Post a Comment